மம்தா பானர்ஜி: ‘வறுமை நிலையில் இருந்து முதல்வர் ஆனவர்’ - 10 தகவல்கள்

மம்தா பானர்ஜி குறித்த 10 தகவல்கள் படத்தின் காப்புரிமை Getty Images

மம்தா பானர்ஜி குறித்த சில தகவல்களை இங்கே பகிர்கிறோம்.

  • மம்தா பானர்ஜி 15 வயதில் அரசியலுக்கு வந்தார்.
  • கொல்கத்தா ஜொக்மயா தேவி பெண்கள் கல்லூரியின் மாணவர் தலைவராக உருவெடுத்தார்.
  • இளமையில் மிகவும் வறுமையில் மம்தா வாடியதாக அவர் குறித்த ஒரு சுயசரிதை நூல் கூறுகிறது.வீட்டு தேவைகளுக்காக அவர் பால் வணிகத்தில் ஈடுபட்டுள்ளார்.
படத்தின் காப்புரிமை Getty Images
  • அவர்தான் இந்தியாவின் முதல் பெண் ரயில்வே அமைச்சர் மற்றும் மேற்கு வங்கத்தின் முதல் பெண் முதல்வர்.
  • மம்தாவின் அரசியல் வாழ்வானது காங்கிரஸ் கட்சியிலிருந்துதான் தொடங்கியது.
படத்தின் காப்புரிமை Getty Images
  • மூத்த இடதுசாரி தலைவர் சோம்நாத் சாட்டர்ஜியை வீழ்த்தி அவர் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.
படத்தின் காப்புரிமை Getty Images
  • பின் காங்கிரஸிலிருந்து விலகி திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை நிறுவினார்.
  • மேற்கு வங்கத்தில் 34 ஆண்டுகள் ஆட்சி செய்த இடதுசாரி அரசை வீழ்த்தியவர் மம்தா. எளிமையான தலைவர் என்ற பிம்பம் மம்தாவிற்கு உள்ளது. ஆனால், மூர்க்கமான தலைவராகவே கருதப்படுகிறார்.
படத்தின் காப்புரிமை Getty Images
  • எதிர்கட்சி கூட்டணியின் முகமாக அவர் இந்த தேர்தலில் உருவெடுத்திருக்கிறார். மகாகத்பந்தன் கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்தால, பிரதமர் பதவிக்கான போட்டியில் மம்தாவும் இருப்பார்.
  • நரேந்திர மோதியை எதிர்த்து தீவிர அரசியல் செய்பவர் என்ற அடிப்படையில் அவர் தொடர்ந்து செய்திகளில் இடம்பிடித்து வருகிறார். இந்த தேர்தலில் மம்தா ஒரு கிங் மேக்கராக ஆகலாம்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்