நரேந்திர மோதி வாரணாசியில் போட்டியிடுகிறார் - பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

மோதி, ஷா படத்தின் காப்புரிமை HINDUSTAN TIMES

வரவுள்ள மக்களவை தேர்தலுக்கான தமது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது பாரதிய ஜனதா கட்சி. வாரணாசி தொகுதியில் நரேந்திர மோதியும், குஜராத்தில் காந்திநகர் தொகுதியில் அமித்ஷாவும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லக்னோ தொகுதியில் ராஜ்நாத் சிங்கும், நாக்பூரில் நிதின் கட்கரியும் போட்டியிடுகிறார்கள்.

மூத்த பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான ஜே பி நட்டா, வியாழக்கிழமை மாலை வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். மொத்தம் 184 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது.

மக்களவை தொகுதி வேட்பாளர்
1. வாரணாசி நரேந்திர மோதி
2. காந்திநகர் அமித் ஷா
3. லக்னோ ராஜ்நாத் சிங்
4. நாக்பூர் நிதின் கட்கரி
5. காசியாபாத் ஜெனரல் விகே சிங்
6. அமேதி ஸ்மிரிதி இரானி
7. மதுரா ஹேமமாலினி

தமிழகத்தில் யார் எந்த தொகுதியில் போட்டியிடுகிறார்கள்?

மக்களவை தொகுதி வேட்பாளர்
தூத்துக்குடி தமிழிசை சௌந்தரராஜன்
சிவகங்கை ஹெச். ராஜா
கன்னியாகுமரி பொன். ராதாகிருஷ்ணன்
கோவை சிபி ராதாகிருஷ்ணன்
ராமநாதபுரம் நயினார் நாகேந்திரன்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :