சம்ஜௌதா ரயில் குண்டுவெடிப்பு - இந்து அமைப்பு உறுப்பினர் உள்பட அனைவரும் விடுதலை

சம்ஜௌதா ரயில் குண்டு வெடிப்பு படத்தின் காப்புரிமை PTI
Image caption அசீமானந்த்

சம்ஜௌதா ரயில் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் உள்ள தேசிய புலனாய்வு முகமையின் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2007ஆம் ஆண்டு பிப்ரவரி 18 அன்று இந்தியா மற்றும் பாகிஸ்தானை இணைக்கும் இந்த ரயிலில் நடந்த குண்டுவெடிப்பில் 68 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தான் குடிமக்கள்.

இந்திய எல்லையில் கடைசியாக அமைந்துள்ள அட்டாரி ரயில் நிலையத்தை நோக்கிச் சென்ற இந்த ரயில் பஞ்ச்குலாவில் இருந்து சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.

இந்த குண்டுவெடிப்பு பாகிஸ்தானிய இஸ்லாமியர்களை இலக்கு வைத்து நிகழ்ந்தபட்டது என தேசிய புலனாய்வு முகமை கூறியிருந்தது.

படத்தின் காப்புரிமை PTI

அபினவ் பாரத் எனும் இந்து வலதுசாரி அமைப்பின் உறுப்பினர் அசீமானந்த் மீது இந்த வழக்கில் தொடர்புடையவராக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

லோகேஷ் சர்மா, சுனில் ஜோஷி, சந்தீப் டாங்கே மற்றும் ராமச்சந்திர கலசங்ரா என்கிற ராம்ஜி ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

எனினும் இவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என நீதிமன்றம் கூறியுள்ளது. தங்கள் நாட்டைச் சேர்ந்த சில சாட்சிகளிடமும் விசாரிக்க வேண்டும் என பாகிஸ்தான் பெண் ஒருவர் விடுத்த கோரிக்கையை நீதிபதி ஜகதீப் சிங் நிராகரித்தார்

நீதிமன்ற தீர்ப்பு கையில் கிடைத்தபின் மேல் முறையீடு குறித்து முடிவு செய்யப்படும் என அரசு தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்