பள்ளிப்படிப்பை விட்டு பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்  மீண்ட கதை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பாலியல் தொழிலில் 15 வயதில் வீழ்ந்த பெண், தானும் மீண்டு தம் சமூகத்தையும் மீட்கும் கதை

ஹீனா பச்சாரா சமூகத்தைச் சேர்ந்தவர். பல நூற்றாண்டுகளாக இச்சமூகம் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகிறது. பாலியல் தொழில் செய்வதை பாரம்பரியத் தொழிலாக கருதுகிறது இச்சமூகம்.

மத்திய பிரதேசத்தில் நீமச்- மண்ட்சவுர் - ரட்லாம் மாவட்டங்களில் பச்சாரா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 72 கிராமங்களில் நிறைந்திருக்கிறார்கள். இதில் 68 கிராமங்கள் நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ளன. இங்கே பாலியல் தொழில் வெளிப்படையாக நடைபெறுகிறது.

ஆயிரக்கணக்கான இளம் பெண்கள் இந்த முறைகேடான தொழிலில் தள்ளப்படுகிறார்கள். அதில் சிக்கியவர்களில் ஹீனாவும் ஒருவர். அவர் பதினெட்டு வயதை அடைவதற்கு முன்னரே ஒரு பெண் குழந்தைக்கு தாயாகிவிட்டார். ஆனால் சில ஆண்டுகளில் ஹீனா இந்த தொழிலில் இருந்து வெளியே வந்துவிட்டார். தற்போது தனது சமூகத்தைச் சேர்ந்த மற்றவர்களை இத்தொழிலில் இருந்து மீட்டு வருகிறார்.

இளம் பெண்களை அவர் பயிற்றுவிக்கிறார். ஆனால் இன்னமும் ஆயிரக்கணக்கான இளம்பெண்கள் இத்தொழிலில் சிக்கியுள்ளனர். 1993-ல் இந்த சமூகத்தவர்மறுவாழ்வுக்காக ஜபாலி எனும் திட்டத்தை செயல்படுத்துவதாக அரசு உறுதியளித்தது. ஆனால் இதுவரை இத்திட்டம் செயல்படுத்தவில்லை. இதை செயல்படுத்துவதற்கான தொண்டு நிறுவனத்தை அரசாங்கத்தால் கண்டறிய முடியவில்லை. இதற்கிடையில் ஹீனா தனது சிறு சிறு முயற்சிகள் மூலம் சமூகத்தில் பெரிய மாற்றங்களை கொண்டு வர முயற்சிக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :