நாமக்கல் மக்களவைத் தொகுதி: கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு முதல் எம்.பி வெற்றி

ஆஞ்சநேயர் கோயில், நாமக்கல்

பட மூலாதாரம், https://tamilnadu-favtourism.blogspot.com

நாமக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஏ.கே.பி. சின்ராஜ், அதிமுக வேட்பாளர் பி. காளியப்பனைவிட விட 2,65,151 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

ராசிபுரம் தொகுதியை நீக்கி விட்டு புதிதாக உருவாக்கப்பட்டதுதான் நாமக்கல் மக்களவைத் தொகுதி. ராசிபுரம் தொகுதியில் சின்னசேலம், ஆத்தூர், தலவாசல் (தனி), ராசிபுரம், சேந்தமங்கலம் (தனி), நாமக்கல் (தனி) சட்டசபைத் தொகுதிகள் முன்பு இருந்தன.

2019 மக்களவைத் தேர்தலில் முக்கிய வேட்பாளர்கள்

2019ம் ஆண்டு இந்திய மக்களவைத் தேர்தலில், அண்ணா திராவிட முன்னேற கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் அதிமுகவின் பி. காளியப்பன், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் கொங்கு மக்கள் தேசிய கட்சியின் ஏ. பே. பி. சின்ராஜூ, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சாமிநாதன், மக்கள் நீதி மய்யத்தின் தங்கவேலு, நாம் தமிழர் கட்சியின் பாஸ்கர் ஆகியோர் நாமக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகின்றனர்.

2008ம் ஆண்டு மறுசீரமைப்புக்கு பின்னர், சங்ககிரி, இராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்தி-வேலூர் மற்றும் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிகள் இணைந்து நாமக்கல் மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தை சேர்ந்த பேரூராட்சி சங்ககிரி. இங்குள்ள மலை சங்குபோல இருப்பதால், சங்கு + கிரி =சங்ககிரி என்று பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. கிரி என்றால் மலை என்று பொருள்.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர், விவசாயத்தை தொழிலாக கொண்டிருந்த இந்த பகுதியில் இப்போது லாரி பாடி பில்டிங் முக்கிய தொழிலாக நடைபெற்று வருகிறது. மேலும், இங்கு இரும்பு உருக்காலைகள், சிமென்ட் தொழிற்சாலைகளும் உள்ளன.

2009ஆம் ஆண்டு வெளியான தொகுதி மறுசீரமைப்பில் சேந்தமங்கலமும், ஏற்காடு சட்டமன்ற தொகுதிகள் மட்டுமே தேர்தல் ஆணையத்தால் தமிழகத்தில் மலைவாழ் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட தனித் தொகுதிகளாகும்.

பட மூலாதாரம், https://namakkal.nic.in

சேந்தமங்கலம், கொல்லிமலை ஆகிய இரு வட்டாட்சியர் அலுவலங்கள் செயல்படும் சேந்தமங்கலத்தில் விவசாயம் பிரதான தொழிலாகும்.

தங்க நகை ஆபரண கூடங்களில் சேகரமாகும் மண்ணை விலை கொடுத்து வாங்கி வந்து, அதில் உள்ள தங்கத்துகள் பிரித்தெடுப்பது, செங்கல் தயாரிப்பும் பிரதானமாக மேற்கொள்ளப்படுகின்றன.

கொல்லி மலை சிறப்பு பெற்ற சேந்தமங்கலம்

சேந்தமங்கலத்தின் அடையாளமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. மூலிகைக்கு புகழ்பெற்ற இந்த மலை சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது.

பட மூலாதாரம், NORRIE RUSSELL, THE ROSLIN INSTITUTE

கடையேழு வள்ளல்களில் ஒருவரும், வில்வித்தையில் சிறந்தவராக முற்கால செய்யுள்களில் குறிப்பிடப்படும் சங்க காலத்தில் வேட்டுவ மாமன்னர் வல்வில்ஓரி மன்னன் கொல்லிமலையை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்து வந்தார் என்பது மற்றொரு சிறப்பம்சமாகும்.

இந்து மதத்தை சார்ந்த மக்கள் பெரும்பான்மையினராக இருந்தாலும், முஸ்லிம், கிறித்துவ மக்களும் கணிசமான அளவில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த கொல்லி மலையில் மூலிகைப் பண்ணை, சித்த மருத்துவக் கல்லூரி போன்றவை கட்டப்பட வேண்டும் என்பது மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகிறது.

சரக்கு போக்குவரத்து துறையிலும் கோழி வளர்ப்பிலும் முதன்மையான இடத்தை பிடித்திருப்பது நாமக்கல் மாவட்டம்.

நாமக்கல் சுமையுந்து வண்டிகளின் உடலக அமைப்பைக் கட்டுவதில் இந்தியாவில் புகழ் பெற்றது. சுமையுந்து தொடர்பான பட்டறை என்னும் தொழில் கூடங்கள் ஏராளமாக உள்ளன. தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கம் இங்கு உள்ளது.

1500க்கு அதிகமாக கோழிப்பண்ணைகள் நாமக்கலில் உள்ளது. ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய மூன்றரை கோடி முட்டைகள் இங்கிருந்து கிடைப்பதாக கூறப்படுகிறது.

திருச்செங்கோட்டில் ஆழ்துளைக் கிணறு தோண்டும் வண்டிகள் அதிகமாக உள்ள இடமாகும். குமாரபாளையத்திலும், திருச்செங்கோட்டிலும் விசைத்தறி மற்றும் கைத்தறி தொழிலுக்கு சிறந்து விளங்குகிறது.

பட மூலாதாரம், Getty Images

மோகனூரில் கூட்டுறவு சர்க்கரை ஆலையும், பள்ளிப்பாளையத்தில் காகித ஆலை ஒன்றும், இராசிபுரத்தில் சவ்வரிசி ஆலையும் உள்ளது.

பேளுக்குறிச்சி சந்தை கொல்லிமலையில் இருந்து கிடைக்கும் மிளகு, மல்லி, சீரகம் போன்ற மளிகைப் பொருட்கள் தமிழக அளவில் பிரபலம் அடைந்துள்ளது. பள்ளிப்பாளையமும் தமிழ் நாட்டின் மு்ககிய தொழிற்சாலை மையங்களில் ஒன்று.

தேர்தல் வரலாறு

தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு நடைபெற்ற இரண்டு மக்களவைத் தேர்தல்களில் திமுக-வும், அதிமுக-வும் தலா ஒரு முறை இந்த தொகுதியில் வென்றுள்ளன.

தமிழ்நாட்டில் முட்டை உற்பத்திற்கு புகழ்பெற்ற நாமக்கல் மக்களவைத் தொகுதியை யார் கைப்பற்றுவார்கள் என்பது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் சின்ராஜூம், அதிமுக தலைமையிலான கூட்டணியில் அதிமுகவின் பி. காளியப்பன் போட்டியிடுகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :