ஒடிசாவை தலைகீழாக்கிய ஃபானி புயல் - தற்போதைய நிலை என்ன?

ஓடிசாவின் மீட்புப் பணிகள் படத்தின் காப்புரிமை Odisha police

இந்தியாவின் ஒடிசா மாநிலம் பூரியில் வெள்ளிக்கிழமை அன்று கரையை கடந்த ஃபானி புயல் அங்கு பலத்த சேத்ததை ஏற்படுத்தியுள்ளது.

இதில் எட்டு பேர் உயிரிழந்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் கூறுகிறது.

சமீப ஆண்டுகளில் அடித்த மிக தீவிர புயல்களில் ஒன்று ஃபானி. இதனால் ஒடிசாவின் பூரி பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. 850 ஆண்டுகள் பழமையான ஜகநாதர் கோயில் இங்குதான் உள்ளது.

படத்தின் காப்புரிமை EPA

அம்மாநிலத்தில் லட்சக்கணக்கான மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு தங்குமிடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.

அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை என்றாலும், இப்புயலால் பூரியில் மட்டும் சுமார் 160 பேர் காயமடைந்ததாக ஏஎஃப்பி செய்தி முகமை தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Hindustan Times
Image caption சுமார் 200 கிலோ மீட்டர் வேகத்தில் சூரைக்காற்றுடன் பலத்த மழை பெய்ததையடுத்து, இவ்வாறு காட்சியளிக்கிறது பூரி கடற்கரை

பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

புயலின் தாக்கம் ஒடிசா மாநிலத்தின் கடற்கரை பகுதிகளில் இருக்கும் என்றும், அடுத்த 24 மணி நேரத்துக்கு பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.

ஒடிசாவில் கரையை கடந்த புயல் வங்கதேசத்தை நோக்கி சென்று அங்கும் பலத்த மழையை ஏற்படுத்தியது. அங்கு ஒருவர் மரம் விழுந்து உயிரிழந்ததாகவும், 14 கிராமங்கள் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஃபானி புயல் வங்கதேசத்தின் சிட்டகாங் பகுதியை நோக்கி சென்று சனிக்கிழமையன்று வலுவிழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒடிசாவில் 1999ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான புயலால், சுமார் 10,000 பேர் கொல்லப்பட்டனர். ஆனால், தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், உடனடியான எதிர்வினைகள் என அம்மாநிலம் தயாராக இருந்தது.

என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன?

புயலின் காரணமாக கிழக்கு கடற்கரையில் உள்ள இரண்டு முக்கிய துறைமுகங்கள் மூடப்பட்டன.

கப்பற்படை, கடலோர காவல் படை பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டன.

பத்துலட்சம் மக்களை தங்க வைக்க 850 தங்குமிடங்கள் ஏற்படுத்தப்பட்டன.

அந்த பகுதியில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

நூற்றுக்கும் மேற்பட்ட தொடர் வண்டிகள் மற்றும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கரையை கடக்கும் ஃபானி புயல் : காணொளி

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்