யோகி ஆதித்யநாத், மாயாவதி, மேனகா காந்தி: தேர்தல் நடத்தை விதிகளை மீறியதால் பிரசாரத்துக்கு தடை

யோகி படத்தின் காப்புரிமை Getty Images

தேர்தல் நடத்தை விதிகளை மீறி நடந்து கொண்டதாக உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் 72 மணி நேரங்களுக்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடக் கூடாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி 48 மணி நேரத்துக்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதைப் போல மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான மேனகா காந்திக்கும் நாளை காலை முதல் 48 மணி நேரம் பிரசாரம் செய்யத் தடை விதித்துள்ளது தேர்தல் ஆணையம்.

தேர்தல் நேரங்களில் வெறுப்பை தூண்டும் விதமாக பேசியதாக குற்றம்சாட்டப்பட்டதால், இருதலைவர்கள் மீதும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்துக் கடவுளான அனுமனை குறித்து இருவரும் எதிரும் புதிருமாக பேசிக் கொண்டதாக கூறப்படுகிறது.

ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருக்கும் யோகி ஆதித்யநாத்துக்கு பொதுக் கூட்டங்கள், பேச்சுக்கள் ஆகியவற்றில் இந்திய இறையாண்மையை காக்கும் பொறுப்பு கூடுதலாகவே உள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அவர் ஏப்ரல் 16ஆம் தேதி காலை 6 மணி முதல் 72 மணி நேரம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுளளது.

என்ன நடந்தது?

ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஆதித்யநாத், பகுஜன் சமாஜ்- சமாஜ்வாதி- ராஷ்டிரிய லோக் தள் கூட்டணியுடன் அலி இருந்தால், பாஜக-வோடு பஜ்ரங்பலி இருக்கிறது என்று, மதவாத நோக்கில் பேசியுள்ளார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய மாயாவதி, 'அலி மற்றும் பஜ்ரங்பலி என்று அனைவரும் எங்களுடையவர்கள்தான். முக்கியமாக பஜ்ரங்பலி' என்று தெரிவித்தார்.

இருவரும் இவ்வாறு பேசியதற்கு தேர்தல் ஆணையம் இவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்