தமிழ்நாடு மக்களவைத் தேர்தலில் திமுக - அதிமுக அணிகளின் வேட்பாளர்கள் பட்டியல்

ஸ்டாலின் எடப்பாடி

பட மூலாதாரம், FACEBOOK/ GETTY IMAGES

மக்களவை தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் கட்சிகள் தமது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.

திமுக, அதிமுக ஆகிய இரண்டும் தங்கள் கட்சியின் சார்பாக 20 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்தது. முதல்கட்டமாக பாமக ஐந்து தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது.

பின்னர் ஸ்ரீ பெரும்புதூர் மற்றும் திண்டுக்கல் மக்களவை தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் யார் என்பதை பாமக அறிவித்தது.

தேமுதிகவும் நான்கு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தது.

தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட நாற்பது மக்களவை தொகுதிகளில் திமுக 40 இடங்களுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

அதிமுக கூட்டணி 40 இடங்களுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் சொந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரின் பெயரை தவிர, புதுச்சேரி உள்பட ஒன்பது தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

காங்கிரஸ், பாஜக கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியலை அறிவித்தன. இதில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திர ராஜன் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜ.கவின் தேசிய செயலாளர்களில் ஒருவராகிய ஹெச்.ராஜாவை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ப.சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார்.

புதிய தமிழகம் கட்சி தென்காசியில் மட்டும் போட்டியிடுகிறது. அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தஞ்சாவூரில் மட்டும் போட்டியிடுகிறது. அக்கட்சி சார்பில் என்.ஆர்.நடராஜன் போட்டியிடுகிறார்.

இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூர் தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறது. அக்கட்சியின் தலைவர் பச்சமுத்து திமுக கூட்டணி சார்பில் போட்டியிடுகிறார்.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. அக்கட்சி சார்பில் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :