உலக தாய்மொழி தினம்: நவீன இளைஞர்கள் தமிழ் கற்பது ஏன்?

இளம் பெண்கள்

பட மூலாதாரம், MANPREET ROMANA/GETTY IMAGES

தமிழகத்தில் உள்ள எண்ணற்ற அடித்தட்டு மக்களின் குழந்தைகளுக்கும், கிராமப் பின்னணியில் இருந்துவரும் மாணவர்களுக்கும், அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் வழங்கப்படும் தமிழ் பட்டப்படிப்பு நம்பிக்கை அளிக்கும் பாடமாக இருப்பதாக தமிழ் பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

உலக தாய்மொழி தினத்தன்று (பிப்ரவரி21), தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் தமிழ் மொழியை மூன்று ஆண்டு பட்டப்படிப்பாக மாணவர்கள் தேர்ந்தேடுப்பதற்கான காரணங்கள் எவை என இருபது ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் பேராசிரியர்களாக பணிபுரியும் நிபுணர்களிடம் கேட்டபோது, எளிமையான குடும்பங்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு ஏற்ற கல்வியாக தமிழ் பட்டப்படிப்பு இருப்பதாக கூறுகின்றனர்.

குறிப்பாக, கிராமப்பகுதிகளில் இருந்து மேற்படிப்பு படிக்க வரும் பல பெண்களுக்கும் தமிழ் பட்டப்படிப்பு இயல்பான தேர்வாக அமைவதாக கூறுகிறார் எழுத்தாளர் மற்றும் பேராசிரியர் வீ.அரசு.

பட மூலாதாரம், RAVEENDRAN

முப்பது ஆண்டுகளில் பல நூறு மாணவர்களுக்கு தமிழ் கற்பித்த அனுபவத்தில் இருந்து பேசிய அவர், "பி.காம், கணினி அறிவியல் மற்றும் பிற படிப்புகளில் சேர அதிக போட்டி இருக்கும்.

தமிழ்த்துறையில் சேர போட்டி குறைவு. பெண்கள் பலருக்கும் படிப்பதற்கான அனுமதி கிடைப்பதே பெரிய வாய்ப்பாக இருப்பதால், அதிக செலவில்லாமல் படிக்கும் பட்டப்படிப்பாக தமிழ் அமைந்துவிடுகிறது,'' என்றார் அரசு.

மேலும், குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு தமிழ் ஆசிரியர் வேலை கிடைப்பதற்கான ஒரு வழியாக பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பாக தமிழ் கல்வி இருப்பதும் ஒரு முக்கிய காரணம் என்கிறார்.

''எழ்மையான குடும்பங்களில் இருந்து வரும் பிள்ளைகளுக்கு ஆயிரக்கணக்கில் பணம் செலுத்தி, பொறியியல் அல்லது பிற அறிவியல் துறைகளில் சேரமுடியாத நிலையில், தமிழ் படித்துவிட்டால், நிச்சயம் ஆசிரியர் பணி கிடைக்கும் என்ற நம்பிக்கை இன்றளவும் உள்ளது,'' என்று கூறுகிறார் பேராசிரியர் அரசு.

பட மூலாதாரம், SAJJAD HUSSAIN

ராணி மேரி கல்லூரியில் தமிழ்த்துறையின் இணை பேராசிரியராகப் பணிபுரியும் பத்மினி, அரசு வேலைகளுக்கு போட்டியிட தமிழ் பட்டப்படிப்பு படிப்பது ஒரு வழி என்று மாணவிகள் நம்புகிறார்கள் என்கிறார்.

''இந்திய ஆட்சிப்பணிக்கான தேர்வு மற்றும் தமிழக அரசு நடத்தும் தேர்வுகளில் போட்டியிட தமிழ் பட்டப்படிப்பு பெரிதும் உதவுவதாக மாணவிகள் கூறுகிறார்கள். வரலாறு, புவியியல் போன்ற பாடங்களைத் தேர்வு செய்வது போல, தமிழை தேர்வு செய்ய, மூன்று ஆண்டு பட்டப்படிப்பு படிப்பது ஒரு எளிய முறையாக இருப்பதாக எண்ணுகிறார்கள்,'' என்று கூறுகிறார் பத்மினி.

''பட்டப்படிப்பு படிக்கும் காலத்திலேயே அரசுத்தேர்வுக்கு தயாராக தமிழ் படிப்பு உதவியாக உள்ளது என்றும் மாணவிகள் என்னிடம் கூறியதுண்டு. மேலும் அதிக செலவு இல்லாமல் பட்டப்படிப்பு படித்துமுடிக்க பல ஆயிரம் மாணவிகளுக்கும் ஏற்ற படிப்பாக தமிழ் படிப்பு இருக்கிறது என்கிறார் அவர்.

போட்டித் தேர்வுகளில் தமிழ் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு சலுகை தந்தால் மேலும் பலர் தமிழ் பாடத்தை தேர்வு செய்வார்கள் என்றும் அவர் கூறினார்.

டிஜிட்டல் கல்வியில் கலக்கும் அரசு பள்ளிகள். ஆனால், அது போதுமா?

காணொளிக் குறிப்பு,

டிஜிட்டல் கல்வியில் கலக்கும் அரசு பள்ளிகள். ஆனால், அது போதுமா?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :