இந்திய மக்களவை தேர்தல் 2019: 50 மில்லியன் குடும்பங்களின் வருவாய்க்கு வாக்குறுதியளிக்கும் காங்கிரஸ்

ராகுல் காந்தி படத்தின் காப்புரிமை TWITTER / CONGRESS

மக்களவை தேர்தல் 2019-ல் காங்கிரஸ் கட்சி வெற்றிபெறுமானால் உலகிலேயே ’மிக பெரிய குறைந்தபட்ச வருவாய் திட்டத்தை’ உருவாக்குவாம் என்று இந்தியாவின் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார்.

இந்தியாவின் 50 மில்லியன் ஏழை குடும்பங்கள் இந்த குறைந்தபட்ச வருவாய் பெறுவதை உறுதி செய்யும் உத்தரவாதத்தை காங்கிரஸ் கட்சி வழங்கும் என்று அவர் கூறியுள்ளார்.

"ஏழ்மையை ஒழிக்கும் பணப்புழக்க விவேக திட்டம்" இதுவென ராகுல் காந்தி இந்த திட்டத்தை குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், தற்போது இருக்கின்ற திட்டங்களால், இந்தியாவின் ஏழை மக்கள் அதிக ஆதரவை பெற்று வருவதாக ஆளும் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தெரிவித்திருக்கிறது,

"உங்களுடைய தோல்வி உறுதியாக இருந்தால்,சந்திரனையே வழங்குவதாக நீங்கள் வாக்குறுதி அளிக்கலாம்" என்று பாஜக-வின் பொதுச் செயலாளர் ராம் மாதேவ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தங்கள் தேர்தல் அறிக்கையின் ஒரு பகுதியாக குறைந்தபட்ச வருவாய் கொள்கையை கடந்த ஜனவரி மாதமே காங்கிரஸ் வெளியிட்டது. ஆனால், இதுவரை அதனுடைய விவரங்களை வெளியிடவில்லை.

படத்தின் காப்புரிமை Getty Images

"நியாய்" (நீதி) என்ற அழைக்கப்படும் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய மக்கள்தொகையிலுள்ள 20 சதவீத ஏழைகள் ஆண்டுக்கு ரூ. 72, 000 பெறுவார்கள் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

50 மில்லியன் குடும்பங்கள் அல்லது 250 மில்லியன் மக்கள் இந்த கொள்கையின் மூலம் நேரடியாக பயன்பெறுவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

"ஏழ்மையை ஒழிப்பதற்கு கடைசி தாக்குதல் தொடங்கிவிட்டது. நமது நாட்டிலிருந்து ஏழ்மையை துடைத்தொழிப்போம்" என்று கூறிய அவர், "இதற்கு பல பொருளியல் வல்லுநர்களின் ஆலோசனை காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இந்த திட்டத்திற்கு 52 பில்லியன் டாலர்கள் செலவாகலாம்.

வருமான சமத்துவமின்மை பற்றிய ஆய்வுக்காக மிகவும் பிரபல நபரான பிரெஞ்ச் பொருளியல் வல்லுநர் தாமஸ் பிகெற்றி, காங்கிரஸ் கட்சிக்கு இந்த திட்டத்தை செயல்படுத்த ஆலோசனை வழங்கியதாக வதந்தி வெளியாகியது.

"ஆனால், இந்த கொள்கை திட்டத்தை வடிவமைத்ததில் தான் நேரடியாக ஈடுபடவில்லை" என்று அவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

"ஆனால், இந்தியாவில் சமத்துவமின்மையை குறைக்கின்ற எல்லா முயற்சிகளுக்கும் நான் நிச்சயமாக ஆதரவு அளிப்பேன் என்றும், அரசியல் விவாதத்தை சாதி அடிப்படையில் இருந்து, வருவாய் மற்றும் செல்வத்தை பங்கிடும் அடிப்படையிலான வாதத்திற்கு கொண்டு செல்லும் நடவடிக்கைக்கு குறிப்பாக ஆதரவு அளிக்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

அனைவருக்கும் அல்லது பெரும்பான்மையான குடிமக்களுக்கு நாடு எந்தவித நிபந்தனையும் இல்லாமல் சர்வதேச அடிப்படை வருவாயை அல்லது குறைந்தபட்ச வருவாய் வழங்குவதை இந்தியா அறிமுகப்படுத்த முடியுமா? என்று சமீபத்திய ஆண்டுகளில் பெரும் விவாதம் இந்தியாவில் தோன்றியுள்ளது.

இந்திய மக்கள்தொகையில் 75 சதவீத மக்களுக்கு நன்மைகள் வழங்கும் திட்டம் ஒன்றால், ஏழ்மையை கணிசமான அளவுக்கு குறைக்க முடியும் என்று 2017ம் ஆண்டு வெளியான இந்திய பொருளாதார ஆய்வு பரிந்துரை செய்தது.

இத்தகைய திட்டங்கள் பின்லாந்து, கென்யா மற்றும் நெதர்லாந்து உள்பட உலகின் பல நாடுகளில் சிறிய அளவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

சர்வதேச அடிப்படையிலான வருமானமாக இல்லாமல் இருந்தாலும், காங்கிரஸ் கட்சியின் கொள்கை இத்தகைய சர்வதேச திட்டத்தில் சில நிபந்தனைகளோடு உடைய கொள்கையாக பார்க்கப்படுகிறது.

இந்த அறிவிப்பு வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்தியாவில் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்காளர்களின் கவனத்தை ஈர்ப்பதாக பார்க்கப்படுகிறது.

ஆனால், இந்தியா போன்ற பெரிய நாடுகளில் இந்த திட்டத்தை செயல்படுத்துவது கடினம் என்று பொருளியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த நியாய் திட்டத்திற்கு தகுதியுடையோராக முடிவு செய்ய எந்தெந்த தரவுகள் பயன்படுத்தப்படும் என்று இன்னும் தெளிவாக தெரியவில்லை.

இந்தியாவில் வாழும் ஏழைகள் பற்றிய தெளிவான எண்ணிக்கை பற்றிய மதிப்பீடுகளில் வித்தியாசங்கள் நிலவுகின்றன. இதனால் சர்ச்சகைளும் தோன்றியுள்ளன.

இந்த திட்டத்திற்கு எவ்வாறு நிதி ஆதரவு அளிக்கப்படும் என்று ராகுல் காந்தி குறிப்பிட்டு தெரிவிக்கவில்லை.

பல மில்லியன் மக்களுக்கு ஆதரவு அளிக்கின்ற வகையில் நிதி ஆதரவு அளிக்க வேண்டுமென்றால், தற்போது அரசிடம் இருக்கின்ற உணவு மற்றும் உர மானியங்கள், வருமான வரி ஊக்கத்தொகையை நீக்குதல் ஆகியவை முக்கியமாக இருக்கும் என்று பொருளாதார அறிஞர் விவேக் கவுல் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், பெரிய மக்கள்தொகை இருக்கும் நாட்டில் இத்தகைய நடவடிக்கைகள் பிரபலமடையாது.

சர்வதேச அடிப்படையிலான வருவாய் உண்மையிலேயே இந்தியாவின் 5 சதவீத ஆண்டு உள்நாட்டு உற்பத்தி குறியீட்டின் செலவை உருவாக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.

ஆனால், இது மிகவும் "கீழ்மட்ட அளவிலான பதிப்பு" என்பதால், சிறிய அளவில் செயல்படுத்தி பெரிய அளவாக கொண்டு செல்ல வேண்டும் என்கிறார் கவுல்.

இவ்வாறு அடிப்படை வருவாய் திட்டங்களை செயல்படுத்தினால், வேலை செய்வதற்கான தூண்டுதலை மக்களிடம் குறைத்துவிடும் என்று சில பொருளியல் வல்லுநர்கள் இந்த திட்டத்தை விமர்சிக்கின்றனர்.

மலிவான உணவு, உர மானியங்கள், ஊரக வேலை உத்தரவாதம் மற்றும் மாணவர் உதவித்தொகை உள்பட 900-க்கும் மேலான நலத்திட்டங்கள் இந்தியாவில் ஏற்கெனவே உள்ளன.

ஆனால், இந்த திட்டம் இந்தியாவில் செயல்படுத்தக்கூடியதே என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :