பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: வலுக்கும் மக்கள் பேராட்டம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: வலுக்கும் மக்கள் பேராட்டம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்களை ஏமாற்றி வல்லுறவு செய்து, அதனை காணொளி எடுத்து, சில இளைஞர்கள் பணம் பறித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

100 - 150 பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் எண்ணிக்கை தவறானது என்கிறது காவல்துறை.

பொள்ளாச்சி காந்தி சிலை அருகே வெள்ளிக்கிழமை திருநங்கைகள், பெண்கள், ஆண்கள் ஒன்று சேர்ந்து மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.

எழுத்தாளர்கள் தமிழ் செல்வன், ஆதவன் தீட்சண்யா, உ. வாசுகி, மற்றும் திருநங்கை கல்கி ஆகியோர் உள்பட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :