மக்களவைத் தேர்தல் 2019: தொழில்துறை வளர்ச்சி குறித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதா? BBC Reality Check

 • வினீத் கரே
 • பிபிசி உண்மை சரிபார்க்கும் குழு
மோதியின் மேக் இன் இந்தியா லட்சிய திட்டத்தின் உண்மை நிலை என்ன?

இந்தியாவின் உற்பத்தித்துறைக்கு வளர்ச்சியை ஏற்படுத்த பிரதமர் மோதி, லட்சியத் திட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.

2025 ஆம் ஆண்டிற்குள் பொருளாதாரத்தின் ஒரு காலாண்டு உற்பத்தியின் பங்களிப்பை உயர்த்துவதாக அவர் உறுதியளித்திருக்கிறார்.

மோதி அளித்த இந்த வாக்குறுதி குறித்து ஒரு முடிவுக்கு வருவது தற்போது மிக சீக்கரம் என்றாலும்கூட, இந்த இலக்கை அடைய என்ன செய்யப்பட்டுள்ளது என்பது பற்றி பிபிசி ரியாலிட்டி செக் ஆய்வு செய்தது.

"மேக் இன் இந்தியா"

2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மேக் இன் இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோதி, 2025 ஆம் ஆண்டுக்குள் உற்பத்தி துறையின் பங்களிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25% ஆக உயரும் என்று உறுதியளித்திருந்தார்.

இந்த இலக்கை அடைய அரசாங்கம் வகுத்திருந்த வழிகள்:

 • குறிப்பிட்ட துறைகளை இலக்காக வைத்தல்
 • ஏற்கனவே இருக்கும் நிறுவனங்களுக்கு ஆதரவு அளித்தல்
 • வெளிநாட்டு முதலீடுகளை கவர்தல்

பட மூலாதாரம், RAVEENDRAN

ஆனால், இத்திட்டத்தை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்திருந்தார்.

2017ஆம் ஆண்டு வரை, உற்பத்தித்துறையின் பங்களிப்பு 15 சதவீதத்திற்கு குறைவாக நிலையாக இருந்து வந்தது என்று உலக வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன. இலக்கை அடைய இது குறைவான எண்ணிக்கையாக இருந்தாலும், முன்னேற்றத்திற்கான சிறு அறிகுறிகள் தென்படுகின்றன.

வங்கி, சில்லறை விற்பனை, நிதி மற்றும் தொழில்முறை போன்ற சேவைகள், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 49 சதவீதம் ஆகும்.

ஊக்குவிக்கும் அறிகுறிகள்

தொழில் வளர்ச்சி மேம்பட்டு வருவதற்கான அறிகுறிகளை காண்பிக்க சமீபத்திய தரவுகளை அரசாங்கம் சுட்டிக்காட்டி வந்தது.

2017 - 18, 2018 - 19ஆம் ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், உற்பத்தித்துறையில் 13 சதவீதம் வளர்ச்சி உள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டுகிறது. மேக் இன் இந்தியா திட்டத்தின் போக்கு குறித்து வெளியிடப்பட்ட சமீபத்திய பிரசுரத்தை வைத்தே அரசு இவ்வாறு கூறுகிறது.

2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த முதலாம் ஆண்டில், வெளிநாட்டு முதலீட்டின் அளவும் அதிகமாகியது.

எனினும் சமீபத்தில், இது குறைந்துவிட்டது. மேலும், வெளிநாட்டு முதலீடுகளின் பெரும்பாலான பங்கு, உற்பத்தித் துறைக்கு அல்லாமல் சேவைத்துறைக்கு செல்வதாக அரசு தரவுகள் கூறுகின்றன.

"மேக் இன் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இது சிறிதளவிலான முன்னேற்றத்தை மட்டுமே கண்டுள்ளது என்கிறார்" டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பிஸ்வஜித் தர்.

பட மூலாதாரம், Getty Images

புதிய பிரச்சனையல்ல

இந்திய பொருளாதாரத்தை தொழிற்துறையை நோக்கி நகர்த்த போராடியது பாஜக அரசு மட்டுமல்ல. முந்தைய காங்கிரஸ் அரசும், அதற்கு முந்தைய அரசுகளும் நடவடிக்கை எடுத்தும், பொருளாதார வெளியீட்டில், உற்பத்தியின் பங்கு நிலையானதாகவோ அல்லது கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக சற்று வீழ்ந்தோ இருக்கிறது.

கடந்த சில தசாப்தங்களாக, உற்பத்தித்துறைக்கு 25 சதவீதம் பங்கை ஒதுக்கும் வழக்கம் இருந்து வந்தது. ஆனால், இதை அடைவதற்கு அருகில்கூட யாரும் வந்ததில்லை.

சீனா, கொரியா, ஜப்பான் போன்ற ஆசியாவின் மற்ற நாடுகளின் பொருளாதாரங்களை பார்த்தால், பொருளாதார செயல்திறனின் விகிதத்தின் ஒரு பகுதியாக, உற்பத்தி வெளியீட்டின் அதிக பங்குகளை அடைந்து வெற்றி பெற்றிருக்கின்றன.

இதில் குறிப்பாக சீனா, உற்பத்தித்துறையில் அதிகளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. 2002 முதல் 2009ஆம் ஆண்டுவரை ஒவ்வொரு ஆண்டும் வேலைவாய்ப்பு அதிகரித்து வந்துள்ளது.

எனினும், இந்த ஒப்பீடுகள் உதவிகரமானதாக இருக்காது என்று சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

"சீனா தனது பொருளாதார மாற்றத்தை தொடங்கியபோது, மிகவும் பரந்த அடிப்படையிலான மற்றும் படித்த பணியாளர்களை வைத்து மேற்கொண்டது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியம்" என்கிறார் லண்டன் பொருளியியல் பள்ளியின் ஸ்வாதி திங்ரா.

"அதே நேரத்தில் இந்தியாவை பார்த்தால், பலமான காலங்களிலும் கூட, உற்பத்தித்துறையில் வேலைவாய்ப்பின் வளர்ச்சி இல்லாமல் இருந்துள்ளது" என்று அவர் மேலும் கூறுகிறார்.

உற்பத்தித்துறையில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவது என்பது மேக் இன் இந்தியா திட்டத்தின் ஒரு குறிக்கோள் என்றால், அது நடப்பது போல தெரியவில்லை.

முயற்சிகள்

இந்த குறிப்பிட்ட துறைகளில், தற்போதைய அரசாங்கம் முன்னேற்றத்தை அடைய விரும்புகிறது:

அதிக ஆயுதங்கள் ஏற்றுமதி மற்றும் அதிக பாதுகாப்பு ஆயுதங்களின் உற்பத்தி

 • பயோடெக் துறையில் கணிசமான முதலீடு
 • புதிய ரசாயன மற்றும் பிளாஸ்டிக் அலைகள்
 • 2018ஆம் ஆணடிற்கான தரவரிசை பட்டியலில் இந்தியா முன்னேறி வருவதை

வருடாந்திர உலக வங்கியின் வியாபார அறிக்கை கூறுவதையும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

மற்ற முன்னேற்றத்திற்கான அறிகுறிகளும் தெரிகின்றன. உதாரணமாக, ஆட்டோமொபைல் துறையில் இந்தியா முக்கிய நபராக முன்னேறி வருகிறது.

ஆனால், தனிப்பட்ட நிறுவனங்கள் விரிவாக்கம் செய்ய முயற்சிக்கும்போது, சில பிரச்சனைகைளும் இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது.

பயோ டெக்னாலஜி, ரசாயணங்கள், மொபைல் தொலைதொடர்புகள் மற்றும் ஜவுளித்துறைகளில் உள்ள மூத்த நபர்களிடம் பிபிசி பேசியது.

அரசாங்கத்தின் கொள்கை ஓரளவிற்கு உதவுவதாக சிலர் கூறினாலும், உற்பத்தித்துறையில் இருக்கும் முக்கிய பிரச்சனையை அவர்கள் குறிப்பிட்டனர்:

 • அரசுத்துறைகளுக்குள் ஒருங்கிணைப்பு இல்லாதது
 • சிக்கலான வரி மற்றும் ஒழுங்குமுறை
 • பல நிலைகளில் இருக்கும் ஊழல்கள்
 • தொழில் சட்டங்களில் கட்டுப்பாடு மற்றும் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை
 • உண்மையான கண்டுபிடிப்பு மற்றும் திறமைகள் இல்லாதது.

இது உற்பத்தியை பற்றியது மட்டுமல்ல

"அடுத்த ஐந்திலிருந்து ஏழு ஆண்டுகளுக்குள் உற்பத்தி அதிகரிக்கும் என்பது சாத்தியமற்றது" என்கிறார் கண்காணிப்பு ஆய்வு நிறுவனத்தின் அபிஜித் முகோபாத்யாய்.

"உற்பத்தித்துறை, பொருளாதாரத்தின் இயந்திரமாக இருக்க அதிக காலம் எடுப்பதோடு, நிலையான முயற்சியும் தேவை" என்று மேலும் அவர் கூறுகிறார்.

உற்பத்தித்துறையாலோ அல்லது அதுவால் இல்லாமலையோ, உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளதாரங்களில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது.

2019ஆம் ஆண்டு 7.6% அளவிற்கும் மற்றும் அதற்கு அடுத்தாண்டில் 7.4% அளவிற்கும் இந்திய பொருளாதாரம் வளரும் என்று சமீபத்திய ஜநா அறிக்கை கணித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: