மேனகா காந்தி: 'முஸ்லிம்கள் வாக்களிக்காவிட்டாலும் நான் வெல்வேன்' - சர்ச்சை கருத்து

மேகனகா காந்தி படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மேகனகா காந்தி

உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூரில் இருந்து போட்டியிடும் பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான மேனகா காந்தி முஸ்லிம் வாக்காளர்கள் வாக்களிக்காவிட்டாலும் தம்மால் வெற்றி பெற முடியும் என்றும் ஆனால், முஸ்லிம்கள் வாக்களிக்காவிட்டால் மனம் கெட்டுப்போகும் என்றும் கூறியுள்ளார்.

மக்களின் உதவியாலும், அன்பாலும் நான் வெற்றி பெறுவேன். ஆனால், முஸ்லிம்கள் வாக்களிக்காமல் நான் வெற்றி பெற்றால் அதை நான் விரும்பமாட்டேன். அதனால் மனம் கெட்டுப்போகும்.

அவர் பேசியதாக வெளியான காணொளியில்...

"நான் முன்பே தேர்தலில் வெற்றி பெற்றுள்ளேன். என் உதவிதான் உங்களுக்குத் தேவைப்படும். இந்த வாக்குச்சாவடியில் எனக்கு 100-50 வாக்குகள் கிடைத்து, பிறகு நான் வெற்றி பெற்ற பிறகு, நீங்கள் ஏதோ வேலைக்காக என்னிடம் வந்தால்... நான் பிரிவினை பார்ப்பதில்லை. ஆனால், வலியும், வருத்தமும் இருக்கும். இனி முடிவு உங்களுடையது" என்று பேசியிருப்பதும் தெரிய வந்துள்ளது.

நரேந்திர மோதி அரசை தூக்கியெறிய மக்கள் காத்திருக்கிறார்கள்: செயற்பாட்டாளர் ஆழி செந்தில்நாதன்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்