தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் திமுக - அதிமுக போட்டியிடும் தொகுதிகள்

பட மூலாதாரம், ARUN SANKAR/Getty images
அ.இ.அ.தி.மு.கவின் வேட்பாளர் பட்டியல் ஞாயிற்றுக்கிழமை மாலையில் வெளியிடப்படுமென துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார். அதேபோல, இன்று மாலையில், முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட தலைவர்கள் ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமையகத்திற்கு வந்தனர். உடனடியாக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கட்சித் தலைவர்கள் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இதற்குப் பிறகு இரவு ஒன்பதே முக்கால் அளவில் முதல்வரும் துணை முதல்வரும் வெளியேறினர். பிறகு அமைச்சர்களும் ஒவ்வொருவராக வெளியேறினர். இதற்குப் பிறகு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதில், அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தனுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இது தவிர, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார், முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியனின் மகன் பி.எச். மனோஜ் பாண்டியன், முன்னாள் எம்.பி. ராஜன் செல்லப்பாவின் மகன் வி.வி.ஆர். ராஜ் சத்யன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழக வேளாண்துறையின் முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்திக்கு இந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டில் தமிழ்நாடு வேளாண் பொறியியல் துறையின் திருநெல்வேலி மாவட்ட செயற்பொறியாளர் முத்துகுமாரசாமி என்பவர் பிப்ரவரி 22ஆம் தேதி ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட கிருஷ்ணமூர்த்தி, அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டார். அவருக்கு தற்போது வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. கூட்டணியில் இஸ்லாமியக் கட்சிகள் ஏதும் இடம்பெறாத நிலையில், இஸ்லாமியர் யாருக்கும் போட்டியிடவும் வாய்ப்பளிக்கப்படவில்லை. அ.இ.அ.தி.மு.கவின் வேட்பாளர் பட்டியல் ஞாயிற்றுக்கிழமை மாலையில் வெளியிடப்படுமென துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார். அதேபோல, இன்று மாலையில், முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட தலைவர்கள் ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமையகத்திற்கு வந்தனர். உடனடியாக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கட்சித் தலைவர்கள் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.
தென்சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், நீலகிரி, பொள்ளாச்சி, மயிலாடுதுறை, திருநெல்வேலி ஆகிய எட்டு மக்களவைத் தொகுதிகளில் அதிமுக - திமுக ஆகிய கட்சிகள் நேரடியாக மோதுகின்றன.
திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஆரணி, தேனி, கரூர் ஆகிய ஐந்து தொகுதிகளில் அதிமுக - காங்கிரஸ் இடையே நேரடிப் போட்டி உருவாகியுள்ளது.
கன்னியாகுமரி மற்றும் சிவகங்கை ஆகிய இரு தொகுதிகளில் பாஜக - காங்கிரஸ் இடையே நேரடிப் போட்டி இருக்கும்.
பாமக போட்டியிடும் ஏழு தொகுதிகளில் விழுப்புரம் தவிர மற்ற ஆறு தொகுதிகளிலும் திமுகவை எதிர்கொள்கிறது. விழுப்புரம் (தனி) தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் மோதுகிறது.
அதிமுக போட்டியிடும் 20 தொகுதிகள்
திருவள்ளூர், தென் சென்னை, காஞ்சிபுரம், ஆரணி, திருவண்ணாமலை, சிதம்பரம் (தனி), பெரம்பலூர், கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், பொள்ளாச்சி, நீலகிரி, மதுரை, தேனி, நாகப்பட்டினம் (தனி), மயிலாடுதுறை, திருநெல்வேலி.
பாமக போட்டியிடும் ஏழு தொகுதிகள்
மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், விழுப்புரம் (தனி), அரக்கோணம், தருமபுரி, திண்டுக்கல், கடலூர்.
தேமுதிக போட்டியிடும் நான்கு தொகுதிகள்
வடசென்னை, கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருச்சிராப்பள்ளி.
பாஜக போட்டியிடும் ஐந்து தொகுதிகள்
கோயம்புத்தூர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி.
தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடும் தொகுதி
தஞ்சாவூர்
புதிய தமிழகம் போட்டியிடும் தொகுதி
தென்காசி
புதிய நீதிக் கட்சி போட்டியிடும் தொகுதி
வேலூர்
என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடும் தொகுதி
புதுச்சேரி
பாமக இல்லாத செய்தியாளர் சந்திப்பு
பொதுவாக வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பு கூட்டத்தில் , அந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சியின் தலைவர்கள் அல்லது பிரதிநிதிகள் பங்கேற்பது வழக்கம். ஆனால், இந்த செய்தியாளர் சந்திப்பில் அ.தி.மு.க., பா.ஜ.க., புதிய நீதிக் கட்சியைச் சேர்ந்தவர்களைத் தவிர வேறு யாரும் பங்கேற்கவில்லை.
துணை முதல்வரும் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வத்திடம் இது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, "நீங்க உங்க வேலையைக் காண்பிக்கிறீர்களே" என்று மட்டும் பதிலளித்தார்.
ஓரிரு தொகுதிகளை பாட்டாளி மக்கள் கட்சி, தே.மு.தி.க. ஆகிய இரு கட்சிகளுமே தங்களுக்கு ஒதுக்க வேண்டுமென விரும்பியதாகச் சொல்லப்பட்டது. இதன் காரணமாகத்தான் பாட்டாளி மக்கள் கட்சி இந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்கவில்லையா என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பாலுவிடம் கேட்டபோது, "அப்படி எதுவுமில்லை. இது ஒரு வழக்கமான அறிவிப்பு. அதற்கு மேல் இதில் வேறெதுவும் இல்லை" என்று மட்டும் கூறினார்.
விசிக வேட்பாளர்கள்
இதற்கிடையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தி.மு.க. கூட்டணியில் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. சிதம்பரத்தில் அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனும் விழுப்புரத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் து. ரவிக்குமாரும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிதம்பரம் தொகுதியில் தனிச் சின்னத்திலும் விழுப்புரத்தில் தி.மு.கவின் உதயசூரியன் சின்னத்திலும் அக்கட்சி போட்டியிடுகிறது.
டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தமது கட்சியின் சார்பில் போட்டியிடும் 24 வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்துள்ளது. இடைத்தேர்தல் நடக்கும் 18 சட்டமன்றத் தொகுதிகளில் பூந்தமல்லி, பெரம்பூர் தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அக்கட்சி அறிவித்துள்ளது.
தி.மு.கவும் அ.தி.மு.க.வும் இன்று மாலையில் தங்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர்களை அறிவிக்கின்றன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்