"பாலியல் குற்றச்சாட்டுகளை முறையாக கையாண்டார் கார்தினல் ஓஸ்வால்ட்"

கார்தினல் ஆஸ்வால்ட் கிரேசியஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கார்தினல் ஆஸ்வால்ட் கிரேசியஸ்

கார்தினல் ஒருவர் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களின் விவகாரங்களை முறையாகக் கையாளவில்லை என்று பிபிசியில் வெளியாகியிருந்த செய்தி தொடர்பாக, இந்திய கத்தோலிக்க திருச்சபை தமது தரப்பை வாதங்களை வெளியிட்டுள்ளது.

'தம்மிடம் வந்த பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளை சரியாக கையாளவில்லை என்று கார்தினல் ஓஸ்வால்ட் கிராசியஸ் வியாழன்று ஒப்புக்கொண்டிருந்தார்.

கத்தோலிக்க தேவாலயங்களில் ஒன்றின் மிக மூத்தவரான மும்பை கார்தினல் ஓஸ்வால்ட் கிராசியஸ் அடுத்த போப் ஆண்டவராக வாய்ப்புள்ளவராக கூறப்படுகிது.

பாலியல் துஷ்ப்பிரயோக குற்றச்சாட்டுகளை அவரிடம் தெரிவித்தபோது கார்தினல் ஓஸ்வால்ட் கிராசியஸ் அவற்றுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்டவர்களும் அவர்களை ஆதரிப்பவர்களும் குற்றம்சாட்டுகின்றனர்.

2015இல் மும்பை பாதிரியார் ஒருவரால் ஒரு சிறுவன் பாலியல் வன்முறைக்கு உள்ளான குற்றச்சாட்டு தொடர்பாக, அந்த சிறுவனும் அவனது குடும்பமும் விடுத்த வேண்டுகோளை ஏற்று ஓஸ்வால்ட் கிராசியஸ் அவர்களை சந்தித்தார் என்று மும்பை மறைமாவட்டம் சார்பில் பிபிசிக்கு அனுப்பப்பட்டுள்ள பதிலில் கூறப்பட்டுள்ளது.

அந்தப் பாதிரியார் தம் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தபோதும் கார்தினல் ஓஸ்வால்ட் கிராசியஸ் அவரை பதவியில் இருந்து நீக்கி, அடுத்த நாள் ஜெபக்கூட்டத்தில் கலந்துகொள்ளவும் அனுமதியளிக்கவில்லை என்று அந்த பதிலில் கூறப்பட்டுள்ளது.

கார்தினல் ஓஸ்வால்ட் கிராசியஸ் பேராயரிடம் அந்தக் குடும்பத்துடன் தொடர்பில் இருக்குமாறு கூறியபின்தான் ரோம் கிளம்பினார் என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

பின்னர் திருச்சபை சார்பில் அந்தக் குடும்பத்துக்கு உதவ முன்வந்தும் அதை அவர்கள் மறுத்துவிட்டதாகவும் பிபிசி இடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

வத்திக்கானில் நடக்கும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் குறித்த மாநாட்டை ஒருங்கிணைக்கும் நால்வரில் கார்தினல் ஓஸ்வால்ட் கிராசியஸ் ஒருவராவார்.

இந்த பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் கத்தோலிக்க திருச்சபை நவீன காலங்களில் எதிர்கொண்ட நெருக்கடிகளில் முக்கியமானதாக கருதப்படுகிறது.

உலகம் முழுதும் கத்தோலிக்க திருச்சபையின் மீது, பல பாலியல் குற்றச்சாட்டுகள் கடந்த ஆண்டு வெளியாகின.

ஐரோப்பா, ஆஸ்திரேலியா, வட மற்றும் தென் அமெரிக்க கண்டங்களில் அந்தக் குற்றச்சாட்டுகள் பெரும் செய்திகளாகின. எனினும் ஆசிய நாடுகளில் இது அவ்வளவாக அறியப்படவில்லை.

இந்தியா போன்ற நாடுகளில் பாலியல் குற்றங்களை வெளியில் சொல்வதில் தயக்கம் நிலவுகிறது.

பாதிரியார்களின் பாலியல் துஷ்பிரயோகங்கள் குறித்து வெளியே சொல்ல அச்சமான சூழல் நிலவுவதாக இந்திய கத்தோலிக்கர்கள் கூறுகின்றனர்.

துணிச்சலாக வெளியில் சொன்னவர்களும் பல இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

புல்வாமா தாக்குதல் - மோதி எப்படியெல்லாம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கலாம்?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :