திமுக - காங்கிரஸ் கூட்டணி கடந்து வந்த பாதை: மாங்கொல்லை கூட்டமும், 2ஜி விரிசலும்

திமுக காங்கிரஸ் கூட்டணி - இதுவரை நடந்தது என்ன?

பட மூலாதாரம், Getty Images

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் முடிவாகி உள்ளது. ராகுல்காந்தியுடன், கனிமொழி நடத்திய பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை சென்னையில் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிடுவார் என்று நாளிதழ் செய்திகள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸுக்கு பத்து தொகுதிகள்தானா அல்லது இந்த கூட்டணியில் வேறேதும் கட்சிகள் இணையுமா என்று உறுதியாக தெரியவில்லை.

இதற்கு முன் நடந்த 2004, 2009 நாடாளுமன்ற தேர்தல்களிலும் காங்கிரஸ் திமுக கூட்டணியே நிலவியது. 2014இல் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டது.

அந்த சமயத்தில் எத்தனை தொகுதிகள் காங்கிரஸூக்கு ஒதுக்கப்பட்டன என்று பார்ப்போம்.

நாற்பதுக்கு நாற்பது

2004ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் காங்கிரஸ், பா.ம.க, ம.தி.மு.க, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் இரண்டு இடதுசாரி கட்சிகள் இருந்தன.

மகா கூட்டணியாக இது அப்போது பார்க்கப்பட்டது.

திமுக 16 தொகுதிகளிலும், காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், பாட்டாளி மக்கள் கட்சி 5 தொகுதிகளிலும், மதிமுக 4 தொகுதிகளிலும், இரு இடதுசாரி கட்சிகளுக்கும் தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

புதுச்சேரி பா.மகவுக்கு ஒதுக்கப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images

அந்த தேர்தலில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அந்தக் கூட்டணி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. திமுக மற்றும் பா.ம.க ஐக்கிய முற்போக்கு அரசின் அமைச்சரவையிலும் இடம் பிடித்தன.

ஆட்சி முடிவுக்கு வரும் சமயத்தில் இலங்கையில் வெடித்த உள்நாட்டு போர், தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

மயிலை மாங்கொல்லை கூட்டத்தில் இலங்கை பிரச்னைக்கு தீர்வு எட்டப்படாவிட்டால் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ராஜிநாமா செய்வார்கள் என்று அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி கூறி இருந்தார். ஆனால், அவ்வாறெல்லாம் ராஜிநாமா செய்யவில்லை.

தமிழகம் தழுவிய அளவில் அந்த கூட்டணி மீது அதிருப்தி நிலவியது.

பா.ம.க, மதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறியது.

தொடந்த கூட்டணி

2009 தேர்தலிலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலே திமுக அங்கம் வகித்தது.

பட மூலாதாரம், Getty Images

காங்கிரஸுக்கு 15 தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகளுக்கு 2 தொகுதிகள் திமுகவால் ஒதுக்கப்பட்டன. திமுக 18 தொகுதிகளிலும், காங்கிரஸ் 8 தொகுதிகளிலும் , விடுதலை சிறுத்தைகள் 1 தொகுதியிலும் வென்றது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் அமைச்சரவையில் திமுக இடம்பெற்றது. இந்த சமயத்தில்தான் அப்போது மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த ஆ.ராசா மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆ.ராசா மற்றும் கனிமொழி கைது செய்யப்பட்டனர். ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து திமுக வெளியேறியது.

புதுச்சேரி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டது.

திமுக vs காங்கிரஸ்

2014இல் காங்கிரஸும், அதிமுகவும் கூட்டணி வைக்காமல் தனி தனியே களம் கண்டன. காங்கிரஸ் அனைத்து தொகுதியையும் இழந்தது. திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் புதிய தமிழகம் ஆகியவை இருந்தன. திமுக கூட்டணியும் அனைத்து தொகுதிகளையும் இழந்தது.

இந்தியா எங்களை தாக்கினால் பதிலடி தருவோம் - இம்ரான் கான்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :