வெளியேற்றப்படும் நிலையில் பழங்குடிகள்: யார் மீது பிழை?

பழங்குடிகள் படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பழங்குடிகள்

வரலாற்று ஆசிரியர்களின் பார்வையில் சொல்ல வேண்டுமானால் இந்தியாவில் உள்ள பத்து கோடி பழங்குடிகள் மறைக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினர். இடஒதுக்கீடு உள்ளிட்ட உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தாலும், தாதுவளமிக்க மாநிலத்தில் வசித்தாலும் அவர்கள் வாழ்வாதாரத்திற்காக சிரமப்படுக்கிறார்கள்.

ஒரு கணக்கெடுப்பின்படி 40 லட்சத்திற்கும் மேலான பழங்குடிகள் பாதுக்காக்கப்பட்ட வனப் பகுதியில் வசிக்கிறார்கள். இந்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பது இந்திய நிலபரப்பில் 5 சதவீதம்.

இந்த 5 சதவீத பகுதியில்தான் 500 வன உயிர் சரணாலயங்களும், 90 தேசிய பூங்காக்களும் உள்ளன.

2006ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வன உரிமை சட்டம், டிசம்பர் 2005ஆம் ஆண்டுக்கு முன்னதாக மூன்று தலைமுறைகளாக வனத்தில் வாழும் பழங்குடிகளுக்கும், மக்களுக்கும் அந்த நிலத்தின் மீது உரிமையை வழங்குகிறது.

வெளியேறுங்கள்

இப்போது உச்சநீதிமன்ற தீர்ப்பு வனத்தில் வாழும் கோடிக்கணக்கான மக்களை வெளியேற சொல்கிறது. 17 மாநிலங்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் இவ்வாறான தீர்ப்பை வழங்கி உள்ளது.

பல தலைமுறைகளாக வனத்தில் வாழ்கிறோம் என்று உரிமை கோருபவர்களிடம் மூன்று கட்ட பரிசோதனையை அந்தந்த மாநில அரசுகள் நடத்தி இருக்கின்றன.

படத்தின் காப்புரிமை AFP

அதில் 18 லட்சம் கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளன. ஏறத்தாழ 72,000 சதுர கிலோமீட்டரில் வசிக்கும் அந்த மக்கள் நில உரிமை வழங்கப்பட்டிருக்கிறது. இந்த நிலபரப்பானது அசாமின் மொத்த நிலபரப்பிற்கு ஒப்பானது.

ஆனால், மில்லியன் கணக்கான மக்கள் விடுத்த நில உரிமைக்கான கோரிக்கை புறந்தள்ளப்பட்டது.

இது குறித்து விவரிக்கும் பத்திரிகையாளர் நிதின் சேத்தி, "சுதந்திர இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய சட்டப்பூர்வமான பழங்குடிகள் வெளியேற்றம் இது" என்கிறார்.

கானுயிரை காப்பாற்றுங்கள்

இவர்களின் பார்வை இவ்வாறாக இருக்கிறதென்றால், கானுயிர் செயற்பாட்டாளர்களின் கோரிக்கை வேறு விதமாக இருக்கிறது.

நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்த கானுயிர் தொடர்பாக செயல்படும் குழுக்கள், காடுகள் அத்துமீறி ஆக்கிரமிக்கப்படுவதால் கானுயிர்களின் வாழ்வு அச்சுறுத்தலுக்கு உள்ளாவதாக தெரிவிக்கின்றனர்.

காடுகளுக்குள் மனிதர்கள் அனுமதிக்கப்படுவதால் கானுயிர்களின் வாழ்விடம் அழிக்கப்படுவதாக கூறுகிறார்கள் அவர்கள்.

இந்த வழக்கில் மனுதாரர்களில் ஒருவரான ஒயில்ட் லைஃப் அறகட்டளையை சேர்ந்த பிரவீண் பார்கவ், "முன்பே உள்ள நில உரிமை தொடர்பானதுதான் அந்த சட்டம். அது நிலத்தை விநியோகிப்பது தொடர்பான சட்டம் அல்ல" என்கிறார்.

பிழை செய்கிறீர்கள்

அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பிழை நடந்திருப்பதாக கூறுகிறார்கள் பழங்குடி மக்களுக்காக பணி செய்யும் செயற்பாட்டாளர்கள்.

அவர்கள் சூழலியலாளர்களையும், கானுயிர் செயல்பாட்டு குழுக்களையும் இந்த விவகாரத்தில் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

படத்தின் காப்புரிமை AFP

சர்வைவல் மற்றும் டிக்னிட்டி பிரசார குழு, "நியாயமாக பல கோரிக்கைகள் தவறுதலாக மறுக்கப்பட்டிருக்கிறது" என்கிறது.

மேலும் அவர்கள் இதனை சரியாக கையாளவில்லையென நரேந்திர மோதி அரசை குற்றஞ்சாட்டுகிறார்கள்.

இந்த தீர்ப்பானது வனத்தில் வசிக்கும் மக்களை துன்புறுத்த வழிவகை செய்யும் என்றும் அச்சம் தெரிவிக்கிறார்கள்.

ஜூலை 27ஆம் தேதிக்குள் வெளியேற்ற வேண்டும் என்கிறது அந்த தீர்ப்பு. இது மத்திய பிரதேசம், கர்நாடகா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து ஆய்வாளர் சி. ஆர் பிஜோய், "2002 மற்றும் 2004ஆம் ஆண்டில் இது போன்று ஒரு வெளியேற்ற நடவடிக்கை நடந்துள்ளது. எறத்தாழ 30,000 மக்கள் காடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள்"

இதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் கிராமங்களுக்கு தீ வைக்கப்பட்டது, வீடுகள் நாசம் செய்யப்பட்டது, போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பலர் மரணித்துள்ளனர்.

பிஜோய், "சாதாரண ஒரு சட்டத்தின் மூலம் காட்டில் வசிப்பவர்களும், பிற பழங்குடிகளும் ஆக்கிரமிப்பாளராக ஆகிவிடுகிறார்கள்" என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: