இந்திரா காந்தியை "துர்க்கை" என்று வாஜ்பேயி அழைத்தாரா? #BBCFactCheck

இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படத்தின் காப்புரிமை HARRY BENSON

முன்னாள் இந்திய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயி இந்திரா காந்தியை துர்க்கையோடு ஒப்பிட்டுள்ளார் என்று அரசியல்வாதியும் நடிகர் சத்ருகன் சின்ஹா சமீபத்தில் தெரிவித்திருக்கிறார்.

"நமது முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயி இதே நாடாளுமன்றத்தில் சர்வதேச நட்சத்திரமான பிரதமர் இந்திரா காந்தியை துர்க்கையோடு ஒப்பிட்டு பேசியுள்ளார். இந்திரா காந்தி பற்றிய சிறந்த பிம்பத்தை இது சுட்டிக்காட்டியது. அதேவேளை, வேற்றுமைகளை ஒதுக்கி வைப்பதன் மூலம் சிறந்த எதிரணியை ஏற்றுக்கொண்ட வாஜ்பேயின் பெருந்தன்மையை நிரூபித்தது" என்று அவர் பேசினார்.

பாரதிய ஜனதா கட்சியோடு தனக்கு இருந்த நீண்டகால உறவை முடிவுக்கு கொண்டு வந்து, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த பின்னர் சத்ருகன் சின்ஹா இவ்வாறு கூறியுள்ளார்.

2019ம் ஆண்டு மார்ச் மாதம் சத்ருகன் சின்ஹா பாஜகவை விட்டு வெளியேறினார். 2009 மற்றும் 2014ம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் சத்ருகான் சின்ஹா போட்டியிட்டு வென்ற பாட்னா சாஹிப் மக்களவைத் தொகுதியை ரவி சங்கர் பிரசாத் போட்டியிட பாஜக ஒதுக்கியபோது சின்ஹாவின் இந்த முடிவு எதிர்பார்க்கப்பட்டது.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலாவின் முன்னிலையில், புதுடெல்லி காங்கிரஸ் அலுவலகத்தில் கட்சி மாறியபின் தனது முதல் செய்தியாளர் சந்திப்பை சத்ருகன் சின்ஹா வழங்கினார்.

சத்ருகன் சின்ஹாவின் இந்த அறிக்கை தவறானது என்று நாங்கள் கண்டறிந்தோம். இது போன்ற கூற்றுக்கள் எழுவது இது முதல் முறையல்ல.

இந்திய ராணுவ தலையீட்டால் 1971ம் ஆண்டு வங்கதேசம் உருவான பின்னர், இந்திரா காந்தியை துர்க்கையோடு வாஜ்பேயி ஒப்பிட்டார் என்று கடந்த காலங்களிலும் பலர் தெரிவித்துள்ளனர்.

வாஜ்பேயி இந்த கூற்றுக்களை மறுத்தார்

இந்தியா தொலைக்காட்சியின் மூத்த பத்திரிகையாளர் ரஜாத் ஷர்மா நடத்திய "ஆப் கி அதாலாத்" என்கிற செய்தி நிகழ்ச்சி ஒன்றில், இந்த கூற்றை வாஜ்பேயி மறுத்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்திரா காந்தியை துர்க்கையோடு ஒப்பிட்டதாக கூறியது பற்றி ரஜாத் ஷர்மா வாஜ்பேயிடம் கேட்டபோது, "நான் இந்திரா காந்தியை துர்க்கையோடு ஒப்பிடவில்லை. இதனை ஊடகங்கள் அச்சிட்டு வெளியிட்டுள்ளன. நான் அவரை துர்கா என்று அழைக்கவில்லை என்று தொடர்ந்து சொல்லி வருகிறேன். ஆனால், நான் அவ்வாறு சொன்னதாக வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக பல ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இந்திரா காந்தியின் வாழ்க்கை பற்றி ஸ்ரீ புபுல் ஜெயக்கார் புத்தகம் ஒன்றை எழுதி கொண்டிருந்தார். நான் இவ்வாறு கூறியது பற்றி அவர் என்னிடம் கேட்டார். நான் ஒருபோதும் அவ்வாறு சொல்லவில்லை என்று மறுத்துவிட்டேன். பின்னர் அவர் எல்லா நூலகங்களிலும் உள்ள அனைத்து புத்தகங்களையும் ஆராய்ந்தார். நான் துர்க்கை என்று அழைத்ததற்கான எந்தவொரு சான்றையும் அவரால் கண்டபிடிக்க முடியவில்லை. ஆனாலும், இந்த துர்க்கை ஒப்பீடு என்னை விட்டு அகலவில்லை. இன்று நீங்களும் இந்த கேள்வியை கோட்கிறீர்கள் பார்த்தீர்களா!" என்று வாஜ்பேயி பதிலளித்தார்.

2014ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி வெளியான இந்த முழுபேட்டியும் யூடியூபின் அதிகாரபூர்வ பக்கத்தில் உள்ளது.

வாஜ்பேய் இத்தகைய கூற்றை மறுத்துள்ளார். ஆனால், சமூக ஊடகங்களில் இது எப்பாதும் மேலெழுந்து வலம் வருகிறது.

2019 தேர்தல்களில் இதே போன்ற கூற்றுக்கள்

2019 பிப்ரவரி 13ம் தேதி புதுடெல்லியிலுள்ள ஜந்தர் மந்தரில் பிரதமர் நரேந்திர மோதிக்கு எதிராக நடைபெற்றதொரு பேரணி ஒன்றில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைவர் சீதாராம் யெச்சூரி இதே போன்ற கூற்றுக்களை தெரிவித்தார்.

"எங்களை யாராலும் தோல்வியுற செய்ய முடியாது என்று யாராவது நினைப்போர், மக்கள் தங்கள் நாட்டின் ஜனநாயகத்தை காப்பாற்ற ஒன்றாக திரள்வர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்திரா காந்தியை துர்க்கையோடு ஆர்.எஸ்.எஸ் ஒப்பிட்ட காலம் இருந்தது. அடல் பிஹாரி வாஜ்பேயி இந்திரா காந்தியை "துர்க்கை" என்று அழைத்தார். ஆனால் தேர்தலில் நாடு இந்திராவை தோல்வியடை செய்தது. எனவே, அத்தகைய தவறான கருத்தை கொண்டிருக்க வேண்டாம். ஏதாவது ஒனடறை இந்த நாட்டிற்கு மக்கள் முடிவு செய்துவிட்டார்கள் என்றால், அதனை சாதிப்பதை அவர் உறுதி செய்வார்கள்" என்று அவர் பேசினார்.

அவரது இந்த கூற்று காங்கிரஸ ஆதரவு வாட்ஸப குழுக்களால் பரவலாகப் பகிரப்பட்டது. இத்தகைய கூற்று முதன் முதலாக தெரிவிக்கப்பட்டது இல்லை என்றாலும், அதனை ஆர்எஸ்எஸ்-யோடு தொடர்பு படுத்தி யெச்சூரி குழப்பமாகப் பேசினார்.

அந்நேரத்தில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அதிகாரபூர்வ இதழான ஆர்கனைசர்-இன் பதிப்பாசிரியர் பிராஃபுல் கெட்கார் பிபிசியிடம் கருத்து தெரிவிக்கையில், "ஆர்எஸ்எஸ் இந்திரா காந்தியை ஒருபோதும் துர்க்கையோடு ஒப்பிட்டு கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால், வங்கதேசம் தொடர்பான அவரது கொள்கைக்கு ஆர்எஸ்எஸ் நிச்சயமாக ஆதரவு அளித்தது," என்று கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்