சவால்விட்ட வாழ்க்கை - சாதித்துக்காட்டிய ஜெகதீஷ்

சவால்விட்ட வாழ்க்கை - சாதித்துக்காட்டிய ஜெகதீஷ்

ஜெகதீஷ் கோவையில் வசிக்கிறார். 27 வயதான இவருக்கு பிறப்பு முதலே முதுகுத் தண்டுவடத்தில் ஏற்பட்ட குறைபாட்டால் நடக்கவோ, தனியாக இயங்கவோ இயலாது.

சிறப்பு பள்ளியில் 10ம் வகுப்பு வரை படித்த இவர் தனது வாசிப்பு பழக்கத்தால் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் சிறப்பாக எழுதக்கூடியவர். தனியார் நிறுவனம் ஒன்றில் வலைத்தள வடிவமைப்பு மேற்பார்வையாளராக இருக்கிறார்.

மேலும் இணையம் சார்ந்த பல வேலைகளை செய்து கொண்டிருக்கிறார். 10ம் வகுப்பு முடித்த பிறகு , மேற்படிப்புக்கு செல்வது உடல் ரீதியாக இயலாது என்பதால், தனது எதிர்காலம் கணினிதான் என தேர்ந்தெடுத்த இவர் , தனது தீராத தேடலின் மூலம் நிறைய தகவல்களைக் கற்றுக் கொண்டு தனக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டார்.

வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடப்பது பிடிக்காமல்சமூகம் சார்ந்த பல நிகழ்வுகளுக்கு செல்ல ஆரம்பித்தார் , பொது நிகழ்வுகளில் மாற்றுத் திறனாளிகள் அதிகம் கலந்து கொள்வதில்லை என்பதை உணர்ந்த இவர் , தன்னைப் போல இருக்கும் சக நண்பர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக பல செயல்களை முன்னெடுத்து வருகிறார்.

எல்லா மனிதர்களும் உற்சாகமாக வாழ வேண்டும், எதற்காகவும் மனம் தளர்ந்து விடாமல் நம்பிக்கையோடு தொடர்ந்து இயங்கினால் வெற்றி அடையலாம் என்கிறார் ஜெகதீஷ்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :