வெற்றிமாறன், லீனா மணிமேகலை வாக்காளர்களுக்கு எழுதிய கடிதம் - ஏன், எதனால்?

நாளிதழ்களில் வெளியான முக்கிய செய்திகளை உங்களுக்கு தொகுத்து வழங்குகின்றோம்.

டைம்ஸ் ஆப் இந்தியா -பாஜகாவை மக்கள் நிராகரிக்க திரைப்படத் தயாரிப்பாளர்கள் வேண்டுகோள்

பாரதிய ஜனதா கட்சியை மக்கள் மீண்டும் அதிகாரத்தில் அமர்த்த வேண்டாம் என்று இந்தியா முழுவதுமுள்ள நூறுக்கும் மேற்பட்ட சுயாதீன திரைப்பட மற்றும் ஆவணப்பட தயாரிப்பாளர்கள் மக்களுக்கு வெளிப்படையாக வேண்டுகோள் விடுத்துள்ளதாக 'டைம்ஸ் ஆப் இந்தியா' செய்தி வெளியிட்டுள்ளது.

இவர்களில் 'வடசென்னை' மற்றும் 'விசாரணை' திரைப்படங்களின் இயக்குநரான வெற்றிமாறனும், இலங்கை கடற்படையின் கைகளால் தமிழ்நாடு மீனவர்கள் உள்ளாகும் அவலங்களை எடுத்துக்காட்டிய 'செங்கடல் - த டெட் சீ' திரைப்படத்தை உருவாக்கிய லீனா மணிமேகலையும் அடங்குவர்.

"நமது நாடு இதுவரை இல்லாத சோதனை நேரத்தில் உள்ளது. காலாசார ரீதியாக பரந்ததாகவும், புவியியல் ரீதியாக பன்முக தோற்றமுடையதாகவும் இருந்தாலும், நாம் ஒற்றுமையாக வாழ்கிறோம். மிக சிறந்ததொரு நாட்டின் குடிமக்களாக இருப்பது என்பது நல்உணர்வை வழங்குகிறது. ஆனால், அவை அனைத்தும் இப்போது தடைப்பட்டுள்ளது. இந்த மக்களவைத் தேர்தலில் நம் அனைவரையும் பாசிசம் கடுமையாக தாக்குவதாக அச்சுறுத்துகிறது" என்று பசுவிற்காக குப்பல் கொலை, விவசாயிகளின் அல்லல், புள்ளிவிபரங்களையும், வரலாற்றையும் திரித்தல் உள்பட பல பிரச்சனைகளை எடுத்துக்காட்டி இவர்கள் வெளியிட்டுள்ள கூட்டு வேண்டுகோளில் குறிப்பிட்டுள்ளதாக இந்த செய்தியில் தெரிவிக்கப்படுகிறது.

இந்து தமிழ் - கார்த்தி சிதம்பரத்தின் ரூ.22 கோடி சொத்துகள் முடக்கம்

படத்தின் காப்புரிமை Twitter

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் ரூ.22 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளதாக இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 2007-ம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் அந்நிய முதலீடு பெற அனுமதி வழங்கப்பட்டது. இதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.

இதற்கு சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் அதன் மூலம் அவர் நடத்தி வரும் நிறுவனத்துக்கு கோடிக்கணக்கில் பணம் பரிமாறப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறையும் சிபிஐயும் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றன. ப. சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தினமலர் ஓட்டு உறுதிச் சீட்டுகள் சரிபார்ப்பு - முடிவுகளை வெளியிடுவதை தாமதப்படுத்தும்

படத்தின் காப்புரிமை Getty Images

மக்களவைத் தேர்தலில், ஓட்டு உறுதிச் சீட்டுகளில் (VVPAT), 50 சதவீதத்தை எண்ணி பார்த்து, தேர்தல் முடிவை வெளியிடுவது, சாத்திய மில்லை' என, உச்ச நீதிமன்றத்தில், தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாக தினமலர் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

அவ்வாறு எண்ணும்போது, தேர்தல் முடிவுகளை வெளியிடுவதற்கு, எட்டு - ஒன்பது நாட்கள் தாமதமாகும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

மக்களவைத் தேர்தல் ஏப் 11 முதல் மே 19 வரை நடக்க உள்ளது. இந்தத் தேர்தலில், அனைத்து மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்துடனும், வி.வி.பி.ஏ.டி., எனப்படும், ஓட்டு உறுதிச் சீட்டு இயந்திரம் பயன்படுத்தப் பட உள்ளது.

மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத் தில், ஒருவர், ஓட்டுப் பதிவு செய்யும்போது, அருகில் உள்ள, இந்த இயந்திரத்தில், ஓட்டு உறுதிச் சீட்டு அச்சாகும்.

அந்த சீட்டைப் பார்த்து, தான் அளித்த ஓட்டு, முறையாக பதிவாகி உள்ளதா என்பதை, வாக்காளர்கள் உறுதி செய்ய முடியும்.இந்தச் சீட்டு, வாக்காளருக்கு அளிக்கப்படாது. குறிப்பிட்ட தொகுதியில் ஏதாவது பிரச்னை இருந்தால், இந்த இயந்திரத்தில் அச்சாகும் சீட்டின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :