போலிச் செய்தி என்பது என்ன? அடையாளத்தை உறுதிப்படுத்துவது உண்மைகளை சரிபார்த்தலை மிஞ்சுவது எப்படி?

போலிச் செய்திகள்

போலிச் செய்தி என்பது என்ன? அடையாளத்தை உறுதிப்படுத்துவது உண்மைகள சரிபார்த்தலை எப்படி மிஞ்சி நிற்கிறது என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

குடிமக்களின் பார்வையில், `போலிச் செய்திகள்' என்பது என்ன என்று புரிந்து கொள்வதற்கு இப்போது நாம் தயாராக இருக்கிறோம். இந்த நிலைக்கு எப்படி வந்தோம் என்பதற்கு சிறிது விளக்கம் தேவைப்படுகிறது.

ஆய்வில் பங்கேற்றவர்கள் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் பற்றி சேகரிக்கப்பட்ட தகவல்களின் நோக்கம் என்னவென்று அவர்களுக்குத் தெரிவிக்கப்படாத வகையில் இந்த ஆய்வுத் திட்டத்தின் முக்கியமான பகுதி வடிவமைக்கப் பட்டிரு்தது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

போலிச் செய்திகள் அடுத்தடுத்த நிலைகளில் விரிந்து பரவுதலைப் புரிந்து கொள்ள முயற்சிப்பதற்கான ஒரு ஆய்வுத் திட்டமாக இது உள்ளது. உண்மையில், பெரும் பகுதியில், நேர்காணல்களை நடத்துபவர்கள் `போலிச் செய்திகள்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தவே இல்லை.

கருத்து தெரிவித்தவர்களாக போலிச் செய்தி என்று கூறும் வரையில் நேர்காணல் செய்தவர்கள் இந்த வார்த்தையைப் பயன்படுத்தவில்லை. நேர்காணலின் இறுதியை நெருங்கும் வரையில், கருத்து தெரிவித்தவர்கள் இந்த வார்த்தையைப் பயன்படுத்தாமல் இருந்தால், அப்போது நேர்காணல் செய்பவர் இந்த வார்த்தையை முன்வைப்பார்.

செய்திகள் மற்றும் தகவல்கள் பற்றி குடிமக்களின் கருத்தாடலில் போலிச் செய்தி என்ற வார்த்தை எந்த அளவுக்கு முக்கியமானது, அவர்கள் அதை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளும் நோக்கத்தில், வேண்டுமென்ற இப்படி தெரிவு முறை அமைக்கப்பட்டது.

இந்திய மக்கள் போலிச் செய்தி பற்றி அவ்வளவாகக் கவலைப்படுவது கிடையாது என்று எங்களுடைய பகுப்பாய்வு தெரிவிக்கிறது; தன்மைகள் பற்றிய கணக்கெடுப்பில் அவர்கள் என்ன சொன்னாலும் அதுபற்றி பெரிதாகக் கவலைப்படுவதில்லை.

முதலில், `போலிச் செய்தி' என்ற வார்த்தையின் நடைமுறை ரீதியிலான வரையறை அல்லது தொடக்க நிலை தொடர்பு என்பது ஊழல்களுடன் மட்டும் (அனைத்து வகையான திட்டங்கள், சலுகைகள் மற்றும் கெடு முயற்சிகள்) தொடர்புடையதாக இருந்தது.

அவை இயல்பாக வரக் கூடியவையாக, அல்லது அருமையானது என்ற வகையில் வரக் கூடிய தகவல்களாக, நம்புவதற்கு மிகவும் அரிதான தகவல்களாக இருக்கின்றன.

ஊழல் தகவல்கள் மற்றும் அருமையான தகவல்களுடனான இந்த உடனடி தொடர்பு, கடந்த காலத்தில் ஒரு லிங்க் -ல் கிளிக் செய்து அல்லது ஒரு நம்பரைப் பகிர்வு செய்து அதன் தொடர்ச்சியாக குப்பைத் தகவல்களாக மாறி அல்லது அருமையானது என்று பகிர்ந்த சிலவற்றால் சமூக சங்கடத்துக்கு ஆளானது என்ற அனுபவத்தைப் பெற்றிருக்கிறார்கள் என்பது வழக்கமானதாக இருக்கிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த இரு வகைகளில் ஒன்றுகூட அரசியல் அல்லது `கனமான' செய்திகளின் வரம்புக்குள் வரவில்லை. இந்த வகையான `போலிச் செய்திகளை' உருவாக்குவது யார் என்று குடிமக்கள் அதிகம் சிந்திக்கவில்லை.

சீக்கிரத்தில் பணம் சம்பாதித்தல், அல்லது தவறான வழிகளில் மக்களின் தனிப்பட்ட தகவல்களை சேகரிக்கும் முயற்சியில் `மார்க்கெட் செய்பவர்கள்' என்ற வகையினரா என்று யோசிப்பதில்லை.

இருந்தபோதிலும், துருவிக் கேட்டால், அல்லது தீவிரமான கலந்துரையாடலின் போது, தங்களுடைய சமூக-அரசியல் அடையாளங்களுடன் அல்லது தீவிரமான நம்பிக்கைகளுடன் உரசும் விஷயங்களை அவர்கள் `பொய்யானவை' என்று குறிப்பிடுகிறார்கள்.

வழக்கமாக இவை அரசியல், கொள்கைகள், ஆளுமை கொண்டவர்கள் மற்றும் கலாசாரம் தொடர்பானவையாக இருக்கின்றன.

வழக்கமாக, போலிச் செய்திகள் என்பவை அரசியல் கட்சிகளால் உருவாக்கப்படுபவையாக உள்ளன. ஆளும் கட்சியின் நன்மதிப்புக்கு ஊறு விளைவிக்க எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாகவும், தங்களுடைய நிலைப்பாட்டை நியாயப்படுத்தும் ஆளுங்கட்சியின் முயற்சியாகவும் உள்ளன.

விளைவுகளைப் பற்றி கவலைப்படாத விஷயமாக ஓரளவுக்கு இருக்கிறது: அரசியல் கருத்து மோதல்கள் இப்படித் தான் நடக்கின்றன.

எனவே, நீங்கள் ஆதரிக்கும் அரசியல் கட்சியிடம் இருந்து வரும் பெரும்பாலானவை உண்மை என்றும், எதிர்தரப்பில் இருந்து வருபவை `போலிச் செய்தி' என்றும் கருதப்படுகின்றன.

மிகவும் எளிமையான இந்த கருத்தேற்ற முறைமைக்கு அப்பாற்பட்டு, போலிச் செய்தி என்ற உணர்வு பெரிய பிரச்சினையாகக் கருதப்படவில்லை. - அல்லது இன்னும் முக்கியமாக, ஒன்றுபட்டு தீர்வுகாணும் ஒரு சமூகப் பிரச்சினை என்ற உணர்வு காணப்படவில்லை.

அரசியல் ரீதியாக ஒருமுகப்படுத்தப்பட்ட இந்த போலிச் செய்தி இயல்புக்கு உடனடி விளைவைத் தாண்டிய எந்தத் தொடர்பும் இல்லை. சொல்லப் போனால், வன்முறைகளுடன் தொடர்புள்ள போலிச் செய்தித் தகவல்கள் அதிக அளவில் தெளிவில்லாமல் இருக்கின்றன - மற்றும் தாங்களாக அறிந்தவையாக இல்லாமல் ஊடகத் தகவல்களை மேலோட்டமாக நினைவுபடுத்துவதாக இருக்கின்றன.

எது உண்மை, எது உண்மையில்லை என்ற வித்தியாசத்தைக் கண்டுபிடிப்பது கடினமாக மாறிவருகிறது என்பது நிச்சயமாக உணரப்படவில்லை. பல வழிகளில், உண்மை எது, பொய் எது என்று பிரித்துப் பார்ப்பதில் தன்னுடைய திறமை குறித்து அளவுக்கு மிஞ்சிய மதிப்பீடு காணப்படுகிறது.

ஆய்வுத் திட்ட நடைமுறையில், சில உண்மையான மற்றும் பொய்த் தகவல்கள் கருத்து தெரிவித்தவர்களிடம் காண்பிக்கப்பட்டன.

ஏறத்தாழ, ஒருவர் கூட போலிச் செய்திகளை அடையாளம் காணவில்லை. ஆனால், சரியானதாகத் தோன்றிய சில செய்திகள் மற்றும் செய்தி மூல ஆதாரங்களையும் கூட அவர்கள் பொய்யானவை என்று கருத்து தெரிவித்தார்கள் என்பதுதான் மிகவும் கவலைக்குரியதாக நாங்கள் கவனித்த விஷயமாக இருந்தது.

இதுவரை நாம் கருத்தாடல் செய்ய அனஐத்து விஷயங்களையும் திருப்பிப் பார்த்தால், இது ஏன் இப்படி இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். இறுதியாக, தகவல் ஆப்கள் மற்றும் சமூக ஊடகங்களில் குடிமக்கள் ஆற்றும் முக்கிய பணி அர்த்தமுள்ள விமர்சன விவாதம் மற்றும் கருத்தாடலாக இல்லை என்று தெரிகிறது.

தங்களுடைய நம்பிக்கைகளை உறுதிப்படுத்தும் விஷயங்களை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். மேலும், வரையறையின்படி, நம்பிக்கைகள், உண்மைகளைப் பற்றியதாக இல்லை.

படத்தின் காப்புரிமை SEAN GALLUP/GETTY IMAGE

அப்படியானால், இந்தத் தளங்களில் அடையாளங்களை உறுதிப்படுத்தும் செயலால் உண்மைகளை சரிபார்க்கும் விஷயம் அடிபட்டுப் போகிறது.

``நான் நிறைய டி.வி. சேனல்கள், பத்திரிகைகள், முகநூல் பக்கங்களைப் பார்க்கிறேன். அவற்றில் பெரும்பாலான செய்திகள் யோகி ஆதித்யநாத் மற்றும் நரேந்திர மோடி பற்றி ஒரு சார்பாக உள்ளன. அவை அனைத்தும் பொய்யானவை. அவை அனைத்தையும் அவர்கள் விலைக்கு வாங்கிவிட்டார். பாஜக எதைச் சொல்ல வேண்டும் என்று விரும்புகிறதோ அதை மட்டுமே அவை சொல்கின்றன.'' (ஆண், 24, வாரணாசி)

``இப்போது நிறைய செய்தித் தொகுப்பாளர்கள் வந்துவிட்டனர். அது செய்திகளில் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால், சிலவற்றில் எனக்கு உடன்பாடு இல்லை. அவற்றில் புள்ளிவிவரம் இல்லை அல்லது அவர்கள் பாஜகவை விரும்பவில்லை.'' (ஆண், 34, ராய்ப்பூர்)

இடைமுகம்:

போலிச் செய்திகளைத் தடுக்கும் முயற்சிகள் ஏன் பயனற்றதாகிவிட்டது?

இப்போது நமக்கு என்ன தெரியும் என அறிந்துள்ள நிலையில், போலிச் செய்திகள் பரவுவதைத் தடுக்கும் முயற்சிகள் ஏன் பயனற்றதாகின்றன என்பதை நாம் காண முடியும்.

இந்தியாவில் தவறான தகவல் பரவுவதைத் தடுப்பதற்கு அரசு தீவிர அழுத்தம் கொடுத்ததால் தகவல்களை பார்வர்டு செய்து அனுப்புவதற்குக் கட்டுப்பாடுகள் உருவாக்கப் பட்டுள்ளன.

போலிச் செய்திகளின் அபாயங்கள் குறித்து குடிமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு முகநூல் நிறுவனம் விளம்பரப் பிரசாரம் தொடங்கியுள்ளது. ஆனால் போலிச் செய்திகளைத் தடுக்கும் முயற்சியில் இவை போதுமானவையாக இல்லை என்று தெரிகிறது.

பெரும்பாலானவர்கள் இந்த டேக்-ஐ கவனிக்கவில்லை அல்லது அப்படி கவனித்திருந்தால் அது எதைக் குறிக்கிறது என்பதைத் தவறாக அர்த்தப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை களப்பணியின் போது நாங்கள் கவனித்தோம்.

வித்தியாசமான ஒரு விஷயமாக, இந்தத் தகவலை மேற்கொண்டு மற்றவர்களுக்கு அனுப்புமாறு (பார்வர்டு செய்யுமாறு) ஊக்கப்படுத்துவதற்கு தான் இது உள்ளது என்று கருத்து தெரிவித்த ஒருவர் கூறினார்!

``M : இப்போது forwarded என்ற ஒரு அம்சத்தை நீங்கள் பார்க்கிறீர்கள். அதைக் கவனித்தீர்களா, முன்பு அது இருந்ததா?

R: ஆமாம், நான் அதைக் கவனித்தேன். முன்பு அது இல்லை. யாரோ ஒருவர் அதை உனக்கு அனுப்பியிருக்கிறார், அதை நீங்கள் மற்றவர்களுக்கு அனுப்ப வேண்டும் என்று இதற்கு அர்த்தம்.''

ஆனால் மிக முக்கியமாக, நாம் ஏற்கெனவே கருத்தாடல் செய்ததைப் போல, தகவலில் உள்ள விஷயத்தைவிட அதை அனுப்பியவர் யார்96 (அதாவது அதை உருவாக்கியது யார்) என்பது முக்கியமாகக் கருதப்படுகிறது.; தகவலை எடுத்துக் கொள்வது மற்றும், ஓரளவுக்கு அதை மேற்கொண்டு பகிர்வது என்ற முடிவு, யார் அனுப்பியது என்பதை அடிப்படையாகக் கொண்டு அமைகிறது என்பதால், பகிர்வதைத் தடுப்பதில் forwarded என்ற டேக் சிறிதளவே பயன் தருகிறது.

அதேபோல, சரிபார்க்கப்படாத செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்ற முகநூலின் அறிவுறுத்தல்கள் அதிக ஈர்ப்பைப் பெறவில்லை. ஏனெனில், நாம் ஏற்கெனவே பார்த்ததைப் போல, போலிச் செய்திகளை தாங்கள் தான் பரப்புகிறோம் என்று பெரும்பாலானவர்கள் நம்புவதில்லை.

குறுக்குபுத்தி உள்ளவர்கள் லாபம் சம்பாதிப்பதற்காக உருவாக்கும், ஊழல் மற்றும் நினைவுகள் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டது தான் போலிச் செய்திகள் என்று அவர்கள் கருதுகிறார்கள். அல்லது தங்களுடைய நம்பிக்கைகள் மற்றும் சுய-அடையாளத்துக்கு ஏற்பில்லாத செய்திகளை போலிச் செய்திகள் என அவர்கள் கருதுகிறார்கள்.

இரண்டு விஷயங்களிலும், இதில் தங்களுக்கு எந்தப் பங்கும் இருப்பதாகக் குடிமக்கள் கருதவில்லை. இதனால், போலிச் செய்திகள் பரவுவதைத் தடுக்கும் முயற்சிகளை சவால்கள் நிறைந்ததாக இருக்கிறது;

போலிச் செய்திகளைப் பகிர்வதில் உங்களுக்குப் பங்கு இருப்பதாக நீங்கள் நம்பாவிட்டால், போலிச் செய்திகளைப் பகிர வேண்டாம் என்ற அறிவுரைகளை நீங்கள் நிச்சயமாக மதிக்க மாட்டீர்கள்.

IV. நடைமுறையில் போலிச் செய்தித் தகவல்கள் என்பதன் விவரிப்புகள்

Image caption தவறான தகவல்களை சரிபார்க்கமால் அனுப்புவது என்பது சமூகத்தில் பல பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

டிஜிட்டல் தளங்களில் நம்பிக்கைகள் மற்றும் அடையாளங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன என்பதைப் பார்த்துவிட்டதை அடுத்து, இப்போது தகவல்களை அப்படியே பார்க்கும் நேரம் வந்திருக்கிறது.

இந்தப் பின்னல் தொடர்புகளில் பகிரப்படும் போலிச் செய்தித் தகவல்களின் வகைகள் என்ன? முன்பு விவரிக்கப்பட்ட அடையாளங்கள், சித்தாத்தங்களுடன் அவற்றுக்கு என்ன தொடர்பு உள்ளது?

IV.1. வலதுசாரி ஆதரவு அடையாளம் உள்ளவர்கள் மத்தியில் சுழற்சியில் இருக்கும் போலிச் செய்தித் தகவல்கள்

1: வெளிப்படையாக சிறுபான்மையினருக்கு எதிரான பேச்சு

கருத்து தெரிவித்தவர்களில், இந்து / இந்துத்வா ஆதரவு உள்ள பெரும்பாலானவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான பகைமையை வெளிக்காட்டும் தகவல்களைப் பகிர்கிறார்கள்.

விரிவாகப் பார்த்தால், இதை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். முதலாவது பிரிவு கடந்த காலத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் அநீதிகள், பெரும்பாலும் தவறான வழிகாட்டுதல் அல்லது வரலாற்றை உள்நோக்கத்துடன் படிப்பதாக இருக்கும்.

இந்தியாவைப் பற்றிய எண்ணங்கள் குறித்து, வரலாறை முக்கியமான ஒரு களமாக வைத்து இவர்கள் சண்டையிட்டுக் கொள்கின்றனர்.

இந்த வகையான தகவல்கள் இந்து வலதுசாரி குழுக்களில், ஒன்றுக்கும் மேற்பட்ட குழுக்களில் பகிரப்படுகின்றன. ஆனால், அவை அதிக பொதுவான குழுக்களாக இல்லை என்பதை இந்த ஆய்வில் நாங்கள் கண்டோம்.

இந்திய வரலாற்றாளர்கள் பலர் இடதுசாரி சார்புள்ளவர்கள் என்பதால் இந்து தேசியவாதிகளால் சாடப்படுகிறார்கள். இந்தியாவின் பிரபல வரலாற்றாளர் ரோமிலா தாப்பர் உள்ளிட்டோரும் இதில் அடங்குவர்.

இந்தக் கருத்தைப் பாருங்கள்

இதற்கு பதில் அளிக்கும் கருத்துக்கு, பாருங்கள்

போலிச் செய்தித் தகவல்களின் இரண்டாவது வகையானது, இப்போது முழுக்க முழுக்க இந்துத்வா உறுப்பினரால் நேரடியாகப் பகிரப்படுவது,

Image caption சென்னையில் பிபிசி நடத்திய பிபி பயிலரங்கம்

உணர்வு ரீதியில் எண்ணத்தை தூண்டுவதாக இந்தப் போலிச் செய்தித் தகவல் இருக்கிறது. இந்தக் குழுவைப் பொருத்தவரை, முஸ்லிம்களால் இந்துக்களுக்கு ஆபத்து உள்ளதாகக் கருதுகிறார்கள்.

அதிக மிகைப்படுத்தப்பட்ட வடிவில், சில வழிகளில் இந்தியாவை `பிடித்துவிட வேண்டும்' என்பதை முஸ்லிம்கள் நோக்கமாகக் கொண்டிருக்கிறார்கள் என்று இது கூறுகிறது.

தகவலில் உள்ள விஷயம் பலருக்கும் கொஞ்சம் உறுத்தலாக இருக்கும் நிலையில், தூண்டிவிடும் மற்றும் அச்சுறுத்தும் வகையிலான தொனி இருப்பதால், இதை அனுப்பியவர் தெரிந்தே செய்தாரா என்பதை, தகவலை வைத்து மட்டும் ஒருவரால் கூறிவிட முடியாது என்பதை இங்கே கவனிக்க வேண்டும்.

தகவலில் உள்ள புள்ளிவிவரங்கள் சரியானவை என்பதற்காக அல்லாமல், உலகைப் பற்றிய தன்னுடைய கண்ணோட்டத்துடன் எந்த அளவுக்கு ஒத்துப் போகிறது என்பதற்காக, இதைப் பெறுபவர்கள் சரிபார்த்தல் செய்யாமல் பகிர்வார்கள் என்பது முக்கியமான விஷயம்.

அதேபோல, கீழே உள்ளதைப் போன்ற தகவல்கள் பகிரப்படுகின்றன : உண்மையிலேயே முஸ்லிம் குரு ஒருவரின் ட்வீட் போலத் தெரிகிறது, ஆனால் இந்து வலதுசாரி கேலி செய்பவர்கள்/ இகழ்ச்சி செய்யும் நபர்களால் உருவாக்கப்பட்டதாக - எங்களுக்கு சந்தேகம் உள்ளது.

காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களுக்கான கட்சி என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியதைக் குறிப்பிட்டு, `நமது ஆட்சி' இந்தியாவில் வர வேண்டும் என்று முஸ்லிம் குரு கூறுவதைப் போல இந்தத் தகவல் உள்ளது.

முன்பு நாம் குறிப்பிட்டதைப் போல, இந்து வலதுசாரிகளில் இந்து / இந்துத்வா போராளிகள் சிறுபான்மையாக உள்ளனர் என்று நாங்கள் நம்புகிறோம். அவர்களுடைய தகவல்கள், குறிப்பாக அதிக விஷமத்தனமானவை கூட, குறைந்த அளவுக்கே சுழற்சியில் உள்ளன என்று எங்களுடைய பகுப்பாய்வு காட்டுகிறது.

ஓரளவுக்கு குறுகிய தொடர்புகள் உள்ள குழுக்களில் மட்டும் தான் அவை சுழற்சியில் உள்ளனவே தவிர, முதன்மை அளவில் அல்ல என்று இதன் மூலம் நாங்கள் சொல்ல வருகிறோம்.

வலதுசாரியில் பெரும்பாலான மற்ற குழுக்கள், குறிப்பாக இந்து / இந்துத்வா முன்னேற்றகர சிந்தனை உள்ளவர்கள், இதுபோன்ற அப்பட்டமான விரோதம் உருவாக்கும் வகையிலான தகவல்களில் இருந்து விலகியே இருக்கிறார்கள்.

முன்பே நாம் கருத்தாடல் செய்ததைப் போல, வன்முறையை உருவாக்கும் என்று தாங்கள் நம்பக்கூடிய விஷயங்களைப் பகிர்வதில் இவர்கள் மிகவும் தயக்கம் காட்டுகிறார்கள்.

இருந்தபோதிலும், இந்து தேசியவாதத்தில் சில விஷயங்களை மென்மையாக விவரிப்பது அவர்களுக்கு ஒத்திசைவாக இருக்கிறது. இது பல்வேறு வடிவங்களாக இருக்கிறது. பின்வருவனவும் இதில் அடங்கும் :

படத்தின் காப்புரிமை Getty Images

விவரிப்பு 2- இந்து சக்தி மற்றும் மேலாதிக்க நிலை: இது பிரதானமாக இரண்டு அணுகுமுறைகளில் தெரிவிக்கப் படுகிறது. முதலாவதாக, தொன்மையான வேத காலத்தய பெருமைகளாகக் கருதப்படுபவற்றைக் கொண்டாடுவது, - அனைவருமாக இல்லாவிட்டாலும் - பலரும் மனிதகுலத்தின் பெரிய சாதனையாகவும், பழங்கால இந்தியாவில் (இந்துக்களுக்கு மட்டும் என்று கற்பனையாகக் கருதப்படும் இந்தியாவில்) தங்களுக்கு வேர்கள் இருந்தன என்றும் கருதும் வகையில் இது உள்ளது.

இதில் ஒரு துணைக் குழுவாக - மேற்கத்திய கலாசாரத்தால் தங்களுடைய கலாசாரம் நீர்த்துப் போய்விடும் என்ற அச்சத்தால் உருவாக்கும் - `மேற்கு' நாடுகளைவிட இந்தியா மேலாதிக்கம் மிக்கது என்று கூறும் வகையிலான போலிச் செய்தித் தகவல்களாக உள்ளன.

இந்த நாளில் உள்ள சூழ்நிலையில், இந்து-அல்லாதவர்களைக் காட்டிலும் இந்துக்கள் எந்த அளவுக்கு மேன்மையானவர்கள் என்று சொல்வதைப் போன்றதாகத் தான் பெரும்பாலான தகவல்கள் உள்ளன. இதில் சில தகவல்கள், தகவல் அல்லது புள்ளிவிவரத்தைக் கூறி (மேலே உள்ளவாறு, கற்பழிப்புகள் பற்றிய ட்வீட்டில் உள்ளது போல), கேள்வி எழுப்பும் வகையிலான வழக்கமான உத்தியைக் கையாள்கின்றன. நிர்மாணிக்கப்பட்ட இந்து தேசியவாத சிந்தனைகளாக முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் மாறுபட்ட விசுவாசம் பற்றி இந்தத் தகவல்கள் இருந்தாலும், வெளிப்படையான அவதூறுகளாக இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

விவரிப்பு 3 - பேணுதல் மற்றும் புதுப்பித்தல் :

பழங்கால பெருமைகளைப் (வழக்கமாக இந்து) பேணுதல் மற்றும் புதுப்பித்தலுக்கு -தொடர்புடைய விவரிப்பு - மற்றும் இணைந்த தகவல்கள் அதிக விளைவை ஏற்படுத்துகின்றன. நீண்டகாலமாக காணாமல் போயிருந்ததாகக் கருதப்படும் கலாசாரம், குறிப்பாக சம்பிரதாயங்களை புதுப்பித்தலுக்கு இது பெரும்பாலும் நடைபெறுகிறது;

மனிதகுல வரலாற்றில் பழமையான வேத காலத்தை பெருமைக்குரியதாக முன்னிறுத்தும் வகையில் நிச்சயமாக உள்ளன. ஆனால், நாட்டின் (இந்து) கலாசாரம் மற்றும் கட்டடக் கலை பொக்கிஷங்களின் முக்கியத்துவம் புறக்கணிக்கப்படுவது பற்றி கவனத்தை ஈர்ப்பதாகவும் இது உள்ளது.

அடுத்த இரண்டு வகைகளும் ஆர்வத்தை அதிகரிக்கக் கூடியவை. அவற்றில் உள்ள விஷயங்கள் வலதுசாரி அடையாளங்கள் உள்ள பெரும்பாலானவர்களுக்கு ஒத்திசைவானது,

ஆனால், வலதுசாரி எதிர்ப்பாளர்கள் தங்களுடைய கருத்துகளுக்கு முழுக்க எதிர்ப்பவர்கள் என்று கிடையாது. குறிப்பாக, பல அடையாள வகையினருக்கு கோரிக்கை வைக்கும் வகையில் அடுத்த விவரிப்பு இருக்கிறது.

விவரிப்பு 4 - முன்னேற்றம் மற்றும் தேசத்தின் பெருமை:

இந்தியாவில் தனிப்பட்ட ரகசியக் குறியீடுகளாக உள்ள தனிப்பட்ட போலிச் செய்தித் தகவல்களில் உள்ள அதிகமாக உள்ள பொதுவான வகையாக இருப்பது, நவீன உலகில் இந்தியாவின் ஏறத்தாழ யாராலும் தடுக்க முடியாத முன்னேற்றம் என்ற மைய விவரிப்பை ஒட்டியதாக இருக்கிறது என்பதுதான்.

தகவல்களில் உள்ள விஷயங்கள் உண்மை என்று காட்டுவதற்காக யுனெஸ்கோ போன்ற சர்வதேச அல்லது உலக அளவிலான அமைப்புகளின் பெயர்கள் இதில் சேர்க்கப் படுகின்றன.

(உண்மையில், ஏதோ காரணத்துக்காக இதுபோன்ற போலிச் செய்தித் தகவல்களை உருவாக்குபவர்களுக்கு யுனெஸ்கோவின் பெயர் பிடித்தமானதாக இருக்கிறது. பல தகவல்களில், பல சூழ்நிலைகளில் இந்தப் பெயர் பயன்படுத்தப் பட்டுள்ளது.)

இந்தத் தகவல்களில் சில பொதுவான பண்புகள் உண்டு. அவை வழக்கமாக பின்வருமாறு இருக்கும் :

  • ஒரு சாதனையை `இந்தியர்கள்' கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்துவதாக இருக்கும்
  • அந்த நாளில் உள்ள ஒரு பிரச்சினையை ஒட்டியதாக இருக்கும்
  • நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதற்கு இந்தியர் - அல்லாத நிபுணர்கள் அல்லது இந்தியா - சாராத அமைப்புகளை மேற்கோள் காட்டுவதாக இருக்கும்.

முன்னேற்றம் மற்றும் தேசத்துக்குப் பெருமை சேர்க்கும் வகை என்று கருதப்படும் போலிச் செய்தி தகவலுக்கான சரியான உதாரணம். பிரதமரின் பண மதிப்பு நீக்க நடவடிக்க100 வெற்றிகரமானது என்று `பியட்' கரன்சி என்ற வார்த்தை மூலம் கூற முயற்சிக்கிறது. கொல்கத்தாவில் களப்பணியின்போது பெறப்பட்ட மற்றொரு தகவலில், உலகில் மிக இனிமையான மொழி என்று பெங்காலி மொழியை யுனெஸ்கோ அறிவித்துள்ளதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. 101

மற்றொரு போலிச் செய்தித் தகவல். இந்து / இந்துத்வா அடிப்படைவாதிகள் மற்றும் இந்து / இந்துத்வா முன்னேற்ற கருத்துள்ளவர்களிடம், `இடஒதுக்கீடுகள்' என்பது தங்களது மத நம்பிக்கைகளுக்கு முரண்பட்டது என்று கருதும், பொதுவாக மேல்சாதியினராகக் கருதுபவர்களிடம் இதற்கு அதிக வரவேற்பு உள்ளது.

படத்தின் காப்புரிமை BLOOMBERG

இந்துத்வா தேசியவாதிகள் பலரால் (மற்றும் இந்து தேசியவாதிகள் அல்லாதவர்களும் கூட) போற்றப்படும் மராட்டிய மன்னர் சிவாஜியின் சர்ச்சைக்குரிய சிலை பற்றி நல்ல விஷயங்களை தெரிவிக்க முயற்சிக்கும் போலிச் செய்தித் தகவல்

நான்காவது விவரிப்பு மூன்றாவதுடன் தொடர்புள்ளது. இது சில வகைகளில் இப்போதும் தேசத்தின் பெருமை மற்றும் முன்னேற்றம் பற்றியதாக உள்ளது. ஆனால், இந்த விஷயத்தில் தனி ஒருவர் - மோடி - கொண்டு வந்த முன்னேற்றம் என்று சொல்வதாக இருக்கிறது.

விவரிப்பு 4 - (பிரதமர் மோடியின்) ஆளுமை & வீரம்:

பொதுவான விவரிப்பின் தொடர்ச்சியாக இந்தத் தகவல்கள் பின்னல்களைக் கொண்டிருக்கும். அநேகமாக அடிக்கடி காணப்படக் கூடிய, உயர்ந்த மனிதர் ஒருவர் எப்படி தனிப்பட்ட ஆளாக தேசத்தை ஒளிமிக்க எதிர்காலத்துக்கு அழைத்துச் செல்கிறார் என்று விவரிப்பின் தொடர்ச்சியாக இருக்கும். இந்தத் தகவல்களில் துணை விவரிப்புகள் - மற்றும் ஒத்திசைவான படங்கள்- கொண்டதாகவும் இருக்கும்:

  • மேற்கத்திய நாடுகளில் மரியாதையும் அங்கீகாரமும் பெற்ற முதல் இந்தியத் தலைவர் மோடி
  • மோடியின் சாதனைகள் என நிறைய தகவல்கள் மற்றும் புள்ளிவிவரங்களுடன் பட்டியலிடப்பட்ட, தொகுக்கப்பட்ட தகவல்கள்
  • காங்கிரஸ் கட்சி ஆட்சியின் போது இருந்த ஊழல்கள் மற்றும் சாதனைகள் அற்ற நிலையை மோடியின் சாதனைகளுடன் ஒப்பிடுதலைப் போன்ற தகவல்கள்
  • எதிர்காலத்துக்கான தலைவர் என்ற கருத்தை உருவாக்கும் வகையில் மோடியை செயல்திறன் மிக்க முன்னேற்றப் பாதையில் செல்லும்/ தொலைநோக்கு பார்வையுள்ள தலைவராக கூறுதல்

மோடியின் சாதனைகள் என்று பட்டியலிடும் தகவல்: சரியான புள்ளிவிவரங்கள் மற்றும் போலியான, தவறாக வழிநடத்தும் அல்லது சூழ்நிலைக்குப் பொருத்தமில்லாத தகவல்களின் கலவையாக.

மோடியின் முயற்சிகளால் தான் சூரியசக்தி மின் நிலையங்கள் அமைப்பதில் அமெரிக்காவையும், ஜப்பானையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது என்று கூறும் போலிச் செய்தி.

உலக வங்கிக் கடன்களில் இருந்து நிதியை ஆளும் காங்கிரஸ் கட்சி சுருட்டிவிட்டது என்றும், அதே சமயத்தில் உலக வங்கியிடம் இருந்து மோடி அரசாங்கம் ஒரு பைசா கூட கடன் வாங்கவில்லை: மாறாக அந்தக் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறது என்று கூறிக்கொள்ளும் போலிச் செய்தித் தகவல்

வங்கி திவால் சட்டங்கள் மாறப் போகின்றன என்ற அச்சம் காரணமாக 2100 கம்பெனிகள் 830,000,000,000- மதிப்புக்கான வங்கிக் கடன்களைத் திருப்பிச் செலுத்திவிட்டன என்று தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் தகவல்

பகிர்தலைப் பொருத்த வரையில் நான்கு விவரிப்புகள் பெரிய அளவில் சரியாக உள்ளன. குறிப்பாக கடைசி இரண்டும், சிந்தாந்த சார்புடையவர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அவை தேசக் கட்டமைப்பு மற்றும் முன்னேற்றம் என்ற விவரிப்புகளில் வருவதால், உண்மைகளை சரிபார்த்தல் என்பதில் பெரும்பாலும் விருப்பமில்லாதவையாகவே உள்ளன.

IV.2. இடதுசாரிகளுக்குள் சுழற்சியில் இருக்கும் போலிச் செய்தித் தகவல்கள்

இந்து அடையாளம் மற்றும் தேச முன்னேற்றம் என்ற கருத்துகளைக் கொண்டதாகவும், தேசத்தின் பெருமை மற்றும் மோடியின் ஆளுமை மற்றும் வீரம் தொடர்பானவையாகவும், சில நேரங்களில் வலது அல்லாத கருத்துகளாகவும் வலதுசாரி மக்கள் மத்தியில் எப்படி போலிச் செய்தித் தகவல்கள் சுழற்சியில் உள்ளன என்பது பற்றி மேலே நாம் பார்த்தோம்.

வலதுசாரிக்கு எதிர்ப்பானவர்கள் மத்தியில் அடையாளங்கள் என்பது அதிக மாறுபாடு கொண்டதாக அல்லது பிரிந்து கிடப்பதாக இருந்தாலும், போலிச் செய்தித் தகவல்கள் பல வகைகளாக இருந்தாலும், பிரதமர் மோடி, பாஜக மற்றும் அதன் தொடர்புடையவர்களுக்கு எதிரானவை என்பதில் ஒருமித்து இருக்கின்றன என்பதை நாங்கள் காண முடிந்தது.

மோடி மற்றும் மோடியின் தலைமையிலான அரசின் குறைகள் இல்லாத மற்றும் ஊழல்கள் இல்லாத என கற்பனையான பல விஷயங்களை, ஆதாரங்கள் அளிப்பதற்கான முயற்சி ஏதும் இல்லாமல், கூறுவதில் இவர்கள் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள்.

வலதுசாரிகளிடம் உள்ள தகவல்களைப் போல, இடதுசாரிகள் மத்தியிலும் உண்மைத்தன்மையை நிர்மாணிக்க பல தகவல் விஷயங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளதைக் காணலாம்; தங்களுடைய கருத்தை நிர்மாணிப்பதற்கு திருத்தப்பட்ட படங்களையும் பயன்படுத்துகிறார்கள்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்துத்வா எதிர்ப்பு கருத்துகளைக் கூறுவதற்கு வரலாற்றைத் திரித்துக் கூறிய உதாரணங்களும் இருக்கின்றன.

இடதுசாரிகள் மத்தியில் சுழற்சியில் இருக்கும் `ஊழல்களின் சக்ரவர்த்தி' என்று மோடியைக் குறிப்பிடும், போலிச் செய்தித் தகவல். ஊழல்கள் என ஒரு பட்டியல் மற்றும் ரூபாய் மதிப்பு ஆகியவை ஊழல்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளன.

ஆதாரங்கள் அளிப்பதற்கான முயற்சி இதில் இல்லை. (பாதி பேட்மேன் போலவும், பாதி ஸ்பைடர்மேன் போலவும் உடை அணிந்திருப்பதைப் போல மோடியைக் காட்டுவது பற்றிய மறைமுக கருத்துகளை இங்கே பகுப்பாய்வு செய்ய முயற்சித்தால், இங்கே பல பக்கங்கள் தேவைப்படும் என்று நாங்கள் அஞ்சுகிறோம்!)

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் படத்தை அகற்றிவிட்டு பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதக் குழுவான லஷ்கர்-இ-தொய்பா (LeT) -வை உருவாக்கிய ஹபீஸ் சயீத் -ன் படத்தைப் பொருத்தி உருவாக்கப்பட்ட படத்துடன் கூடிய முகநூல் பதிவு.

`தேசதுரோகியை' பாருங்கள். உண்மையான தேசதுரோகி யார் என பாருங்கள்- என்று படவிளக்கம் கூறுகிறது. தேசபக்தி இல்லாதவர்கள் என்று தாங்கள் கருதும் எதிர்ப்பாளர்களை வலதுசாரிகள் விமர்சிக்கும் வார்த்தை - தேசதுரோகி - என்பதாக உள்ளது.

பாஜக ஆளும் எந்த மாநிலமும் கேரளாவுக்கு உதவி செய்வதற்கு முன்வரவில்லை என்று நீதிபதி தர்மவதியை மேற்கோள் காட்டியுள்ள போலிச் செய்தித் தகவல்

பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக நாட்டில் போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது, ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் ராணிக்கு சல்யூட் அடித்துக் கொண்டிருந்தார்கள்' என்று கூறும் போலிச் செய்தித் தகவல். ராணி இரண்டாம் எலிசபெத், நைஜீரிய ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்ட போது எடுத்த படத்தைப் பயன்படுத்தி இந்தப் படம் உருவாக்கப் பட்டிருந்தது.

களத்தில் இருந்து போலிச் செய்தித் தகவல்களை சேகரிக்கும்போதும், போலிச் செய்தித் தகவல்களின் Reddit Unkill தொகுப்பை ஆய்வு செய்தபோதும், வலதுசாரிகளுக்கு ஆதரவான மற்றும் வலதுசாரிகள் மத்தியில் இருந்த போலிச் செய்தித் தகவல்களின் அளவு, இடதுசாரிகள் பற்றிய மற்றும் இடதுசாரிகள் மத்தியில் உள்ள தகவல்களின் எண்ணிக்கையைவிட அதிகமாக இருந்தது என்பதை சொல்லியாக வேண்டும்.

இருந்தபோதிலும், இடதுசாரி குடிமக்கள் போலிச் செய்தித் தகவல்களை பரப்புவதற்கு விரும்பவில்லை அல்லது பகிர முடியவில்லை என்பது விஷயம் கிடையாது. புள்ளிவிவர தொழில்நுட்பங்களின்படி தான் அதை மதிப்பீடு செய்ய முடியும். அது இந்த ஆய்வுத் திட்டத்தின் வரம்புக்கு அப்பாற்பட்டது.

இடதுசாரி சார்புள்ளவற்றைவிட வலதுசாரி சார்புள்ள போலிச் செய்தித் தகவல்கள் குறித்து அதிகமாக ஆய்வு செய்ததற்கு ஓரளவுக்கான காரணம் ஆய்வுக்கான தகவல்கள் தேர்வில் இருக்கிறது. வலது சாரி மற்றும் இடதுசாரி சார்புள்ளவர்களை சமவாய்ப்பு அடிப்படையில் தேர்வு செய்தோம்;

இருந்தபோதிலும், வலதுசாரிகள் மத்தியில் போலிச் செய்தித் தகவல்கள் தயாரிப்பது ஒழுங்கமைவு செய்யப்பட்டதாக இருந்தது. இது ஊடக அளவில் புலனாய்வு செய்ய வேண்டிய விஷயம். (பிற்பகுதியில் நாம் காணப் போவதைப் போல, வலதுசாரி சார்புள்ள தகவல்களை ட்விட்டர் மூலம் விரிவாகப் பகிரச் செய்வது அதிக ஒழுங்கமைவு முறையில், நெருக்கமான தொடர்புள்ளதாக இருக்கிறது.) நாம் அங்கே செல்வதற்கு முன்னதாக, சாதாரண குடிமக்கள் இந்தத் தகவல்களை உறுதி செய்வதாக இருந்தால், எந்த வகையான சரிபார்த்தல்களைப் பின்பற்றுகிறார்கள் என்பதை சுருக்கமாகப் பார்ப்போம்.

போலிச் செய்திகள்: ஆய்வு செய்து உண்மை உரைக்கும் தமிழ் இணையதளம்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
போலி செய்திகள்: ஆய்வு செய்து உண்மை உரைக்கும் தமிழ் இணையதளம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :