கோவை சிறுமி கொலை - "பாட்டி இறப்பை வைத்து நடித்த குற்றவாளி கைது"

கோவை சிறுமி படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சித்தரிக்கும் படம்

கோவை துடியலூர் பகுதியில், விளையாடச் சென்ற ஏழு வயது சிறுமி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு பின்னர் கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல் துறையினர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கில் 15 பேரிடம் விசாரணை செய்து சந்தோஷ்குமார் எனும் 34 வயதாகும் நபர் அச்சிறுமியை பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்துள்ளதாக கோவை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்கள் பின்வருமாறு.

சந்தோஷ் குமாரின் தாத்தா ஐந்து மாதங்களுக்கு முன் இறந்துவிட்டதால், அவர் தனது பாட்டியுடன் கடந்த இரண்டு மாதங்களாக தங்கியுள்ளார்.

அதே பகுதியில் இருந்த சிறுமியிடம் சந்தோஷ் குமார் நன்றாகப் பழக்கம் உண்டாக்கிக்கொண்டார்.

சிறுமி காணாமல் போன மார்ச் 25 அன்று விளையாடும்போது கீழே விழுந்த சிறுமியை காப்பாற்றுவதுபோல தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தியுள்ளார் சந்தோஷ்குமார். பின்னர் கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ளார்.

அதே இரவு சந்தோஷ் குமாரின் பாட்டி மரணமடைந்தார். பாட்டி இறந்ததால் சோகமாக இருப்பதுபோல் வெளியே காட்டிக்கொண்டு, சிறுமியின் உடலை வீட்டில் உள் அறை ஒன்றில் மறைத்து வைத்துள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP

அடுத்த நாள் அதிகாலை பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத சமயத்தில், தனது டீ-ஷர்ட் மூலம் மறைத்து சிறுமியின் சடலத்தை எடுத்துச் சென்று, சிறுமியின் வீடு இருந்த பகுதியில் வெளியில் வீசிவிட்டார்.

அந்த டீ-ஷர்ட் யாருடையது எனும் கோணத்தில் காவல்துறை விசாரித்தாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சந்தோஷ்குமார் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்படுவார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

சிறுமியின் மரணம் குறித்த பிரேதப் பரிசோதனை அறிக்கை நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: