புல்வாமா தாக்குதல் குறித்து பகிரப்படும் புகைப்படங்கள் உண்மையா? #BBCFactCheck

  • உண்மை பரிசோதிக்கும் குழு
  • பிபிசி
புல்வாமா

பட மூலாதாரம், Social media

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு, காயமடைந்த இந்திய ராணுவ மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்கள் என்று கூறும் பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன

அதில் சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், கிராஃபிக்ஸ் தொழில்நுட்பம் மூலம் ராணுவத்தினர் ரத்த வெள்ளத்தில் இருப்பது போன்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இந்த படங்களுடன் வரும் செய்திகள், புல்வாமா தாக்குதலுக்கு பழிவாங்குதலே ஒரே தீர்வு என்றும் மக்களை தூண்டும் விதமாக உள்ளது.

அந்த புகைப்படத்தின் கீழே பகிரப்பட்ட ஆயிரக்கணக்கான கமெண்டுகள், இந்திய அரசாங்கம் `பாகிஸ்தானை தாக்க வேண்டும்` என்று உள்ளன.

புல்வாமாவில் வியாழனன்று நடைபெற்ற தாக்குதலில், மத்திய ரிசெர்வ் படையை சேர்ந்த 46 பேர் உயிரிழந்தனர் இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் ஈ முகமது என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்தியா இதற்கு, `பாகிஸ்தானை தனிமைப்படுத்துவோம்` என்றும், பாதுகாப்பு படைகள் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் ஆணையிட்டுள்ளது.

ஆனால் சமூக ஊடகங்களிடம், `இதற்கு போர் மட்டுமே ஒரே தீர்வு` என்று பகிரப்பட்டு வருகின்றன.

நமது ஆய்வில் சமூக ஊடகங்களில் பகிரப்படும் பெரும்பாலான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் புல்வாமா தாக்குதலுடன் தொடர்புடையது அல்ல என்று தெரியவந்துள்ளது.

இதில் சிரியா, மாவோயிஸ்ட் தாக்குதல்கள் மற்றும் ரஷ்யாவிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் புல்வாமாவுடன் தொடர்புடையதாக பகிரப்படுகிறது.

காஷ்மீரில் பல தசாப்தங்களில் நடைபெறாத அளவு பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது; அதிகாரிகள் சிலர் மக்கள் மற்றும் ஊடகங்களிடம் இதுகுறித்த புகைப்படங்களை பகிர வேண்டாம் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

புல்வாமா தாக்குதல் கொடூரமான ஒரு தாக்குதல் என்றபோதும் சிலர் சமூக ஊடகங்களில் வேறு போலியான புகைப்படங்களை பகிர்ந்தனர்

ரஷ்ய சிப்பாய்

கையில் ஒரு துப்பாக்கியும் நெஞ்சு முழுக்க கட்டுடன் சிப்பாய் ஒருவர் நடந்து செல்வது போலவும், மக்கள் அவரை பார்ப்பது போன்ற புகைப்படம் புல்வாமா தொடர்பாக வைரலாக பகிரப்பட்ட புகைப்படங்களில் ஒன்று.

அந்த புகைப்படத்தில், ராணுவத்துக்கு தற்போது முழு சுதந்திரம் தரப்பட்டவுடன் தனது சிகிச்சையை பாதியில் நிறுத்தி இவர் பழிவாங்குவதற்காக மருத்துவமனையை விட்டு வந்துவிட்டார். இதுதான் நமது ராணுவத்தினரின் தைரியம். ஜெய் ஹிந்த். வந்தே மாதரம் என்று அந்த புகைப்பட்த்துடன் பகிரப்பட்டுள்ளது.

ஆனால் அந்த புகைப்படம் ரஷ்யாவில் எடுக்கப்பட்டது. யண்டெக்ஸ் என்ற தேடுதல் தளத்தில் இதுகுறித்து சோதித்த போது இது 2004ஆம் ஆண்டில் தீவிரவாதிகள் பள்ளி ஒன்றை கைப்பற்றியபோது எடுக்கப்பட்டது என்று காட்டுகிறது. அந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் பலியாகினர்

சிரியா வீடியோ

வாகனம் ஒன்று சோதனைச் சாவடிக்கு அருகில் வந்து புகையில் மறைந்து போவது போலான வீடியோவும் புல்வாமா தாக்குதல் தொடர்பாக பகிரப்பட்டு வருகிறது.

இந்த வீடியோக்களை பகிரும் குழுக்குள் புல்வாமா தாக்குதல் நடைபெற்ற இடத்துக்கு அருகில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகள் என்று குறிப்பிட்டுள்ளன.

ஆனால் இந்த வீடியோவில் காட்டப்படும் இடமும் சூழலும் காஷ்மீரை போன்று தெரியவில்லை. ரிவர்ஸ் தேடலில் சிரியாவில் சமீபத்தில் நடைபெற்ற கார்குண்டு தாக்குதலின் வீடியோ அது என்று தெரியவந்துள்ளது

பிப்ரவரி 12ஆம் தேதியன்று இந்த வீடியோவை இஸ்ரேல் செய்தித்தாளான ஹசீரீட்ஸ் தனது யூடியூப் பக்கத்தில் பகிருந்துள்ளது.

பட மூலாதாரம், SM VIRAL POST

2017 மாவோயிஸ்ட் தாக்குதல்

தேசிய கொடி போர்த்தப்பட்ட வீரர்களின் உடல்களுக்கு ராணுவத்தினர் மரியாதை செலுத்துவது போன்று சில புகைப்படங்கள் புல்வாமா தொடர்பாக பகிரப்பட்டன

ஆனால் அந்த புகைப்படம் 2017ஆம் ஆண்டு சத்திஸ்கரில் சுக்மா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது நடைபெற்ற தாக்குதலுக்கு பிறகு எடுக்கப்பட்ட படம்

சில உண்மையான புகைப்படங்களுக்கு மத்தியில் இம்மாதிரியான போலி புகைப்படங்களை சிலர் பகிர்ந்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :