திண்டுக்கல் சீனிவாசன், ராமதாஸ், பிரேமலதா, ஸ்டாலின் - தேர்தல் பிரசார சொதப்பல்கள்

எடப்பாடி பழனிசாமி மோதி ராமதாஸ் படத்தின் காப்புரிமை Getty Images

இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணியுடன் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது.

இந்தத் தேர்தல் பிரசாரத்தில் பல்வேறு கட்சி தலைவர்கள் சொதப்பியவற்றை தொகுத்து தருகிறோம்.

ஆப்பிளுக்கு வாக்கு

படத்தின் காப்புரிமை Facebook

முதலில் திண்டுக்கல் சீனிவாசன், பாட்டாளி மக்கள் கட்சிக்கு வாக்களியுங்கள், அதாவது பா.ம.கவின் மாம்பழ சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று சொல்வதற்கு பதிலாக ஆப்பிள் சின்னத்தில் வாக்களியுங்கள் என்று இரண்டு கூட்டங்களில் பேசினார்.

அதிமுகவுக்கு வாக்களிக்காதீர்கள்

படத்தின் காப்புரிமை Twitter

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பழைய நினைவுகளில், திராவிட கட்சிகளுடன் இனி கூட்டணி இல்லை என்று சொல்லிய நினைவுகளில், அதிமுக கூட்டணி பிரசார மேடைகளில் அமர்ந்து கொண்டு திமுக, அதிமுக கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் என்றார்.

ஏ.கே போஸூக்கு வாக்களியுங்கள்

படத்தின் காப்புரிமை Twitter

இன்னொரு பக்கம், தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஒரு பிரசார கூட்டத்தில் பா.ம.க வேட்பாளர் ஏ.கே. மூர்த்தி என்று சொல்வதற்கு பதிலாக ஏ.கே.போஸுக்கு வாக்களியுங்கள் என்று தீவிரமாக பிரசாரம் செய்தார்.

பாலியல் வன்கொடுமை

படத்தின் காப்புரிமை Youtube

அனைவரையும் பதற வைத்தது தே.மு.தி.கவின் பொருளாளர் பிரேமலதா கூறிய வார்த்தைகள்தான். அதை அப்படியே வழங்குகிறோம், "இன்று பாலியல் வன்கொடுமைகள் எத்தனை நடந்தாலும் பரவாயில்லை... எல்லோரையும் என்ன கேட்டுகிறேன்னா... இந்த கூட்டணி நிச்சயம் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்" என்றார்.

எட்டுவழிச் சாலை திட்டத்தை அமல்படுத்துவோம் – ராமதாஸ் முன் நிதின் கட்கரி அறிவிப்பு

கனிமொழிக்கு வாக்கு கேட்ட அதிமுக

விளாத்திகுளத்தில் அதிமுக சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சின்னப்பன் பிரசார கூட்டத்தில் கனிமொழிக்கு வாக்கு கேட்டார். நாடாளுமன்ற தேர்தலுடன், முதல் கட்டமாக தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டமன்ற தொகுதிகளில் 18 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. இதற்காக வாக்கு சேகரிக்கும் போது அதிமுக வேட்பாளர் தவறுதலாக கனிமொழிக்கு வாக்களியுங்கள் என்றார்.

தவறான எண்ணிக்கை

நாமக்கலில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை தவறுதலாக கூறினார். திமுக உறுப்பினர்கள் 87 காங்கிரஸ் உறுப்பினர்கள் 8 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1, ஆக மொத்தம் 107 என்று எண்ணிக்கையை தவறுதலாக கூறினார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

படத்தின் காப்புரிமை Getty Images

பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட விளம்பரங்களை மேற்கோள்காட்டி கார்த்தி சிதம்பரம் வாக்கு சேகரித்தார். கேபிள் கட்டணங்கள் ஏறிவிட்டன. உங்களால் தொலைக்காட்சி தொடர்களை காண இயலவில்லை என்று கூறி வாக்கு சேகரித்தார். இந்த வீடியோ வைரலானது.

வைரலாக பரவிய புகைப்படம்

படத்தின் காப்புரிமை Whastsapp

தேர்தல் பிரசார வாகனத்தின் வெளியே கே.என்.நேரு தொங்கிகொண்டு வரும் படம் இந்தத் தேர்தல் பிரசாரத்தில் வைரலாக பகிரப்பட்ட புகைப்படங்களில் ஒன்று.

படத்தின் காப்புரிமை Facebook

இது அனைத்தையும் கடந்து உச்சபட்சமாக பகிரப்பட்டது மக்கள் நீதி மையத்தின் தலைவர் நடிகர் கமல் ஹாசனின் பிரச்சார விளம்பர காணொளிதான். அந்த காணொளியில் பெற்றோர்களை கேட்டு வாக்களியுங்கள், நீட் தேர்வால் இறந்தாரே அனிதா, அவரின் பெற்றோரை கேட்டு வாக்களியுங்கள் என்றார். அடுத்த நாள் நீட் தேர்வால் இறந்த அனிதாவின் அண்ணன் எங்கள் வாக்கு திமுக கூட்டணிக்குதான் என்றார். இதனால் சமூக ஊடகத்தில் அதிகம் கிண்டலுக்கு உள்ளானார் கமல்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :