கோவை மாவட்ட எஸ்பி பணியிட மாற்றம் - பொள்ளாச்சி விவகாரம் எதிரொலி?

சித்தரிப்புக்காக படத்தின் காப்புரிமை Getty Images

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன், பொள்ளாச்சி டிஎஸ்பி ஜெயராமன் மற்றும் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்டோரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் கூடுதல் முதன்மை செயலர் நிரஞ்சர் மார்டி உத்தரவிட்டுள்ளார்.

கோவை பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்டதற்காகவும் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் உரிய முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன், பொள்ளாச்சி டிஎஸ்பி ஜெயராமன் மற்றும் பொள்ளாச்சி காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்டோரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் கூடுதல் முதன்மை செயலர் நிரஞ்சர் மார்டி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த மாதம் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு காணொளி பதிவுகள் செய்து வெளியிட்ட சம்பவம் நாடு முழுவதும் மிகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை செய்தியாளர் சந்திப்பின்போது, கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாண்டியராஜன் வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

Image caption பாண்டியராஜன்

மேலும், இந்த வழக்கில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன், பொள்ளாச்சி டிஎஸ்பி ஜெயராமன் மற்றும் பொள்ளாச்சி காவல் ஆய்வாளர் உள்ளிட்டோர் உரிய முறையில் விசாரணை மேற்கொள்ளவில்லை எனவும் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய அவர்கள் தயங்குவதாகவும் குற்றச்சாட்டு கூறப்பட்டது.

இந்த நிலையில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆன பாண்டியராஜன், பொள்ளாச்சி சரக காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயராமன், பொள்ளாச்சி காவல் நிலைய ஆய்வாளர் நடேசன் உள்ளிட்டோரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் கூடுதல் முதன்மைச் செயலர் நிரஞ்சன் மார்டி அறிவித்துள்ளார்.

Image caption துணை கண்காணிப்பாளர் ஜெயராமன்

அவர்களுக்கு பதிலாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக தற்போது கோவை மாநகர காவல் துறை போக்குவரத்து பிரிவு துணை ஆணையராக பதவி வகிக்கும் சுஜித் குமாரும், பொள்ளாச்சி சரக காவல் துறை கண்காணிப்பாளராக நீலகிரி மாவட்டத்தில் குற்றப் பதிவேடுகள் துறை துணை கண்காணிப்பாளராக பதவி வகிக்கும் சிவக்குமாரும், பொள்ளாச்சி காவல் நிலைய ஆய்வாளராக கோவை மாவட்ட நக்சல் தடுப்பு சிறப்பு பிரிவு ஆய்வாளர் வெங்கட்ராமனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தற்போது பணியிட மாற்றம் செய்துள்ள கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், பொள்ளாச்சி சரக துணை கண்காணிப்பாளர், பொள்ளாச்சி காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட மூவரும் வேறு இடத்தில் பணியமர்த்தபடாமல் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பொள்ளாச்சி வன்கொடுமை சம்பவம்: இதுவரை நடந்தது என்ன? | Pollachi Issue |

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்