புல்வாமா தாக்குதலுக்கு பிறகு அக்ஷய்குமார் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசினாரா? #BBCFactCheck

அக்ஷய்குமார் படத்தின் காப்புரிமை Hindustan Times

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் இந்தியாவில் பயங்கரவாதத்தின் நிலை குறித்து பேசியதாக சமூக வலைதளங்களில் ஒரு காணொளி பகிரப்படுகிறது. #BoycottAkshayKumar என்ற ஹேஷ்டேக்குடன் இந்த காணொளி பகிரப்படுகிறது.

பல்வேறு ட்விட்டர் பயனர்கள் இந்த காணொளியை பகிர்ந்துள்ளார்கள். மேலும் அக்ஷய்குமாரை தேசவிரோதி என்றும் மக்கள் அவரை புறக்கணிக்க வேண்டும் என்றும் எழுதியிருக்கிறார்கள்.

பாகிஸ்தான் தீவிரவாத நாடு அல்ல, இந்தியாவில் தான் தீவிரவாதத்துக்கான கூறுகள் உள்ளன என அக்ஷய்குமார் கூறியதாக அந்த ட்வீட்களில் கூறப்பட்டுள்ளது.

அந்த வைரல் காணொளியில் '' இந்தியாவிலும் பயங்கரவாதம் இருக்கிறது'' என அக்ஷய்குமார் கூறுகிறார்.

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு துன்யா நியூஸ் எனும் பாகிஸ்தான் செய்தி சேனலும் இந்த செய்தியை வெளியிட்டது. அக்ஷய்குமார் பயங்கரவாத நாடுகள் பட்டியலில் பாகிஸ்தானின் பெயரை தவிர்த்திருக்கிறார் என்றும் உலகம் முழுவதும் பயங்கரவாதம் வியாபித்திருக்கிறது என்றும் அந்தச் செய்தி தெரிவிக்கிறது.

நமது விசாரணையில், இந்த காணொளிக்கும் புல்வாமா தாக்குதலுக்கும் எந்த தொடர்புமில்லை என்பது தெரியவந்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

காணொளியின் உண்மைத் தன்மை என்ன?

இந்த காணொளி கடந்த 2015-ம் ஆண்டு 'பேபி' எனும் திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வுடன் தொடர்புடையது. அந்த நிகழ்வில் கலந்து கொண்ட அக்ஷய்குமார் பயங்கரவாதம் குறித்து பேசியிருக்கிறார்.

உண்மையாக அந்த காணொளியில் அக்ஷய்குமார் கூறியது என்னவெனில் '' பயங்கரவாதம் எந்த நாட்டிலும் இல்லை. அதன் கூறுகளே இருக்கின்றன. அவை இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பாரிஸ் மற்றும் பெஷாவரில் இருக்கின்றன. மக்களில் சிலர் பயங்கரவாதத்தை பரப்புகிறார்கள் ஆனால் எந்த நாடும் அதற்கு ஆதரவளிப்பதில்லை'' எனப் பேசியுள்ளார்.

புல்வாமா தாக்குதல் விஷயத்தை பொறுத்தவரையில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்துக்கு ''பாரத் கீ வீர்'' எனும் நிவாரண நிதி திரட்டும் திட்டத்துக்கு மக்கள் தங்களது பங்களிப்பை வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அக்ஷய்குமார் இதுவரை தனது பேச்சு குறித்து தவறாக குறிப்பிடும் ட்வீட்கள் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :