காவிரி டெல்டா விவசாயிகள் நிலை குறித்து நேரடி ஆய்வு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

காவிரி டெல்டா விவசாயிகள் நிலை குறித்து பிபிசியின் நேரடி ஆய்வு

தமிழகத்தின் முக்கிய வாழ்வாதார பிரச்சனைகளில் ஒன்றாகக் காவிரிப் பிரச்சனை பார்க்கப்படுகிறது.

வேளாண்மை அல்லது குடிநீருக்கான நெருக்கடி என்ற அளவில் மட்டும் சுருக்கப்படாமல் காவிரி விவகாரம் தமிழகத்தில் ஓர் அரசியல்-சமூக-பொருளாதார பிரச்சனையாக பல கண்ணிகள் இணைந்த சங்கிலித் தொடராக உள்ளது.

பிபிசி குழு காவிரியின் கரையோரப் பகுதிகளில் பயணித்து விவசாயிகள், விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் ஆகியோரைச் சந்தித்தது.

காவிரியில் போதிய நீர் வரத்து இன்மையால் நீண்டகாலமாக நிலவும் வேளாண் நெருக்கடியை மட்டுமல்லாது, கடந்த ஆண்டின் இறுதியில் வீசிய கஜ புயல் ஏற்படுத்திய கடுமையான பாதிப்புகள் குறித்தும் பதிவு செய்துள்ளது பிபிசி.

நிலம் இல்லாத தொழிலாளி, நிலம் இருந்தும் வேளாண்மை செய்ய முடியாத விவசாயி, வேளாண் நெருக்கடியால் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டபின் அவரது குடும்பத்துக்கு ஏற்பட்டுள்ள நிலைமை ஆகியவற்றை ஆவணப்படுத்தியுள்ள காணொளி இதோ.

ஒளிப்பதிவு மற்றும் தொகுப்பு: பிரேம் பூமிநாதன்

தயாரிப்பு: ஷாலு யாதவ்

துணை தயாரிப்பு: முரளிதரன் காசிவிஸ்வநாதன் மற்றும் விக்னேஷ் .அ

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :