போலிச் செய்திகளை பகிர்தலின் பின்னணியில் உள்ள செயலூக்கங்கள்

போலிச் செய்திகள்

முதலில் மக்கள் ஏன் இதைப் பகிர்கிறார்கள்? இதன் மூலம் அவர்களுக்கு என்ன கிடைக்கும்? இந்த செயலூக்கங்களின் இடையே போலிச் செய்திகள் எப்படி ஊடுருவுகின்றன?

செயலூக்கங்களை நாம் பார்ப்பதற்கு முன்னதாக, அவர்கள் எதைப் பகிர்கிறார்கள் என்பதைப் பார்ப்போம். பிபிசி களப்பணியின்போது சேகரித்த வாட்ஸப் தகவல்களின் தொகுப்புகளைப் பகுப்பாய்வு செய்ததில், போலிச் செய்திகள் என ஊடகங்களில் வந்து நாம் பார்த்தவற்றில் இருந்து மிகவும் மாறுபட்ட வகைப்பாடுகளாக அவை இருந்ததை நாங்கள் கவனித்தோம்.

ஆய்வு நெறிமுறைகளின் வரம்புகளின்படி, அறிகுறியாக மட்டுமின்றி, தனிப்பட்ட பின்னல் தொடர்புகளில் என்ன விஷயங்கள் பகிரப்படுகின்றன என்பதைக் காட்டுவதாக நிச்சயமாக உள்ளன.

ஊடகங்களில் பெரும்பான்மையாக வரும் `உள்நாட்டுச் செய்திகள் மற்றும் நடப்பு விவகாரங்கள்' என்பதாக இல்லாமல், இங்கே முதன்மையான வகைப்பாடாக (37% அளவுக்கு) இருப்பது அச்சுறுத்தல்கள் மற்றும் ஊழல்கள். அதற்கு மிக நெருக்கமாக அடுத்த நிலையில் இருப்பது `தேசிய மூட நம்பிக்கைகள்'

இதுபோன்ற தகவல்களைத் தான் அவர்கள் பகிர்கிறார்கள் என்றால், உண்மையில் எதற்காக இவற்றைப் பகிர்கிறார்கள்? டிஜிட்டல் தளங்களில் மக்கள் தகவல்களைப் பகிர்வதற்கான காரணங்கள், அதிக ஆச்சர்யம் இல்லாத மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு மாறுபட்ட கலவையாக இருக்கின்றன.

பகிரப்படும் தலைப்புகள்

 • நரேந்திர மோதி
 • பண மதிப்பு நீக்கம்
 • ராணுவம்
 • பாஜக எதிர்ப்பு
 • ஆதார்
 • சாமானிய மக்கள் கட்டுரைகள்
 • கலாசாரப் பாதுகாப்பு
 • ஆரோக்கியம்
 • பணம்
 • தொழில்நுட்பம்
 • சதிகள்
 • தேசிய மூடநம்பிக்கைகள்
 • அச்சுறுத்தல்கள் & ஊழல்கள்
 • மற்றவை
 • நடப்பு விவகாரங்கள்

II.1. சரிபார்ப்பதற்காக பகிர்வது (தொடர்பு பின்னலுக்குள்)

நம்ப முடியாத விஷயங்கள் அல்லது உண்மையல்லாத விஷயங்களை சரிபார்த்துக் கொள்வதற்காக தங்களுடைய தொடர்பு பின்னலுக்குள் இதுபோன்ற தகவல்களை பலரும் பகிர்ந்து கொள்ளும் போக்கு அதிகமாகக் காணப்படுகிறது.

வழக்கமாக, சரி பார்க்க வேண்டும் என்று வெளிப்படையான கோரிக்கையுடன் சேர்த்து இவை பகிரப்படுவது இல்லை; அது உண்மையில்லை என்றால்,தொடர்பு பின்னலில் உள்ள யாராவது அதற்கு மறுப்பு தெரிவித்து திரும்பத் தகவல் பதிவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் அவை பகிரப்படுகின்றன.

வழக்கமாக, பின்னல் தொடர்பில் ஒவ்வொருவருக்கும் நம்பகமான ஒருவர் - குறிப்பிட்ட விஷயங்களிலோ, அல்லது `புத்திமான்' அல்லது `கல்வி கற்றவர்' - உண்மை அல்லாதவற்றை சுட்டிக்காட்டுபவர் என்ற நிலையில் சிலர் இருப்பார்கள்.

முன்பு `அனுப்புபவரின் உயர்வு நிலை' என்று நாம் குறிப்பிட்டதைப் போல, சில வழிகளில் இது கண்ணாடியைப் போன்ற பழக்கமாக இருக்கிறது. உண்மைத் தன்மையை சுட்டிக்காட்டும் தகவல்கள் மூன்றாம் தரப்பாரிடம் இருந்து கோரப்படுவது இல்லை.

ஆனால் தொடர்பு பின்னலிலுள்ள யாரிடம் இருந்தாவது வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக, உண்மையான நோக்கம் சரிபார்த்தல்தான் என்றாலும், போலிச் செய்தித் தகவல்கள் பகிரப்படுகின்றன.

II.2. மக்கள் கடமையாகப் பகிர்வது

எதையாவது பகிர்ந்து உங்கள் நண்பர்களிடம் `அறிந்தவை' என வருபவை, நிச்சயமாக சில பகிர்தல் போக்குகளின் முனைப்பால் ஏற்படுகிறது.

ஆனால், ஊடகங்களின் செயலூக்கங்கள் சந்தேகத்துக்குரியவை என கருதப்படும் சூழ்நிலையில், ஒரு சாதாரண குடிமகனாக, ஒரு விஷயத்தைப் பகிர்வது மற்றும் தகவல்களை பரவச் செய்வது பெரும்பாலும் பொதுக் கடமையாக மாறுகிறது.

சில விஷயங்களை வெகுதொலைவுக்கு, பரவலாக, வேகமாகப் பகிர வேண்டும் என்ற உணர்வு இருக்கிறது. இது இரண்டு பெரிய வகைப்பாடுகளில் வருகிறது:

முதலில், பொது நலன் சார்ந்தது என்றும், யாருக்காவது அது உதவக்கூடும் என்ற எண்ணத்தில் வெகுதொலைவுக்கு பரவலாக அதைப் பகிர்வது கடமை என்று கருதப்படுகிறது.

அது சரியானதா என்பதை உறுதி செய்யும் பொறுப்பு, தகவலைப் பெறுபவரிடம் விடப்படுகிறது. முக்கியமாக, பொய்யானதாக இருக்கும் தகவல்களைப் பெறுபவருக்கான செலவு அதிகமானதாக இருப்பதில்லை என்ற நிலையில், போலிச் செய்தித் தகவல்கள் பரப்பப்படுவது இந்த வகையில் வரும்.

ஆனால், பகிர்தலுக்கான அடுத்த செயலூக்கங்கள் பற்றி நாம் ஆராய்வதற்கு முன்னதாக, இன்றைக்கு இந்தியாவில் புதிய வடிவில் அடையாளங்கள் உருவாதல் பற்றிப் புரிந்து கொள்ள நாம் முயற்சிக்க வேண்டும்.

இந்தியாவில் இப்போது உருவாகும் சமூக - பொருளாதார அடையாளங்கள் - இந்த ஆய்வுத் திட்டத்தில் கண்டறிந்தவை

இந்தியாவைப் பற்றிய பல வகையான சிந்தனைகள் தெரிவிக்கப்படும்74 நாடாக இந்தியா இருக்கிறது. உலகில் இந்தியராக இருப்பது என்பதன் அர்த்தம் என்ன என்று அறிந்து கொள்ளவும் இந்தியர்கள் முயற்சிக்கிறார்கள்.

ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்கள், வாட்ஸப் போன்ற தகவல் அனுப்பும் செயலிகள் ஆகியவை பகிர்ந்து கொள்ளப்படும் களங்களாக அமைந்துள்ளன.

கடந்த 30 ஆண்டுகளில் இந்திய அரசியலில் உள்ள தகவல்கள் இரண்டு முக்கிய சக்திகளின் வளர்ச்சியைப் பற்றியதாக உள்ளன: இந்து தேசியவாதம் மற்றும் தலித் உரிமைகளுக்கான இயக்கங்கள்.

இந்து தேசியவாதம் என்பது நேருவின் சோஷலிஷத்துக்கு (மற்றும் மதச்சார்பின்மைக்கு) நேர் எதிரானதாக முன்வைக்கப் படுகிறது; சமூக ஊடகங்களை செல்வாக்கு ஏற்படுத்தும் உத்திகளுடன் பயன்படுத்தி பாரதிய ஜனதா கட்சியின் நரேந்திர மோதியை 2014 தேர்தலில் இந்தியாவின் பிரதமராக வெற்றி பெறச் செய்தது, இந்து தேசியவாதத்தின் வெற்றியாகக் கருதப்படுகிறது.

இந்து தேசியவாதம் அல்லது இந்துத்வா, பாஜகவுக்கு நெருக்கமான சித்தாத்தங்களைக் கொண்டது, ஒப்பீட்டளவில் மிதமானது முதல் தீவிரமானது வரை என்ற வகையில் தொடர் சொற்பொழிவுகளைக் கொண்டதாக இருக்கிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

அந்தச் சொற்பொழிவுகள் கவர்ச்சிகரமானதாகவும், முரண்பாடுகளை எழுப்புவதாகவும் இருக்கும். எந்தவொரு சித்தாந்தத்திலும் உள்ளதைப்போல, இந்து தேசியவாதத்தின் சித்தாந்தம் நிறைய சொற்பொழிவுகளை உள்ளடக்கியதாக, மிதமானது முதல் தீவிரமானது வரையிலான வகையாக இருக்கிறது.

அந்தச் சொற்பொழிவுகள் கவர்ச்சிகரமானதாகவும், முரண்பாடுகளை எழுப்புவதாகவும் இருக்கும். இந்தியா என்பது இந்துக்களுக்கானது அல்லது இந்தியா என்பது கலாசார ரீதியில் இந்து நாடு என்ற எண்ணத்தை பிரதிபலிப்பதாக இருப்பது தான் இந்தச் சொற்பொழிவுகளை ஒன்று சேர்க்கும் மையக் கருத்தாக இருக்கிறது.

இந்துத்வா குறித்த சொற்பொழிவில் கலாசாரம் என்ற இந்த சிந்தனை மையமாக இருக்கும்; இந்துத்வாவிற்கு கலாசாரம் மையமான அம்சமாக இருப்பதால், கடவுளை மறுக்கும் நபரும் கூட இந்துத்வா என்ற விஷயத்தில் பற்றுதல் கொண்டவராக இருப்பார்.

அதன் நிறுவனர் முன்னோடியான வி.டி. சாவர்க்கர் போல இருப்பார்கள். சாவர்க்கர்தான் தன்னுடைய புத்தகத்தில் `இந்துத்வா' என்ற வார்த்தையை உருவாக்கி, இந்து மதத்திலிருந்து இருந்து அதைப் பிரித்துப் பார்க்க வைத்தார்.

சாவர்க்கரை பொருத்தவரை, இந்தியாவின் தேசிய அடையாளத்துடன் உட்பொதிந்திருப்பது இந்து கலாசாரம். மதம், மொழி (சமஸ்கிருதம் மற்றும் அதில் இருந்து உருவான இந்தி), வேதகால சம்பிரதாயங்கள், `ஹிந்துஸ்தான்' என்ற புனிதமான தந்தை நாட்டின் வாழ்விட உரிமை ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்து கலாசாரம் இருக்கிறது ஓர் இந்து என்பவர் யார் என்பதை வரையறை செய்வதில் மையமான பங்கை ஹிந்துஸ்தான் என்ற அம்சம் பெறுவதால், `இந்திய மண்ணில் இருந்து வெளியேறி வளர்ந்திருக்கும்' - இந்துக்கள் மற்றும் இந்து பிரிவினர் மட்டுமின்றி, புத்த மதத்தவர்கள், ஜெயின்கள் மற்றும் சீக்கியர்களும் கூட இந்துக்கள் என்ற வட்டத்துக்குள் ஒருவாறாக சேர்க்கப்படுகிறார்கள்.

கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு, புனித இடங்கள் இந்தியாவுக்கு வெளியில் இருப்பதால், `எல்லை கடந்த விசுவாசம்' கொண்டவர்கள் என்ற சந்தேகப் பார்வை உருவாக்கப்படுகிறது. அவர்கள் `வெளி மத' நம்பிக்கைகளில் இருந்து விடுபட்டு திரும்பி வந்தால் இந்துக்களாக ஏற்கப்படுவார்கள் என்றும் கூறுகிறார்கள்.

இந்துத்வா என்பது இந்து மதம் பற்றியது அல்ல. ஆனால், `ஒட்டுமொத்த வாழ்க்கை முறை' என்று குறிப்பிடப்படுகிறது.

இதற்கெல்லாம் மேலாக, முஸ்லிம் ஆண்கள் காம வேட்கை மிகுந்தவர்கள், சிற்றின்பத்தில் நாட்டம் கொண்டவர்கள், இந்துப் பெண்களை மட்டுமின்றி, பாரத மாதாவையே (அன்னை இந்தியா) அல்லது இந்திய தேசத்துக்கே பங்கம் செய்பவர்கள் என்று பார்க்கப் படுகிறார்கள்.

முக்கியமாக, கருத்தாடலில் அடிக்கடி மறந்து போன, இந்துத்வா என்பதை இந்து மதத்துடன் ஒத்த விஷயமாகப் புரிந்து கொள்ளக் கூடாது.

உண்மையில், இந்து மதத்தைப் பின்பற்றுவதன் பன்முகத்தன்மை என்பது நல்லதாகப் பார்க்கப்பட வேண்டும் என்பது கிடையாது.

ஒன்று சேர்ப்பதன் மையமான சூழலுக்கு ஒவ்வாததாக அது கருதப்படுகிறது. இந்து தேசியவாதத்தை உருவாக்கிய முன்னோடிகளில் ஒருவரான வீர சாவர்க்கர் ஒரு நாத்திகவாதி என்றாலும், `கலாசார ரீதியில் இந்து' என்று தம்மை அவர் கூறிக் கொள்வார்.

இந்தியாவைப் பற்றி ஊடகங்களில் கருத்துகள் சொல்லும்போது, இந்திய சமூகத்தில் இன்றைக்கு உள்ள பிரிவுகள் பற்றிப் பேசும்போது, `ஒருமுகப்படுத்துதல்' என்ற வார்த்தை அடிக்கடி பயன்படுத்தப் படுகிறது. மதங்களுக்கு இடையில் இப்போதுள்ள வேறுபாடுகளை இந்தக் கருத்தாடல்கள் ஒரு வட்டத்துக்குள் கொண்டு வருகின்றன.

சமூக- அரசியல் அடையாளங்கள் எப்படி உருவாகின்றன என்பதை அறிய எங்களுடைய களப்பணியில் வெவ்வேறு வழிமுறைக் கையாண்டோம். அவர்களுக்குள் கூட வலதுசாரி சார்பு நிலை கொண்டு, இந்து என அடையாளப்படுத்திக் கொள்பவர்களுக்கும், அதற்கு எதிரானவர்களுக்கும் இடையில் வேறுபாட்டை கண்டறிய இதைப் பயன்படுத்தினோம்.

போலிச் செய்திகளின் தீவிரம் மற்றும் பரவுதலில் இந்த விஷயம் ஆதிக்கம் செலுத்துவதை நாங்கள் கண்டறிந்தோம்.

இந்தியாவில் பன்முக சமூக-அரசியல் அடையாளங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. வலதுசாரியில் மூன்று பரவலான குழுக்கள் உள்ளன: ஒரு குழு இந்து/இந்துத்வா அடிப்படைவாதிகள் என நாம் குறிப்பிடுகிறோம்;

இரண்டாவது, இந்து / இந்துத்வா முன்னேற்றகர கருத்துள்ளவர்கள்; மூன்றாவது, இந்து / இந்துத்வா போராளிகள். இதில் சில தனி நபர்கள் தீவிர இந்துத்வவாதிகளாக இல்லாமல் இருப்பதையும், சிலர் சித்தாந்த ரீதியில் இந்துத்வா கொள்கை உடையவர்களாகவும் உள்ளதைக் குறிப்பிடுவதற்கு இந்து /இந்துத்வா என நாங்கள் பயன்படுத்துகிறோம்.

இந்து/இந்துத்வா அடிப்படைவாதிகள்

அவர்கள் பொதுவாக வயதானவர்களாக, பாரம்பரியத்தை கடைபிடிப்பவர்களாக, ஒட்டுமொத்த குடும்பத்தினரும் சம்பிரதாயங்களைப் பின்பற்றுபவர்களாக, முக்கியமாக குடும்பத்துக்குள் கேள்விக்கே இடம் இல்லாத வகையில் பின்பற்றுபவர்களாக இருக்கிறார்கள்.

மாற்றத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்களாக, பழையதைத் தொடர்வதில் பாதுகாப்பாக இருப்பதாக நினைப்பவர்கள்.

வெளிநாட்டுக் கலாசாரம் என்பது தொடர்ந்து நமது கலாசாரத்தை அழித்துவிடும் என்ற அச்சம் காரணமாக நவீனத்துவத்தை ஓர் அச்சுறுத்தலாகப் பார்க்கிறார்கள்.

கடந்த காலத்தை நினைத்துப் பார்ப்பவர்களாக இருக்கிறார்கள். அவர்களில் பலர் வெளிப்படையாக - மிகவும் தீவிரமாகவும்கூட - இந்துத்வா சித்தாத்தங்களை ஆதரிப்பவர்கள்.

ஆனால் தீவிர இந்து அடிப்படைவாதியாக இருப்பது என்பது, இந்துத்வா கொள்கையை தீவிரமாக ஆதரிப்பதாக எடுத்துக் கொள்ளப்படக் கூடாது. ஆனால் அப்படியும் இருக்கலாம் என்ற நிலைதான்.

இந்துத்வா சித்தாந்தவாதிகளால் அரசியலாக்கப்பட்ட மற்றும் கொடூரமான வன்முறைகள் சிலவற்றுக்குக் காரணமாக அமைந்த ஒரு விஷயத்தைப் பற்றி இது பேசுகிறது. ஆனால், நல்ல வாழ்க்கையை வழங்கும் அன்னையாக பசு கருதப்படுகிறது என்ற சிந்தனை பல அடிப்படைவாதிகள் - அடிப்படைவாதம் இல்லாத - இந்துக்களிடம் ஆழமாக இருக்கிறது.

(குறிப்பு: பொதுவான பகிர்தல் பழக்கத்துக்கு உதாரணமாக இந்தத் தகவல் இங்கே தரப்பட்டுள்ளது. போலிச் செய்தி பகிர்தலுக்கான உதாரணமாக இல்லை).

``... இந்துயிசத்தில் நீங்கள் இறுதிச் சடங்குகள் செய்யும் காலத்தில் இருந்தால், வீட்டைவிட்டு வெளியில் செல்லவோ அல்லது மற்றவர்களை சந்திக்கவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள். தலைமுடியை மழிக்கும் வரையில் 10 நாட்களுக்கு தனியாக அமர்ந்திருந்து ஒரு நாளுக்கு ஒரு முறை மட்டுமே சாப்பிட வேண்டும் என்பதும் சம்பிரதாயம். பல தலைமுறைகளாக சில சம்பிரதாயங்கலும் நடைமுறைகளும் மத ரீதியில் பின்பற்றப்படுகின்றன.

எனவே, நாம் அதற்கு கட்டுப்பட்டவர்கள். ``என்னால் அவ்வாறு செய்ய முடியாது. தயவுசெய்து நீங்கள் செய்யுங்கள் அல்லது நான் கைக்கூப்பி ஒரு முறை பிரார்த்தித்துக் கொள்கிறேன்''. எனவே அவர்கள் ஒரு சம்பிரதாயத்துக்காகச் செய்கிறார்கள். விரும்பிச் செய்யவில்லை.'' (ஆண், 60, வாரணாசி)

எந்தப் பிரச்சனையும் இல்லாவிட்டாலும் கூட. பசு வழிபாடு என்பது 'இந்து' அடையாளமாக வரலாற்றுப் பூர்வமாக உள்ளது. பசு வழிபாட்டை சாவர்க்கர் கடுமையாக எதிர்த்தார்.

காண்க : இந்தியா டைம்ஸ் செய்தி. மாட்டிறைச்சி சாப்பிடுவது இந்து அடையாளத்துக்கு ஏற்றதல்ல என்று கருதாத, நாட்டின் பல பகுதிகளில் நிறைய பேர் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள்.

''பெரியவர்கள் முன்னால் எங்கள் தலையை சேலை அல்லது துப்பட்டாவால் மூடிக் கொள்வோம். பெரியவர்களை நாம் மதிக்க வேண்டும்... எனது மருமகளும் அதைச் செய்கிறார்... என் குடும்பத்தில் அனைத்துப் பெண்களும் இதைச் செய்கிறார்கள்.'' (பெண், 57, உதய்ப்பூர்)

''பிராமணராக இருப்பதில் நான் பெருமைப் படுகிறேன். தினமும் 2 மணி நேரம் நான் பூஜை செய்கிறேன். அமைதி மற்றும் முன்னேற்றத்துக்காக நாளைக்கு எங்கள் வீட்டில் யாகம் நடைபெறுகிறது.

என் பிள்ளைகளுக்கு இதையெல்லாம் கற்றுத் தருவதற்கு என்னால் முடிந்த வரையில் முயற்சி செய்கிறேன். தினமும் 2 மணி நேரம் இல்லாவிட்டாலும், காலையில் 15-20 நிமிடங்கள் அவர்கள் வழிபாடு செய்கிறார்கள் என்பதை நான் உறுதி செய்கிறேன்.'' (ஆண், 40, ராஜ்கோட்)

இந்து/இந்துத்வா முற்போக்கு கருத்துள்ளவர்கள்

இந்திய அரசியல் காட்சிகளைக் காணும் மேற்கத்திய பார்வையாளர்களுக்கு, இந்த வார்த்தை முரண்பட்டதைப்போல தோன்றலாம்.

ஆனால், இந்தக் குழு இந்துத்வ சித்தாத்தங்கள் கொண்டவர்களாகவும், இந்தக் குழுவில் உள்ளவர்கள் சமூகத்தில் முன்னேற்ற சிந்தனை உள்ளவர்களாகவும் (இந்து அடிப்படைவாதிகளுடன் ஒப்பிடும்போது) இருக்கிறார்கள்.

வழக்கமாக இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினருக்கு இடையில், குருட்டுத்தனமான நம்பிக்கை, பின்னுக்கு இழுக்கும் செயல்பாடுகள், கடுமையான மதப் பழக்கங்கள் குறித்து அதிகம் யோசித்து முடிவெடுக்கிறார்கள்.

அவர்கள் - தங்களுடைய உணர்வுகளின்படி - அதிக 'நவீனமானவர்கள்' என நினைக்கிறார்கள்: உதாரணத்துக்கு காதல் திருமணம் பற்றிய எண்ணத்தை திறந்த மனதுடன் வரவேற்கிறார்கள்.

பெண்கள் வேலைக்குச் செல்வதை ஆதரிக்கிறார்கள். தங்களுடைய நவீனத்துவத்தின் முக்கிய குறியீடாக இதை ஆண்கள் நினைக்கிறார்கள்.

மாட்டிறைச்சிக்கு தடை விதிப்பதை அரசியலாக்கியது தேவையற்றது என்றும் அவர்களில் சிலர் கருதுகின்றனர்.

ஆனால் புதிய பேஷன், தொழில்நுட்பம், உணவு மற்றும் சமூக உடகங்களில் அவர்கள் ஈடுபாடு கொண்டுள்ள போதிலும், 'மேற்கு நாடுகளில்' வாழ்வு முறை நிறைய கெடுதல்களை செய்வதாகக் கருதுகிறார்கள்.

அளவு கடந்த சுதந்திரம் அவர்களுடைய வீழ்ச்சிக்குக் காரணமாகிவிட்டது அல்லது மரபுகள் அழிவதற்குக் காரணமாக இருந்துவிட்டது என்று கருதுகிறார்கள்.

இதனால் தங்களுடைய கலாசாரம் அல்லது மத அடையாளங்களைப் பாதுகாப்பதில் அவர்கள் கூடுதல் கவனமாக இருக்கிறார்கள்.

மதம் - கலாசார மரபுகளை அவர்கள் கொண்டாடுகிறார்கள், சமூக ஊடகங்களில் முன்னிறுத்துகிறார்கள். இதைச் செய்வதற்கு சமூக ஊடகங்கள் முக்கியமான தளமாக உள்ளன.

ஆனால், பெருமையோடு இணைந்ததாகவும் அது இருக்கிறது. தங்களுடைய நாடு மற்றும் கலாசாரம் பெரியது என்ற உணர்வாக அது மாறுகிறது. கலாசாரத்தில் நிறைய நல்லவை இருக்கின்றன, அவை இப்போது குறைந்துவிட்டன.

அதை மீட்டால் நாடு இழந்த பெருமையை மீட்க முடியும் என்று அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். அதேசமயத்தில், 'மற்றவற்றால்' கலாசாரத்தில் கெட்ட கலப்பு ஏற்பட்டுவிட்டது, நீர்த்துப் போய்விட்டது அல்லது அழிந்தேகூட போய்விட்டது என்ற அச்சம் அவர்களுக்கு இருப்பதால், அதுபோன்ற விளைவுகள் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அதன் பாதுகாவலர்களாகக் கருதுகிறார்கள்.

தங்களைவிட பெரிய ஒரு நோக்கம் இருப்பதாக கருதுகிறார்கள் - இந்து சமுதாயம் மற்றும் நாட்டுக்கு ஆக்கபூர்வமான மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்று கருதுகிறார்கள்.

இந்த செயல்முறையில், ஒருமித்த கருத்து உள்ளவர்களின் குழுக்களை, விவரிப்பு அல்லது தொலைநோக்கு என்பதில் ஈர்க்கப்படாதவர்களை விட்டுவிட்டு, கட்டமைப்பு செய்பவர்களாக தங்களை அவர்கள் கருதுகிறார்கள்.

இந்தியாவில் பெரும்பாலான திருமணங்கள் `காதல் திருமணங்களாக' இல்லாமல், குடும்பத்தினரால் `ஏற்பாடு' செய்யப்பட்ட திருமணமாகவே இன்னும் இருக்கின்றன.

வெளிநாட்டு பார்ப்பவர்களுக்கு இது பழமைவாதமாகத் தெரியும். 2013ல் நடந்த ஒரு கருத்துக்கணிப்பில், 18 முதல் 35 வயதுக்கு உள்பட்டவர்களுக்கு 74% பேர் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணங்களையே விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்தக் குழுவுக்கும், இதற்கு முந்தைய குழுவுக்கும் (இந்து/ இந்துத்வா அடிப்படைவாதிகள்), இந்துக்கள் என்பவர்கள் ஏறத்தாழ இந்தியாவுடன் அடையாளம் காணப்படுபவர்களாக இருக்கிறார்கள் என்பதை இங்கே குறிப்பிட வேண்டியது அவசியம்.

ஆனால், மத ரீதியாக தூண்டப்பட்ட சகிப்பின்மையை இந்தக் குழுவில் பெரும்பகுதியினர் ஆதரிக்கவில்லை என்பதையும் இங்கே குறிப்பிடுவது அவசியமாகிறது. சிறுபான்மையினர் குறித்த, குறிப்பாக மத சிறுபான்மையினர் குறித்த, இன்னும் குறிப்பாக முஸ்லிம்கள் குறித்த அவர்களுடைய போக்கு, எதிர்ப்பு நிலையால் உருவானது கிடையாது.

முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் சுதந்திரங்களை உறுதி செய்யக் கூடிய ஒட்டுமொத்த வல்லமை மிக்கதாக இந்து மதம் இருக்கிறது என்ற கருத்தாக அது உள்ளது. இந்தியாவில் எந்தவொரு மதமும் இந்து என்ற குடையின் கீழ்தான் உள்ளன - என்ற இந்தச் சிந்தனை - இந்து தேசியவாத சித்தாத்தத்தில் ஆழமாக வேரூன்றி இருக்கிறது.

இன்றைய இந்தியாவில், சில இந்து / இந்துத்வா முன்னேற்றகர கருத்து உள்ளவர்கள் மத்தியில் இது சிறிது பெரும்பான்மையினர் மனப்போக்காகக் காணப்படுகிறது.

வாட்ஸப் குழுக்களில் `பிறரை' சேர்ப்பதில் - அல்லது மற்றபடி தனிப்பட்ட முறையில் பொதுவாக அவர்களுடன் தொடர்பு கொள்வது - ஆகியவற்றில் ஆர்வம் இல்லை என்பதை நாங்கள் கண்டோம்.

மேலும், கலப்புத் திருமணம் அல்லது ஒன்று சேருவதில் குறிப்பிட்ட எதிர்ப்பு இருப்பதையும் கண்டோம். கடந்த காலங்களில் `முஸ்லிம்' ஆட்சியாளர்களால் இந்துக்களுக்கு எதிராக தவறுகள் நடந்திருக்கின்றன என்ற உணர்வு இருந்தாலும், அல்லது மத்தியில் மற்றும் மாநிலங்களில், பாஜக அல்லாத அரசுகள் முஸ்லிம்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவதாலோ, சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விடும் எந்த விருப்பமும் இந்தக் குழுவில் இருப்பதாக நாங்கள் காணவில்லை.

உண்மையில், இந்து தேசியவாதம் காரணமாக நடைபெறும் வன்முறைகள் பற்றி அவ்வப்போது ஊடகங்களில் வரும் செய்திகளை, இங்கு கருத்து தெரிவித்தவர்கள், விரும்பாத நிலை குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது.

பிரதமர் மோதியை தங்களுடைய சொந்த அடையாளம் மற்றும் தத்துவங்களின் அடையாளமாக இந்து / இந்துத்வா கருத்துள்ளவர்கள் பார்க்கிறார்கள்: அவர் முன்னேற்ற சிந்தனை உள்ளவர், ஆனால், இந்து கலாசாரம் என்று புரிந்து கொள்ளப்படக் கூடிய இந்திய கலாசாரத்தின் பெருமையை மீட்கும் நோக்கத்தில் உறுதியாக இருப்பவர் என்று கருதுகிறார்கள்.

இந்தக் குழுவுக்கு தங்களுடைய அடையாளத்தில் உள்ள நம்பிக்கைக் குறைபாடு ஏதும் இல்லை என்ற நிலையில், அவ்வப்போது அவர்களுக்கும் சந்தேகம் எழுகிறது.

விவாதங்களில் இருந்து முழுக்க தள்ளி இருப்பதில்லை. பிரச்சனைகள் குறித்து, குறிப்பாக அடுத்து வரும் இந்துத்வா போராளிகள் குழுவில் நாம் பார்க்கப் போவதைப் போல அல்லாமல், எதிர்பாராத எதிர்வினைகள் இருக்கின்றன. (உதாரணத்துக்கு ``மாட்டிறைச்சி தடை'' என்பதற்கு கீழே உள்ள கமெண்ட் பார்க்கவும்).

நாட்டில் மூன்று குழுக்களில் இந்தக் குழுதான் மிகப் பெரியது என்று நாங்கள் நம்புகிறோம். இது தரம் சார்ந்த விரிவான ஆய்வுத் திட்டமாக இருந்தாலும், இதை நிச்சயமாக நாங்கள் கூற முடியாது.

``என் தாயாரும், மாமியாரும் சேலைதான் கட்டுகிறார்கள். ஆனால், நான் அவர்களைப் போல இருக்க விரும்பவில்லை. எனக்கு சுதந்திரம்தான் பெரிய விஷயம். கடந்த காலங்களில் சுதந்திரம் கிடையாது. கட்டுப்பாடுகளுடன் இருப்பது எனக்குப் பிடிக்காது. எனவே, என் பிள்ளைகளுக்கு முழு சுதந்திரம் இருக்க வேண்டும் என்பதை நான் உறுதி செய்கிறேன்.'' (பெண், 33, ராஜ்கோட்)

அனைத்து மரபுகளையும் உங்களால் கடைபிடிக்க முடியாது. நான் வேலைக்கு வெளியில் சென்றால், மற்ற சமூகத்தவர்களை என்னைத் தொடக்கூடாது என்று கேட்டுக் கொள்ள முடியாது (சம்பிரதாய சுத்தம்). காலத்துக்கு ஏற்ப நாம் மாறிக்கொள்ள வேண்டும்'' (ஆண், 25, விஜயவாடா)

இருபதாம் நூற்றாண்டின் இந்து தேசியவாத அரசியல் மற்றும் இந்து தேசியவாதம் அல்லாத சக்திகளிடம் அதற்கான குழப்பமான எதிர்வினை ஆகியவை மிகவும் சிக்கலான தலைப்பாக இருப்பதால், இங்கே அதிகம் பேசுவதற்கு சாத்தியமில்லை. மறுபடியும், இதுகுறித்து Jaffrelot (1996) and Blom Hansen (1999) - சிறந்த புத்தகங்களில் இரண்டாக உள்ளன.

இந்தியா மதச்சார்பற்ற நாடு. எங்களுக்குப் பிடித்த மதத்தைப் பின்பற்ற, போதிக்க, செயல்முறைப்படுத்த எங்கள் அனைவருக்கும் சுதந்திரம் உள்ளது. மக்களுக்குப் பிடித்தால் சாப்பிடுவார்கள். பிடிக்காவிட்டால் சாப்பிட மாட்டார்கள். சட்டங்கள், ஒழுங்குமுறைகள் மூலம் சாப்பிடும் பழக்கத்தை கைவிடுமாறு கட்டாயப்படுத்துவது சரி என்று எனக்குத் தோன்றவில்லை. அது விருப்பத்தின் அடிப்படையில் வர வேண்டும், கட்டாயத்தின் பேரில் வரக் கூடாது. ஒருவர் அசைவம் சாப்பிடுபவர் என்றால், எதைச் சாப்பிடுகிறார் என்பது கேள்வியே கிடையாது. திறந்த மனதுடன் கூடிய சிந்தனைகளை தாராளமாக அனுமதிக்கும் நாடு இந்தியா. அதுபோன்ற விருப்ப உரிமைகளைத் தடுப்பது சரியானதல்ல. அவர்களுக்குப் பிடித்ததைச் செய்யட்டும். திறந்தவெளிகளில் விலங்குகளை வெட்டக் கூடாது, திருடக் கூடாது என்பது போன்ற வரம்புகளை நாம் நிர்ணயிக்கலாம். நாம் சுதந்திரமானவர்கள். நமக்கான முடிவுகளை எடுக்க அனுமதிக்க வேண்டும். இதில் அரசாங்கம் தலையிடக் கூடாது.'' (ஆண், 41, டெல்லி)

``எல்லா பண்டிகைகளையும் நாங்கள் கொண்டாடுகிறோம். இன்றைக்கு பாச் பரஸ். குடும்பத்தில் உள்ள ஆண்களுக்கு எனது தாயார் டிகா85 செய்வார். இந்த நாளில் நாங்கள் பசுவை வழிபடுவோம். ஏன் இதைக் கொண்டாடுகிறோம், எப்படி கொண்டாடுகிறோம் என்பதை மற்றவர்களுடனும் பகிர்ந்திருக்கிறேன். இந்தக் கொண்டாட்டத்தின் பின்னணியில் உள்ள அவசியம் மற்றும் காரணத்தை அவர்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பகிர்ந்திருக்கிறேன். ஒவ்வொருவரும் இவை அனைத்தையும் அறிந்து கொள்ள வேண்டும், அது நமது தர்மம்'' (ஆண், 34, உதய்ப்பூர்)

``அவர்கள் கண்மூடித்தனமாக மேற்கத்திய கலாசாரத்தைப் பின்பற்றுகிறார்கள்... ஆங்கிலத்தில் நன்கு பேசக்கூடிய திறமை இருப்பது நல்லது தான். ஆனால், வேர்களை மறந்துவிடக் கூடாது... பெங்காலி பேச முடியாமல் அல்லது படிக்க முடியாமல் இருப்பது நல்லதல்ல...'' (ஆண், 37, கொல்கத்தா)

இந்து மதம் அனைத்து மதங்களையும் அரவணைப்பது போல வேறு எந்த மதமும் கிடையாது. இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு இந்தியாவில் உள்ளதைப் போல, வெளிநாடுகளில் இவ்வளவு மரியாதை கிடைக்காது. அதனால் தான் முஸ்லிம், கிறிஸ்தவர் என எல்லா மத மக்களும் இங்கு வாழ்ந்தாலும், தங்களை முதலில் இந்தியர் என்று கூறிக் கொள்கிறார்கள். ஏன் அப்படி சொல்கிறார்கள் என்றால் இந்தியா மீதான பாசம் தான் காரணம். ஒரு சகோதரத்துவம் இருக்கிறது. சீக்கியர்கள் அல்லது முஸ்லிம்கள் அல்லது கிறிஸ்தவர்கள் போன்றவர்களை கோவில்களில் காண முடியும். சாவனில் ஒரு கண்காட்சி நடந்தது. நான் கோவிலுக்குச் சென்றேன். 35-40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி என்னிடம் வந்து, சிவலிங்கம் எது, கணேசன் எது, பார்வதி எது என்று கேட்டார். அந்தப் பெண்மணி இந்து கலாசாரத்தைப் பின்பற்றுபவராக இருக்க வாய்ப்பில்லை. அவர் வேறு ஏதாவது மதத்தைச் சார்ந்தவராக இருக்கலாம். அப்படியிருந்தும் கோவிலுக்கு வருகிறார் என்றால், அவர் இந்தியர் என்பது தான் அதற்குக் காரணம்'' (ஆண், 34, அமிர்தசரஸ்)

படத்தின் காப்புரிமை Getty Images

இவர்கள் இந்துத்வா சித்தாந்தத்தை தங்கள் தோள்களில் அணிந்திருப்பவர்கள். தங்களது அடையாளத்தை ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆக்கிக் கொண்டவர்கள்.

கலாசாரம் நீர்த்துப் போவது என்ற உணர்வை சுற்றியதாக பெரும்பாலும் இருக்கும். மிக முக்கியமாக, அவர்களுடைய நிலைப்பாடு - மற்றும் அதனால் அவர்களுடைய தகவல் தொடர்பு மற்றும் பகிர்தல் போக்கு ஆகியவை - மற்றவர்களின் நிலைக்கு - தீவிரமான எதிர்ப்பு நிலையாக இருக்கும்.

தீவிரமான உணர்வுகளுடன் அவர்கள் ஈடுபடுகிறார்கள். இந்தத் தொனி அவர்கள் பகிரும் செய்திகள் மற்றும் தகவல்களிலும் பரவி இருக்கும். இவர்களுடைய பல தகவல்களில் உள்ள விஷயங்களும், அவற்றில் உள்ள தொனியும் பற்றவைக்கும் தொனியின் காரணமாக பெரும்பாலும் இந்தக் குழுவினர் வெளிச்சத்திலேயே இருப்பார்கள்.

அவர்கள் பகிரும் தகவல்கள் உறுதியாக புண்படுத்தும் வகையில் இருக்கும். புண்படுத்த வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டதாக இருக்கலாம்.

இந்த வகையான தகவல்கள் மிகப் பெரும்பாலும், குறிப்பாக வாட்ஸப் குழுக்களில் பகிரப்படும் - இவற்றை குடும்ப குழுக்களில் பகிராமல், வாட்ஸப்பில் உருவாக்கிய அரசியல் குழுக்களில் பகிர்வதில் இந்துத்வா போராளிகள் கவனமாக இருப்பார்கள்.

இங்கே வரையறுக்கப்பட்ட அனைத்து குழுக்களிலும், இந்துத்வா போராளிகள் குழுவினர் ட்விட்டரில் இருக்க வாய்ப்பு உண்டு. போருக்கான போர்க்களமாக அதை அவர்கள் பார்க்கிறார்கள். (இந்துத்வா போராளிகள் பெண்களைவிட பெரும்பாலும் ஆண்களாக இருக்கிறார்கள்).

வெளிப்படையாகச் சொன்னால் இந்த விளக்கங்கள் உயிரியல் ரீதியிலானவை அல்ல, சமூகவியல் சார்ந்தவை. இந்து அமைப்பில் கடந்த சில பத்தாண்டுகளில் உக்கிரமான, உணர்வைத் தூண்டும் சில சொற்பொழிவுகள் பெண்களால் நிகழ்த்தப்பட்டவை என்பதைக் கவனிக்க வேண்டும். (உதாரணமாக சாத்வி ரிதம்பரா).

மேலே வெளிக்கோடிட்டுக் காட்டியதைப் போல இந்தக் குழுவினருக்கு வெவ்வேறான குணாதிசயங்கள் உண்டு என்ற நிலையில், இந்துத்வா சொற்பொழிவால் `இந்து' விஷயங்களாக, `முகமன்'87 கொண்டவர்களாக இருக்கிறார்கள். இது இந்து உள்ளுணர்வில் குறிப்பிட்டவகையினராக, சாதாரணமாக உயர்சாதியினராக88, வட இந்தியர் மற்றும் பிராமணியர்களாகவும் இருக்கிறார்கள்.

`இடதுசாரிகளின்' சமூகப் பொருளாதார அடையாளங்கள்

சில வகைகளில் பார்த்தால், சரியான இடதுசாரி என்பவர் , சாதாரண குடிமக்களில் களநிலையில் குறைவாகத்தான் உள்ளனர். கருத்து தெரிவிப்பவர்களை நாங்கள் தேர்ந்தெடுக்கும் செயல்முறையின்போது, அரசியல் பார்வையில் தீவிர இடதுசாரிகளைக் கண்டறிவதைவிட, வலதுசாரிகளைக் கண்டறிவது மிகவும் எளிதாக இருந்தது. 89 எனவே `இடதுசாரி' என்ற வார்த்தையை மேற்கோளிட்டுப் பயன்படுத்த நாங்கள் முடிவு செய்தோம். இந்தக் குழுவினர் உண்மையிலேயே `இடதுசாரிகளாக' இல்லாமல், வலதுசாரிகளை எதிர்க்கும் போக்கு உள்ளவர்கள் என்று வரையறை செய்வதற்கான வழியாக இது இருக்கிறது.

மேலே விவரித்த மூன்று குழுக்களைப் போல, இந்து என்ற குறிப்பிட்ட வழியில் ஒன்று சேர்ந்திருப்பதைப் போல அல்லாமல், இடதுசாரி பக்கம் உள்ள நபர்களிடம், வலதுசாரி எதிர்ப்பு என்பதைத் தவிர பொதுவான பிணைப்பு எதுவும் இல்லை என நாங்கள் கண்டோம். ஒன்றுபட்ட விவரிப்பின் அடையாளத்தில் அவர்கள் வரவில்லை. ஆனால் குறிப்பிட்ட விஷயங்களைச் சுற்றி எப்போதாவது அவர்கள் ஒன்று சேருவார்கள்; வலதுசாரி குழுக்களைப் போல இல்லாமல், இவர்களுடைய இருப்பை உருவாக்குவதற்கு அடித்தளமாக விவரிக்க எதுவும் கிடையாது.

வலதுசாரிகளுக்கு எதிராக நிற்பதற்கு நான்கு வழிகள் இருப்பதாக எங்களது களப்பணியில் நாங்கள் கண்டோம்:

1. மோடி எதிர்ப்புக் கொள்கைகள்:

அடையாளம் அல்லது சித்தாந்தத்தைக் காட்டிலும் குறைபாடுகள் மீது கவனம் செலுத்துவது. பெரும்பாலும், ஜி.எஸ்.டி. அறிமுகம் மற்றும் பண மதிப்புநீக்கம் போன்ற நடவடிக்கைகளால் ஏற்பட்ட கோபத்தால் அல்லது கொள்கைகளால் ஏற்பட்ட பாதிப்பால் உருவான உணர்வால் உந்தப்பட்டதாக இருக்கும்.

அல்துசேரியன் கொள்கை என்ற அர்த்தத்தில் இந்த வார்த்தை இங்கே பயன்படுத்தப் படுகிறது.

இந்துத்வா எதிர்ப்பு:

பா.ஜ.க.வின் இந்து தேசியவாதத்துக்கு எதிராக தங்களை `மதச் சார்பற்றவர்களாக'க் கூறிக் கொள்பவர்கள் மற்றும் தங்களுடைய பாதுகாப்பு பற்றி கவலை கொண்டுள்ள சிறுபான்மையினர், மற்றும் சொல்லப் போனால் இன்றைய இந்தியாவில் உள்ள பிரிவினர்.

3. மோடி மனோபாவத்துக்கு எதிர்ப்பு:

ஆரம்பத்தில் மோடிக்கு வாக்களித்திருப்பார்கள். ஆனால் தெளிவான மாற்றம் எதுவும் இல்லாததால் இப்போது ஏமாற்றம் அடைந்திருப்பார்கள்.

4. காங்கிரஸ் / பிற கட்சிகளுக்கு ஆதரவு:

மற்ற கட்சிகளின் ஆதரவாளர்களாக நீண்ட காலமாக இருப்பவர்கள், இன்னும் அதே நிலையில் தொடர்பவர்கள்.

இந்தத் தனிநபர்களுக்கு அடையாளங்கள் இல்லை என்று சொல்வதற்காக அல்ல. ஆனால், அவர்களுடைய அடையாளங்கள் உள்ளூர் அளவில் செல்வாக்கு பெற்றுள்ளன. அமைவிடம் சார்ந்த அடையாளங்களாக (அதாவது தமிழ், பெங்காளி என) அல்லது மதச் சிறுபான்மையினர் என (உதாரணம் - கிறிஸ்தவர், இஸ்லாமியர்)வரையறுக்கப்பட்ட அடையாளங்களாக, அல்லது சாதி அந்தஸ்து (உதாரணம் - தலித்கள்), அல்லது இறுதியாக மதச்சார்பற்றவர் என்பதாக அடையாளங்களைக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தக் குழுக்கள் அடையாளங்களைச் சுற்றி ஒன்றிணைவயாமல், குறிப்பிட்ட விஷயங்களின் அடிப்படையில் ஒன்றிணைகிறார்கள் என்பது உண்மையாக இருந்தாலும், அதற்கும் மேலாக, இந்தக் குழுக்களில் (தலித் என வைத்துக் கொண்டால்) அடையாளமாக இருக்கும் முக்கிய விஷயமாக இருப்பது மற்ற குழுக்களால் `பிரச்சினைகள்' என பெரும்பாலும் நிராகரிக்கப்படுகின்றன நாம் காண்கிறோம்.

``(மோடி வந்த பிறகு) இந்தியாவின் சர்வதேச அந்தஸ்து உயர்ந்திருக்கிறது என்று சிலர் சொல்வது உங்களுக்குத் தெரியும். வறுமை மற்றும் பாம்பு பிடிப்பவர்கள் நிலைக்கும் அப்பாற்பட்டு நமக்கு ஓர் அடையாளம் இருக்கிறது - ஆனால் ரோம் நகரம் ஒரே நாளில் உருவாக்கப்பட்டு விடவில்லை. அதற்காக ஏராளமானவர்கள் பங்களிப்பு செய்திருக்கிறார்கள். மோடி மிக நல்ல மார்க்கெட்டிங் செய்பவர்.'' (ஆண், 27, மும்பை)

``இந்த அனைத்துப் பெரிய திட்டங்களும், மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா அனைத்தும் பிரதமரின் பேச்சுகளில் மட்டுமே உள்ளன. எதையும் செயல்பாட்டில் காண முடியவில்லை. பாஜக அல்லாத மாநிலங்களை விலக்கி வைப்பதற்காகவே இதுபோன்ற திட்டங்கள் வடிவமைக்கப் பட்டுள்ளன.'' (பெண், 24, விஜயவாடா)

அனைவரையும் ஒன்று சேர்க்கும் தன்மை இல்லாத இந்த அடையாளம், வழக்கமாக பிரச்சினைகளைச் சுற்றி செய்திகளில் ஈடுபாடு காட்டுவதாகவும், பகிர்வதாகவும் இருக்கிறது. ஒரு செய்திக்கான நிகழ்வு ஏற்படும் போது, பகிர்தல் செயல்பாடு அதிகரிக்கிறது. செய்திச் சுழற்சி குறையும் போது அவர்களுடைய பகிர்தலும் குறைகிறது. அவர்கள் குறிப்பாக எதைப் பகிர்கிறார்கள் என்பது பற்றி பிற்பகுதியில் இன்னும் விரிவாக நாம் கருத்தாடல் செய்வோம். ஆனால், ஆழமான அல்லது தொடர்ந்து ஒத்திசைவை ஏற்படுத்தக் கூடியதாக அல்லாமல், பிரச்சினைகளின் அடிப்படையில் தான் பகிர்தல் முன்னெடுக்கப்படுகிறது என்பது நினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயமாக உள்ளது (உளவியல் ரீதியாகக் கூறினால்).

அரசியல் ரீதியாக இதன் அர்த்தம் என்ன என்பது, இந்த ஆய்வறிக்கையின் வரம்புக்கு அப்பாற்பட்டது. ஆனால், டிஜிட்டல் பகிர்தல் தளங்களில் போலிச் செய்திகள் பரவுதலில் இது முக்கியமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.

பங்கெடுப்பு இல்லாதது

மேற்குறிப்பிட்ட கருத்தாடல்கள், வலது அல்லது வலது அல்லாதது என்ற வகைப்பாடுகளில் வரும் ஒவ்வொருவரும் எல்லா நேரத்திலும் பகிர்தல் செயல்பாட்டில் ஈடுபடுகிறார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இருக்கக் கூடாது.

உண்மையில், வலது மற்றும் அவர்களின் எதிர்ப்பாளர்களில், மிதமான செயல்பாடு உள்ள இன்னொரு குழுவும் இருக்கிறது. இது நிச்சயமான `மையக் கருத்து' நிலைப்பாடகவோ அல்லது டோனிபிளேர் / கிளின்டன் ஆதரவு போன்ற `மூன்றாவது வகையாகவோ' கருத முடியாது.91 அரசியல் செய்திகள் மற்றும் செய்திச் சுழற்சியில் பங்கெடுப்பு இல்லாதவராக இருப்பார்கள்.

தாங்கள் பகிர்வதைவிட அதிகமாக விஷயங்களை கிரகித்துக் கொள்பவர்களாக இருப்பார்கள்; அவர்கள் பகிரும்போது, ஏறத்தாழ செய்திகளையும், பாதிப்பு ஏற்படுத்தாது என தாங்கள் நினைப்பவற்றை `புதிய தகவல்களாக' , அவ்வாறு செய்வார்கள்.

அரசியல் செய்தியில் பங்கெடுத்துக் கொண்டு பகிர்ந்திடும்போது, நகைச்சுவையான/அரசியல் படங்கள் மற்றும் கார்ட்டூன்கள் அதிகமாக இருக்கும்: தங்களுடைய பின்னல் தொடர்பில் ஈடுபாட்டை ஏற்படுத்துவதற்காக இருக்குமே தவிர, தூண்டக் கூடியதாகவோ அல்லது அரசியல் பிரச்சினைகளில் இழுக்கக் கூடியதாகவோ இருக்காது.

பகிர்தலுக்கான காரணங்களுக்கு இப்போது நாம் திரும்பி வருவோம். (நினைவூட்டலுக்காக, பகிர்தலுக்கான முதல் இரு செயலூக்கங்களாக `சரிபார்த்தலுக்காக பின்னல் தொடர்புக்குள் பகிர்தல்' மற்றும் `பொதுக் கடமையாகப் பகிர்தல்' ஆகியவை குறிப்பிடப்பட்டன. )

II.3. சமுதாய - மற்றும் தேச - வளர்ச்சிக்காகப் பகிர்தல்

செய்தி / தகவல் என்பது முக்கியமான விஷயங்கள் (குறிப்பாக நாட்டின் வளர்ச்சிக்கானவை) குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகக் கருதப்படுகிறது. முக்கியமாக செய்திகளும், செய்திகளை சுழற்சியில் விடுவதும் ஒரே மாதிரியான கருத்துள்ள மக்களை ஒன்று சேர்க்கவும் `மற்றவர்களை' தள்ளி வைப்பதற்குமான செயல்பாடாக இருக்கிறது.

நிஜத்தைவிட பெரியதாக செய்வதற்கான - அவசியம் உள்ளதைப் போன்ற உணர்வு குறிப்பிட்ட குழுக்களில் அதிகமாகக் காணப்படுகிறது. ஆனால், வலதுசாரி ஆதரவு அடையாளத்தால் ஒன்றிணைக்கப்பட்ட தனிநபர்களிடம் மட்டுமின்றி, `வலது அல்லாத' சில குழுக்களிலும் இந்த அம்சம் உள்ளதை நாங்கள் கவனித்தோம். சொல்லப் போனால், ஐ.ஏ.எஸ். மற்றும் இடஒதுக்கீடுகள் பற்றி பகிரப்பட்ட தகவலை நாங்கள் பார்த்தபோது, பகிர்தல் என்பது விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் பங்கேற்பதாக இருக்கிறது என்ற நம்பிக்கை அதை உருவாக்கியவர்களுக்கும், பகிர்பவர்களுக்கும் இருப்பதைக் காண முடிந்தது.

குறிப்பிட்ட அந்த நபர் நம்பக் கூடிய, இந்தியாவுக்கான குறிப்பிட்ட சிந்தனையை உருவாக்கும் என்று அவர்கள் நம்புவதைக் காண முடிந்தது. இது அவசியமானது என்று அவர்கள் கருதுவதால், அந்த விஷயத்தின் உண்மைத் தன்மை சரியானது தானா என்று சரி பார்க்கும் தேவையைப் பெரும்பாலும் புறந்தள்ளிவிடுகிறது.

II.4. வெளிப்படுத்தல் & அடையாளத்தை முன்னிறுத்தலுக்காகப் பகிர்தல்

பகிர்தல் என்பது தகவல் தொடர்பு செயல்பாடு என்று கருதப்படலாம். ஆனால், இன்றைக்கு வாட்ஸப் மற்றும் முகநூலில், பகிர்தல் என்பது வெளிப்படுத்துதல் மற்றும் அடையாளத்தை முன்னிறுத்தலாக இருக்கிறது. தனிப்பட்ட பின்னல் தொடர்புகளில் நாம் காணும் பகிர்தல்களின் கணிசமான எண்ணிக்கைகளும் - அதன் தொடர்ச்சியாக பகிரப்படும் போலிச் செய்திகளின் எண்ணிக்கையும், மக்களின் அடையாளங்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்கானவையாக இருக்கின்றன. அடையாளப்படுத்தல் பணி வலதுசாரி தொடர்பில் மிக தீவரமாக நிகழ்கிறது. குறிப்பாக, தீவிர இந்து அடையாளத்தை மறுஉறுதிப்படுத்தும் வகையில் ஒவ்வொரு புதிய தகவலும் செயல்படும் போது அல்லது வலது அல்லாதவர்கள் விஷயத்தில் அவர்களுடைய சார்பு - அடையாளத்தை மறு உறுதிப்படுத்தலாக இருக்கும் போது இது வலுப் பெறுகிறது. மீண்டும் , தகவல் பகிர்தல், உண்மைதானா என சரிபார்த்தல் ஆகியவை தேவையற்றதாகிவிட்டன என்பது இங்கு முக்கியமான விஷயமாக உள்ளது

தொகுப்புரை: போலிச் செய்திகளின் விளைவுகள்

டிஜிட்டல் தளங்களில் பகிர்வது மிக அபூர்வமானதாக உள்ளது, அப்படி இருந்தாலும், அறிவார்ந்த விமர்சன கருத்தாடல்களில் ஈடுபடுவதாக அல்லாமல், தகவல் தெரிவிப்பதற்காக இருக்கிறது என்று நாங்கள் கண்டறிந்தோம்.

போலிச் செய்தி பகிர்தல் பரவலாக இரண்டு வழிமுறைகளில் நடக்கிறது: நேர்மையானவர்களால் ஓரளவுக்கு நல்ல எண்ணத்துடன் பொதுக் கடமையாகவோ அல்லது பின்னல் தொடர்பு மூலம் சரிபார்த்தலுக்காகவோ பகிர்வது முதலாவது வகை. சமுதாய மற்றும் தேச வளர்ச்சி அல்லது அடையாளத்தை முன்னிறுத்தல் என்ற நோக்கத்துக்கானது அடுத்ததாக உள்ளது.

தகவல்களில் உள்ள விஷயங்களைக் கண்டறிதலுக்கான அவசியம் தேவையற்றது என்ற நிலையில் இந்த இரு வழியிலான பகிர்தல்களும் நடைபெறுகின்றன. இதன் விளைவாக, பகிர்வதற்கு முன்பு, தகவலில் உள்ள விஷயத்தை சரிபார்த்தல் என்ற கேள்வியே எழுவதில்லை.

போலிச் செய்தித் தகவல்கள் கிரகித்தல் மற்றும் பகிர்தல் ஆகியவை எந்த அளவுக்கு அடையாளங்களை உருவாக்குகின்றன, அவற்றில் உள்ள விஷயம் மற்றும் கட்டமைப்பு குறித்து நாம் பிற்பகுதியில் விரிவாக கருத்தாடல் செய்வோம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :