மக்களவைத் தேர்தல் 2019: தயாநிதி மாறன், ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்குமார், மன்சூர் அலிகான், சு. வெங்கடேசன் சொத்து விவரம்

சொத்து விவரம் படத்தின் காப்புரிமை Getty Images

நேற்று பிபிசி தமிழில் வெளியான மக்களவைத் தேர்தல் வேட்பாளர்களின் சொத்து மதிப்பு தொடர்பான கட்டுரையின் இரண்டாம் பாகம் இது.

தயாநிதிமாறன்

படத்தின் காப்புரிமை ECI

மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் தயாநிதி மாறன் தனது அசையும் சொத்தாக மூன்று கோடியே அறுபத்து ஐந்து லட்சத்து பதினைந்தாயிரம் ரூபாய்மதிப்புடைய சொத்துகள் உள்ளதென குறிப்பிட்டுள்ளார். தனது மனைவி ப்ரியாவுக்கு ரூ 3.09 கோடி மதிப்புடைய அசையும் சொத்துகள் உள்ளதென்றும், மகன் கரன் பெயரில் 4.92 கோடி மதிப்புடைய சொத்துகள் உள்ளதென்றும் குறிப்பிட்டுள்ளார்.

அசையா சொத்தாக திருக்குவளையில் ரூ 59,000 மதிப்புடைய இடம் உள்ளதென்று குறிப்பிட்டுள்ளார். தனது மனைவி பெயரிலோ அல்லது மகன் கரன் பெயரிலோ வேறெதுவும் அசையா சொத்துகள் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு ஏதும் கடன் இல்லை என்று பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.


ரவீந்திரநாத்குமார்

படத்தின் காப்புரிமை ECI

தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளரான துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் மகன் ப. ரவீந்திரநாத்குமார் தன் பெயரில் ரூ 4.16 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகள் உள்ளதென்றும், துணைவி ஆனந்தி பெயரில் 31 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்க, வெள்ளி, வைர நகைகள் உள்ளதென்றும் குறிப்பிட்டுள்ளார்.

மகன் ஜெய்தீப் பெயரில் ரூ 5.23 லட்சம் அசையும் சொத்துகள் உள்ளதென்றும், மகள் ஜெயஸ்ரீ பெயரில் ரூ 10.61 லட்சம் மதிப்பிலான அசையும் சொத்துகள் உள்ளதென்றும், மகன் ஆதித்யா பெயரில் ரூ 3.60 லட்சம் மதிப்பிலான அசையும் சொத்துகள் உள்ளதென்றும் குறிப்பிட்டுள்ளார்.

தனது அசையா சொத்தின் மொத்த மதிப்பு ரூ. 1.90 கோடி என குறிப்பிட்டுள்ளார்.

பிரமாண பத்திர தகவலின்படி அவருக்கு கடன் ஏதுமில்லை.

முதல் பகுதி: அன்புமணி ராமதாஸ், திருமாவளவன், கார்த்தி சிதம்பரம் மற்றும் எச்.ராஜா சொத்து விவரம்


மன்சூர் அலிகான்

படத்தின் காப்புரிமை ECI

நாம் தமிழர் கட்சியின் திண்டுக்கல் மக்களவைத் தொகுதி வேட்பாளர் மன்சூர் அலிகான் தனது அசையும் சொத்தின் மொத்த மதிப்பாக ரூ79.32 லட்சம் மதிப்புடைய சொத்துகள் உள்ளதென்றும் (இரண்டு துணைவிகளின் சொத்து உட்பட்).

அசையா சொத்தின் மொத்த மதிப்பு ரூ 4.7 கோடி என்று குறிப்பிட்டுள்ளார்.

தனக்குள்ள கடன் பொறுப்பு ரூ 17.17 லட்சம் என்று குறிப்பிட்டுள்ளார்.


சு. வெங்கடேசன்

படத்தின் காப்புரிமை ECI

மார்க்சிஸ்ட் கட்சியின் மதுரை வேட்பாளர் சு. வெங்கடேசன் தனது பெயரில் உள்ள அசையும் சொத்தின் மதிப்பாக 3.28 லட்சம் ரூபாயையும், துணைவி கமலா பெயரில் உள்ள சொத்து மதிப்பாக 9.25 லட்சம் ரூபாயையும் குறிப்பிட்டுள்ளார். மகள் யாழினி பெயரில் ரூ 43,150 உள்ளது என தெரிவித்துள்ளார்.

அசையா சொத்தாக தனது பெயரில் 4.5 லட்சம் ரூபாய் மதிப்பான சொத்துகள் உள்ளதென்று குறிப்பிட்டுள்ளார்.

கடன் ஏதுமில்லை என தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :