கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார்

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் படத்தின் காப்புரிமை Hindustan Times
Image caption கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர்

கோவா மாநில முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் காலமானார். அவருக்கு வயது 63.

கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த மனோகர் பாரிக்கர் அமெரிக்காவிலும் மற்றும் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையிலும் சிகிச்சை எடுத்து வந்தார்.

அவரின் இறப்புக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோதி அரசாங்கத்தின் கீழ் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த பாரிக்கர், தனது பதவியை ராஜிநாமா செய்தார். அதனை தொடர்ந்து 2017ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் தேதி கோவா மாநிலத்தின் முதலமைச்சராக நான்காவது முறையாக பதவியேற்றார்.

1955ஆம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி கோவா தலைநகர் பனாஜியில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாபுசாவில் பிறந்தார் மனோகர் பாரிக்கர்.

மட்கோவில் உள்ள லயோலா உயர்நிலைப் பள்ளியில் படித்த அவர், மும்பை ஐஐடியில் உலோக பொறியியல் பட்டப்படிப்பை 1978ஆம் ஆண்டு முடித்தார்.

இந்தியாவில் ஐஐடியில் பட்டம் பெற்று சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற முதல் நபர் இவர்தான்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்