ரஃபேல் மறுசீராய்வு மனுவை விசாரிக்க தனி அமர்வு - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்

பட மூலாதாரம், Hindustan Times

படக்குறிப்பு,

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்

ரஃபேல் வழக்கில் தொடுக்கப்பட்டுள்ள மறு சீராய்வு மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்றம் நிச்சயம் ஏதேனும் செய்யும் என்று தெரிவித்துள்ளது.

மறு சீராய்வு மனுக்களை விசாரிக்க தனி அமர்வை உருவாக்க இருப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ரஃபேல் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோரும் மனுக்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார். அதற்கு அந்த அமர்வு இந்த சீராய்வு மனுக்கள் குறித்து உச்ச நீதிமன்றம் எதேனும் செய்யும் என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய முத்த நீதிமன்ற செய்தியாளர் சுசித்ரா மொஹந்தி, சீராய்வு மனுக்களை விசாரிக்க தனி அமர்வை உருவாக்க இருப்பதால் இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள ஏதாவது செய்யப்படும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கூறியாதாக தெரிவித்துள்ளார்.

இந்த மறு சீராய்வு மனு பிரஷாந்த் பூஷண், அருண் ஷோரி மற்றும் யஸ்வந்த் சின்ஹா ஆகியோரால் ரஃபேல் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 14ஆம் தேதி ரஃபேல் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் பல்வேறு பிழைகள் இருப்பதாக அந்த மறுசீராய்வு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஃபேல் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த அதிகாரபூர்வமற்ற தகவல்களை கேட்பதற்கு கூட மனுதாரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாததால் அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று பூஷண் தனது மறுசீராய்வு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

பட மூலாதாரம், Hindustan Times

படக்குறிப்பு,

மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண்

இதற்கு முன்னர், பிரான்ஸ் நாட்டிடம் இருந்து இந்தியா 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க மேற்கொண்டிருக்கும் ஒப்பந்தம் குறித்து உச்சநீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான மூன்று நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு தள்ளுபடி செய்துள்ளது.

ரஃபேல் ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தும் விதத்தில் தங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனத்தை பிரான்சின் டஸ்ஸோ நிறுவனத்தின் இந்தியக் கூட்டாளியாக சேர்க்கப்பட்டதில் முறைகேடு எதுவும் இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை என நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

"பாதுகாப்பு அதிகாரிகளுடன் நாங்கள் இதுகுறித்து பேசினோம். இந்த ஒப்பந்தம் பற்றி முடிவுகள் எடுக்கப்பட்டது திருப்திகரமாக உள்ளது," என்றும் "போர் விமானங்களை அரசு வாங்குவது குறித்த முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது," என்றும் இன்றைய தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

ரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம்சாட்டி வந்த நிலையில் இந்தத் தீர்ப்பு நரேந்திர மோதி தலைமையிலான மத்திய அரசுக்கு சாதகமானதாக அமைந்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :