மயிலாடுதுறை மக்களவை தொகுதி: காவிரியின் பயணம் முடியும் தொகுதி எப்படி இருக்கிறது?

பட மூலாதாரம், Getty Images
மயிலாடுதுறை தொகுதியில் திமுகவை சேர்ந்த ராமலிங்கம் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஆசைமணியை 2.6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். அமமுக வேட்பாளர் செந்தமிழன் 6.29% சதவீத வாக்குகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிலப்பதிகாரத்தில் சதுக்கபூதம் காத்த பூம்புகார் ஊர் இந்தத் தொகுதியில் இருக்கிறது. காவிரி தனது பயணத்தையும் இங்கேதான் முடித்து கொள்கிறது. ஓ.என்.ஜி.சிக்கு எதிராக மக்கள் பெருந்திரள் போராட்டத்தை மேற்கொண்டதும் இங்கேதான்.
மயிலாடுதுறை - பெரிதும் விவசாயத்தையும், மீன்பிடி தொழிலையும் நம்பி இருக்கும் ஊர். காவிரியின் கடைமடையில் இருக்கிறது இந்தத் தொகுதி. ஆனால், பல்வேறு காரணங்களால் காவிரி இங்கு வந்து சேர்வதில்லை என்கிறார்கள் விவசாயிகள்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் ஐயர் நீண்டகாலமாக எம்.பி.யாக இருந்த தொகுதி மயிலாடுதுறை தொகுதி.
மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், சீர்காழி, பூம்புகார் என ஆறு சட்டமன்ற தொகுதிகள் இந்த மக்களவைத் தொகுதியில் உள்ளது.
பட மூலாதாரம், Getty Images
சட்டமன்ற தொகுதிகளான மயிலாடுதுறை ராதாகிருஷ்ணன் (அதிமுக)வசமும், கும்பகோணம் அன்பழகன் (திமுக) வசமும், பாபநாசம் அதிமுகவை சேர்ந்த துரைக்கண்ணுவசமும் உள்ளன.
திருவிடைமருதூர் தொகுதியில் திமுகவை சேர்ந்த கோவி. செழியனும், சீர்காழி தொகுதியில் அதிமுகவை சேர்ந்த பாரதியும், பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் அதிமுகவை சேர்ந்த பவுன்ராஜும் சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர்.
போட்டியாளார்கள்
அதிமுக சார்பாக ஆசைமணியும், திமுக சார்பாக செ. ராமலிங்கமும், அமமுக சார்பாக எஸ். செந்தமிழனும், மக்கள் நீதி மய்யம் சார்பாக ரிஃபாயுதீன், நாம் தமிழர் சார்பாக சுபாஷினியும் போட்டியிடுகிறார்கள்.
கோரிக்கைகள்
வேளாண்மை சார்ந்த தொழிற்சாலைகளை ஏற்படுத்த வேண்டும், பூம்புகாரில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது இந்தத் தொகுதி மக்களின் நெடுநாள் கோரிக்கைகள்.
பட மூலாதாரம், Getty Images
ஓ.என்.ஜி.சி புதிதாக குழாய் பதிக்கக்கூடாது என்று இந்த மக்கள் உறுதியான போராட்டத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு முன்னெடுத்தார்கள்.
சரி முந்தைய தேர்தல்களில் யார் வென்று இருக்கிறார்கள் என்று பார்ப்போம்.
கடந்த தேர்தல்கள்
பிற செய்திகள்:
- சபரிமலை நம்பிக்கை பற்றி விரிவாக உச்சநீதிமன்றத்தில் எடுத்துரைப்போம் - பாஜக தேர்தல் அறிக்கை
- எட்டுவழிச் சாலைத் திட்டம் ரத்து: விவசாயிகள் உற்சாக கொண்டாட்டம்
- மாலத்தீவு தேர்தல்: இந்தியாவுடன் நெருக்கமாக விரும்பும் கட்சிக்கு வெற்றிமுகம்
- இறந்த 25 ஆண்டுகளுக்கு பின் தாய்நாடு வந்த இலங்கை பிரஜையின் உடல்
- வறட்சியின் கோரப் பிடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்