காஷ்மீர் கதை: இந்தியா பாகிஸ்தான் பிரச்சனை - என்னவெல்லாம் நடந்தது? #TimelineStory

காஷ்மீர் கதை: இந்தியா பாகிஸ்தான் பிரச்சனை - என்னவெல்லாம் நடந்தது?

பட மூலாதாரம், Getty Images

இந்தியா பாகிஸ்தான் போர் என்பது காஷ்மீருக்காக அல்லது காஷ்மீர் விவகாரத்தை சுற்றியே நடந்திருக்கிறது. இந்த தருணத்தில் காஷ்மீருக்காக காஷ்மீரிலும், பிற பகுதிகளிலும் நடந்த சண்டை மற்றும் பயங்கரவாத சம்பவங்களை தெரிந்து கொள்வோம்.

ஒரு டைம்லானாக காஷ்மீரின் கதை...

அக்டோபர் 1947: இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே முதல் போர் இரண்டு நாடுகளும் சுதந்திரம் பெற்ற இரண்டு மாதங்களில், காஷ்மீருக்காக தொடங்கியது.

ஆகஸ்ட் 1965: காஷ்மீருக்காக மீண்டும் ஒரு போர் வெடித்தது. இது 22 நாட்கள் நடந்தது.

இந்த தாக்குதல் குறித்து விரிவாக படிக்க:இந்தியா - பாகிஸ்தான்: 22 நாள் போரில் வென்றது யார்?

பட மூலாதாரம், Getty Images

டிசம்பர் 1971: இந்தியா கிழக்கு பாகிஸ்தானிற்குள் ஊடுருவியது. இஸ்லாமாபாத் அதிகாரத்திற்கு எதிராகவும், சுதந்திரத்திற்காகவும் சண்டையிட்ட அம்மக்களுக்கு ஆதரவாக இந்தியா களம் இறங்கி வங்கதேசம் என நாடு உதயமாக உதவியது. இந்தியா விமான படை பாகிஸ்தானிற்குள் புகுந்து விமான தாக்குதல் நடத்தியது. வங்கதேசம் என்ற நாடு உருவானவுடன் போர் முடிவுக்கு வந்தது.

1989: காஷ்மீர் பள்ளதாக்கில் இந்திய ஆட்சி நடைபெறுவதற்கு எதிராக ஆயுதமேந்திய குழுக்கள் போராட தொடங்கின.

பிப்ரவரி 1999: இந்திய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயி பேருந்தில் லாஹூர் சென்று, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபை சந்தித்தார். ஒரு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுதிட்டார்.

பட மூலாதாரம், WWW.BHARATRAKSHAK.COM

மே 1999: பாகிஸ்தான் படையும், ஆயுதமேந்திய குழுக்களும் கார்கில் பகுதியில் இருந்த இந்திய படை முகாம்களை ஆக்கிரமித்தன.

மே 2001: இந்திய பிரதமர் வாஜ்பேயியும், பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷ்ரஃப்பும் உத்தர பிரதேசத்தில் உள்ள ஆக்ராவில் சந்தித்துக்கொண்டனர். ஆனால், எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.

அக்டோபர் 2001: ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீர் சட்டமன்றத்தில் நடந்த தாக்குதலில் 38 சாமான்ய மக்கள் கொல்லப்பட்டனர்.

13 டிசம்பர் 2001: இந்திய நாடாளுமன்றத்தில் நடந்த தாக்குதலில் 14 பேர் பலியானார்கள்.

பிப்ரவரி 2007: இந்தியா பாகிஸ்தான் இடையே ஓடிய தொடர்வண்டியில் குண்டு வெடித்ததில் 68 பேர் கொல்லப்பட்டனர்.

26 நவம்பர் 2008: மும்பை ரயில் நிலையம், நட்சத்திர ஓட்டல், யூத கலாசார மையம் ஆகியவற்றில் நடந்த 60 மணி நேர சண்டையில் 166 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானில் உள்ள லக்‌ஷர் இ தொய்பா இந்த தாக்குதலுக்கு பின்னால் இருப்பதால இந்தியா குற்றஞ்சாட்டியது.

ஜனவரி 2016: பதான்கோட்டில் நடந்த தாக்குதலில் 7 இந்திய படையினரும், 6 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

பட மூலாதாரம், KAISER TUFAIL

18 செப்டம்பர் 2016: இந்திய கட்டுப்பாட்டு காஷ்மீரில் உள்ள உரி ராணுவ முகாமில் கிளர்ச்சியாளர்கள் தாக்கியதில் 19 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

30 செப்டம்பர் 2016: பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்தியா கூறியது. அதனை பாகிஸ்தான் மறுத்தது.

14 பிப்ரவரி 2019: ஜெய்ஷ் இ முகமது நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.

26 பிப்ரவரி 2019: பாகிஸ்தான் பகுதியில் உள்ள காஷ்மீரி பயங்கரவாதிகள் மீது விமானப் படை தாக்குதல் நடத்தி, பயங்கரவாத முகாம்களை அழித்ததாக இந்தியா கூறுகிறது.

தொடர்புடைய செய்திகள்:

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: