சிப்பாய்க் கலகம்: உயிர் நீத்த ஜான் நிகோல்சன் - டெல்லியில் உள்ள நினைவிடத்தின் கதை

1857 ம் ஆண்டு கிளர்ச்சியின்போது ஜான்சி மேஜர் ஸ்கின் தனது மனைவியின் மரணத்திற்குப் பிறகு துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக்கொண்டார். படத்தின் காப்புரிமை HULTON ARCHIVE/GETTY IMAGES
Image caption 1857 ம் ஆண்டு கிளர்ச்சியின்போது ஜான்சி மேஜர் ஸ்கின் தனது மனைவியின் மரணத்திற்குப் பிறகு துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

மீரட்டில் 1857ஆம் ஆண்டு மே 11ஆம் தேதி நடைபெற்ற சிப்பாய் கலகத்தில் பங்கெடுத்த இந்தியர்கள் மற்றும் பிரிட்டன் நாட்டினரை நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது.

அதில் பிரிகேடியர் ஜெனரல் ஜான் நிகோல்ஸனும் ஒருவர். இளம் வயதிலேயே அவர் இறந்துபோனாலும், கிழக்கிந்திய நிறுவனத்தினரின் பார்வையில் அவர் ஒரு கதாநாயகனாக தோன்றினார்.

அயர்லாந்தை சேர்ந்த இந்த ராணுவ அதிகாரியின் நினைவிடம் டெல்லியில் நிறுவப்பட்டாலும், 162 ஆண்டுகளில் அந்த நினைவிடத்தின் நிலையில் பல மாற்றங்கள் வந்துவிட்டன.

செப்டம்பர் 19ஆம் தேதியன்று சுற்றுலாப்பயணிகளும், ஜென்ரல் நிகோல்ஸனின் பரம்பரையினரும் இந்த நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்துகின்றனர்.

1857 சிப்பாய் கலகத்தின்போது டெல்லியை கைப்பற்ற முயன்ற புரட்சியாளர்களின் முயற்சியை முறியடித்த ஜான் நிகோல்ஸன், படுகாயமடைந்து, உயிரிழந்தார்.

ஆனால், தனது நாட்டு மக்களிடையேயும், இந்தியாவில் அவர் தலைமையேற்றிருந்த முல்தானி படைப்பிரிவு வீரர்களிடையேயும் அவர் ஒரு கதாநாயகனாக உயர்ந்தார்.

நிகோல்ஸன் பற்றி பல கதைகள் கூறப்பட்டாலும், பிபிசி செய்தியாளர் ஒருவருக்கு அண்மையில் கிடைத்த ஒரு தகவல் மிகவும் சுவராசியமானதாக இருக்கிறது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption 1857 ஜூலை 15, கான்பூரில் நடைபெற்ற சிப்பாய்க் கலகத்தின் ஒரு காட்சி

`கல்ட் ஆஃப் எ டார்க் ஹீரோ: நிக்கோல்ஸன் ஆஃப் டெல்லி` (cult of a dark hero: Nicholson of Delhi)என்ற புத்தகத்தை எழுதுவதற்காக டெல்லியில் பல இடங்களுக்கு பயணம் மேற்கொண்டார் எழுத்தாளர் ஸ்டூவர்ட் ஃபில்ண்டர்ஸ்.

காலப்போக்கில் டெல்லியில் பலவிதமான மாறுதல்கள் ஏற்பட்டிருந்தபோதிலும், சில முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க சின்னங்கள் தற்போதும் அப்படியே உள்ளன. அவர் ரிங் ரோட் என்ற சாலையில் இருந்து பழைய டெல்லிக்கு பலமுறை அலைந்தார். அங்கு எஞ்சியிருக்கும் பழைய டெல்லியின் புராதனமான கட்டங்களின் சுவர்களை பார்த்துக் கொண்டே கஷ்மீரி கேட் என்ற இடத்தை சென்றடைந்தார்.

கஷ்மீரி கேட் என்ற பகுதியில் மட்டுமே தற்போது குவிமாடம் போன்ற கட்டுமானம் எஞ்சியிருக்கிறது. அந்த காலத்தில் இதுபோன்ற குவிமாடங்கள் இருந்த பர்ன் பைஸ்சியன் மற்றும் லாகூர் கேட் போன்ற இடங்களில் தற்போது அவை இருந்த இடமே தெரியவில்லை.

சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னர், சிப்பாய் கலகத்துடன் தொடர்புடைய இடங்கள் மற்றும் "காரி போலி" என்ற இடத்திற்கும் சென்ற பிரிட்டனிலிருந்து வந்திருந்த ஒரு குழுவினருக்கு தலைமையேற்று சென்றிருந்தேன். மிகவும் கஷ்டப்பட்டு தேடியதில் மிகவும் குறுகிய தெரு ஒன்றை சென்றடைந்தோம். அங்கு சிலர் பனிக்கட்டிகளையும், வேறு பொருட்களையும் விற்பனை செய்துக் கொண்டிருந்தனர்.

அவர்களிடம் பேசியபோது, நாங்கள் என்ன கேட்கிறோம் என்பதே அவர்களுக்கு புரியவில்லை.

பலவிதமான முயற்சிகளுக்கு பிறகு, அவர்களுக்கு பின்புறம் இருந்த சுவற்றில் போடப்பட்டிருந்த மறைப்பை விலக்கினார்கள். அங்கு நினைவிடத்தின் பெயர்ப்பலகையை பார்க்க முடிந்தது.

அது ஆங்கிலேயர்களின் காலத்தில் வைக்கப்பட்டதுபோல் தெரியவில்லை. நாடு சுதந்திரம் பெற்ற பிறகு வைக்கப்பட்டது, அதில் நிகோல்ஸன் பற்றிய அதிக விவரங்கள் இல்லை. ஆனால், அதில் துல்லியமான துப்பாக்கியை குறிவைத்து சுட்ட ஒருவரைப் பற்றி பெருமையாக குறிப்பிடப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை FELICE BEATO/GETTY IMAGES
Image caption இந்திய வீரர்களின் சிப்பாய் கலகம் தோல்வியடைந்த பிறகு கிளர்ச்சியில் ஈடுபட்ட சிப்பாய்களை 1858ஆம் ஆண்டில் கிழக்கிந்திய கம்பெனி தூக்கில் இட்டது

லாகூரி கேட் பகுதியில் தனது படை வீரர்களுக்கு தலைமை தாங்கிக் கொண்டிருந்த நிகோல்ஸன் கையில் வாளுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, இரண்டு மாடி கொண்ட ஒரு வீட்டில் இருந்து துப்பாக்கியால் துல்லியமாக குறிவைத்து சுட்டார் ஒருவர்.

நிகோல்ஸன் பெயரில் உருவக்கப்பட்ட ஒரு பூங்காவில் தற்போது எதுவுமே இல்லை. ஆனால், அவர் புதைக்கப்பட்ட இடத்திற்கு அருகில், குறிப்பிட்ட சில இரவுகளில், நிகோல்சனின் தலையில்லாத முண்டம் சுற்றுவதாகவும் கதைகள் உலா வருகின்றன.

ஆனால், பிரிகேடியர் ஜென்ரல் நிகோல்ஸனின் பின்பக்கத்தில் இருந்து துப்பாக்கித் தோட்டா பாய்ந்ததால் அவர் உயிரிழந்தார், அவரது தலை துண்டிக்கப்படவில்லை என்பதால் இது பல கேள்விகளை எழுப்புகிறது.

இதேபோல் இங்கிருப்பவர்களிடம் உலா வரும் மற்றொரு கதையின்படி, நள்ளிரவு நேரங்களில் ஒரு வெளிநாட்டு பெண் இங்கு வந்து, அறிவிப்புப் பலகை சரியாக இருக்கிறாதா என்று சரிப்பார்த்துச் செல்வாராம்!

பதிக்கப்பட்ட அந்த பலகையில் இங்கு நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. 1952இல் நிகோல்ஸனின் சிலை அயர்லாந்துக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு இந்த பலகைக்கு அருகில்தான் வைக்கப்பட்டிருந்தது.

அந்த வெளிநாட்டு பெண்மணி சிகரெட் பிடித்தபடி வருவார் என்றும் சொல்கிறார்கள். அதாவது, சிப்பாய் கலக சமயத்தில் இந்த பழக்கம் இருந்ததில்லை. எனவே, இந்த கஷ்மீரி கேட் பகுதியில் திருடரால் கொல்லப்பட்ட அப்பாவியாகவோ அல்லது நிராசையால் இறந்துபோன காதலியாகவோ இருக்கலாம்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption 1857 புரட்சியை குறிக்கும் புகைப்படம்

உண்மையில் இதற்கும், நிகோல்ஸனுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பது திண்ணம். ஏனெனில், அவருக்கு பெண்கள் மீது ஆசையோ, ஈர்ப்போ இருந்ததில்லை. வாழ்க்கையில் காதல் அனுபவமோ அல்லது வேறு பெண்களுடன் தொடர்போ கொள்ளாதவர் அவர் என்று கூறப்படுகிறது.

நிகோல்ஸனின் ஆவி அங்கு சுற்றுவதாகவும், சொந்த நாட்டைச் சேர்ந்த பெண்ணுடன் அவரை தொடர்புபடுத்தியும் கதைகள் கட்டிவிடப்பட்டுள்ளன. இதைப்பற்றி ஃபில்ண்டர்ஸ் தனது புத்தகத்தில் குறிப்பிடவில்லை. உண்மையில் அதுதான் சரியான அணுகுமுறை.

கடந்த ஆண்டு ப்ளூம்ஸ்பரி வெளியிட்ட விக்டோரியாவின் கதாநாயகர்கள் என்ற சுயசரிதையில் டெல்லிவாசிகள் பற்றி சுவைபட எழுதியிருக்கிறார். புதுப்பிக்கப்பட்ட அந்த கல்லறைக்கு அவ்வப்போது செல்வார். அயர்லாந்து மருத்துவர் ஒருவரின் ஐந்து மகன்களில் மூத்தவர் நிகோல்ஸன் என்று குறிப்பிடுகிறார்.

நிகோல்ஸனின் உருவச்சிலை டெல்லி கஷ்மீரி கேட்டில் இருந்து அகற்றப்பட்டு, பேல்ஃபாஸ்ட்டுக்கு அனுப்பப்பட்டதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். நிகோல்ஸனின் இறுதிச்சடங்குகளின்போது, டார்க் ஹார்ஸ் என்று புகழ்பெற்ற முல்தானி ஹார்ஸ் படைப்பிரிவின் வீரர்கள் மனம் உடைந்துபோய் அழுதார்கள். அவரது கல்லறையில் புல் முளைத்தால் அதை தங்கள் கைகளாலேயே சுத்தப்படுத்தும் வழக்கத்தையும் வைத்திருந்தார்கள்.

34 வயதிலேயே இறந்துபோன நிகோல்ஸனுக்கு வீர மரியாதை செலுத்தவும், அவருக்காக துக்கம் அனுசரிக்கவும் அவர்கள் விரும்பினார்கள்.

தற்போது பாகிஸ்தானில் இருக்கும் முல்தான் நகரில் நிகோல்ஸனுக்கு சிலை வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நிகோல்ஸன் நீண்ட காலம் வாழ்ந்திருந்தால் அவருக்கு இத்துனை பெருமைகள் கிடைத்திருக்குமா என்று தெரியவில்லை.

அவர் இறந்து ஒன்றரை நூற்றாண்டுகள் ஆனபிறகு, முகலாயர்களின் தாக்கம் அதிகமாக இருக்கும் புராதானமான பழைய டெல்லிப் பகுதி வெகுவாக மாறிவிட்டது என்கிறார் ஃபில்ண்டர்ஸ்.

''பிரிட்டிஷ் ஆட்சியில் கிடைத்த அனைத்து அம்சங்களும் கிடைத்த பழைய டெல்லி, ஷாஜஹானாபாத் மற்றும் அவற்றை மையமாக கொண்டு நிர்மாணிக்கப்பட்ட புதிய டெல்லிக்கும் இடையில் உள்ள வித்தியாசங்கள் கண்கூடாக தெரிபவை.

1947இல் ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டுச் சென்ற பிறகு இரண்டு நகரங்களிலும் ஏற்பட்ட வளர்ச்சியின் அடிப்படையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன.

நதிகளும் தனது போக்கை மாற்றிக் கொண்டன. டெல்லி செங்கோட்டையை ஒட்டியவாறு பரவலாகியிருந்த யமுனை நதி இருந்த இடங்கள் தற்போது முக்கியமான போக்குவரத்து சாலைகளாக மாறிவிட்டன'' என்கிறார் ஃபில்ண்டர்ஸ்.

''ரிட்ஜ் பகுதிகளில் அன்று நிகோல்ஸன் முழுமையான ஏற்பாடுகளுடன் தாக்குதலுக்கு தைரியத்துடன் காத்துக்கொண்டிருந்தார்.

அந்த இடமானது தற்போது நகரமயமாகிவிட்டது. 1857 கோடைக்காலத்தில் முழு வீச்சுடன் சிப்பாய் கலகத்தை பிரிட்டன் படைகள் எதிர்த்து நின்ற இடம் எது என்பதை கண்டறிய முற்பட்டேன்.

அங்கு நான் ஆய்வு செய்துக்கொண்டிருந்தபோது, குரங்குகளின் கூட்டம் தாக்குதலுக்கு தயாராக புதர்களுக்கு பின் மறைந்துக் கொண்டிருந்தன. தாக்குதலுக்கு எப்போதும் தயாராக இருக்கும் இடம் இது என்று நினைத்துக் கொண்டேன்.

அந்த இடத்திற்கு அருகில் இருக்கும் அலிபூர் சாலைக்கு ஒரு டாக்ஸி மூலம் சென்றோம். அங்குதான் செப்டம்பர் 14ஆம் தேதி காலை நிகோல்ஸன் தனது வீரர்களுடன் முகாம் இட்டிருந்தார்.

குதாஸியா பாஹ் பகுதியில் இருந்து தாக்குதல் நடத்த அவர் திட்டமிட்டிருந்த இடம் இன்றும் அப்படியே மாறாமல் இருக்கிறது. லெஃப்டினெண்ட் ரிசர்ட் பார்டர், நகரத்தின் எல்லைப் பகுதியில் இருந்து விலகிச் செல்லும்போது, அங்கு தோட்டாக்களின் சல்ஃபர் மணத்துடன் ரோஜா மலர்களின் நறுமணத்தையும் உணர்ந்தார்.

ஆச்சரியத்திற்குரிய விஷயம் என்னவென்றால், 160 ஆண்டுகளுக்கு பிறகு இன்றும் அங்கு அதே ரோஜா மலர் செடிகள் இருப்பதுதான்! இந்த இடத்தில் இருந்துதான் படைவீர ர்கள் சிப்பாய் கலகத்தில் ஈடுபட்ட இந்திய புரட்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பார்கள்.

இந்த பூங்காவுக்கு எதிரில் நகரின் எல்லைப்புற சுவர்களும், கஷ்மீரி கேட் நுழைவாயில் சுவர்களும் சிதிலமடைந்த இடிபாடுகள் காணப்படுகின்றன. இங்குதான் நிகோல்ஸனும் அவரது வீரர்களும் நின்றிருப்பார்கள்,

அங்கிருந்து கஷ்மீரி கேட் பகுதிக்கு வந்தேன். எதிரிகளை இந்த எல்லைப்பகுதியில் நிறுத்துவதற்காக நிகோல்ஸன் இங்குதான் முகாமிட்டிருந்தார். தற்போது இங்கு போக்குவரத்து முனையம் ஒன்றை அமைக்கவேண்டும் என்று அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.

இருந்தாலும் இந்தப் பகுதி தற்போது பாதுகாக்கப்பட்ட பகுதியாக வைக்கப்பட்டிருக்கிறது. இதன் சுற்றுப்புறப் பகுதிகள் தற்போது அழகுபடுத்தப்பட்டுள்ளன.

முன்புறச் சுவர் காணாமல் போய்விட்டிருந்தாலும் லோதியான் சாலையில் இருந்து சற்று தூரத்தில் வலப்புறத்தில் இருக்கிறது நிகோல்சன் சாலை.

அங்கு ஒரு புறத்தில் கடைகளும், மறுபுறத்தில் வீடுகளும் அமைந்துள்ளன. அரை மைல் தொலைவிற்குள்ளேயே மிகப் பெரிய வித்தியாசம் இருப்பதை காண முடிந்தது. இந்தப் பகுதிகளில் எல்லாம் அவர் வலம் வந்திருப்பார் என்று நினைத்துக் கொண்டே அந்த பாதையில் நடந்தேன்.

ஆனால், நவீன டெல்லியின் சாலை தொடங்கிவிட்டது. நிகோல்ஸன் இறந்த பல தசாப்தங்களுக்கு பிறகு கட்டப்பட்ட பழைய டெல்லி ரயில் நிலையம் நோக்கி செல்லும் சாலை…

சற்றே திசை மாறி நடந்தால், மற்றொரு ரயில் பாதை. அங்கு ஒரு காலத்தில் காபுல் கேட் இருந்ததாம்… அதற்கு தென்புறத்தில் நயா பாஜார் சாலை தொடங்கிவிடுகிறது. ஆனால், நிகோல்ஸன் துப்பாக்கியால் சுடப்பட்ட இடம் எது? பர்ன் பேஸ்சின் மற்றும் லாகூரி கேட் தற்போது பழைய நிலைமையில் இல்லை.

அந்த வழியில் சென்றால் நிகோல்ஸன் துப்பாக்கியால் சுடப்பட்ட இடத்தை கண்டுபிடிக்கவே முடியாது. நயா பஜாரின் குறுகிய சாலைகளில் அமர்ந்திருப்பவர்களிடம் நிகோல்ஸன் பற்றி விசாரித்தால், அவரின் பெயரை யாருமே கேள்விபட்ட தில்லை என்றே பதில் வருகிறது. எங்களின் தேடலுக்கு யாராலும் உதவி செய்ய முடியவில்லை.

"முன்பு இது இவ்வளவு கடினமானதாக இல்லை. லார்ட் கர்ஜன் 20ஆம் நூற்றாண்டின் முதல் வைஸ்ராயாக தனது பதவியை தொடங்கியபோது, கஷ்மீரி கேட்டிற்கு அருகில் இதுபோன்ற ஒரு பயணம் தொடங்கப்பட்டது. காபுல் கேட்டில் இருந்து சுமார் 80 கெஜ தொலைவில் உள்ள ஒரு சுவற்றில் ஒரு அறிவிப்பு பலகை கிடைத்தது.

அங்கு, பிரிகேடியர் ஜென்ரல் ஜான் நிகோல்ஸன் 1857 செப்டம்பர் 14 தாக்குதலில் படுகாயமடைந்தார் என்று எழுதப்பட்டிருந்தது. 1940இல் எடுக்கப்பட்ட டெல்லியின் புகைப்படங்களில் அந்த சுவரும், அறிவிப்புப் பலகையும் இருப்பதைக் காணலாம். ஆனால், தற்போது அவை இரண்டுமே அழிந்துவிட்டன. ஆனால் நினைவுகள் மட்டுமே இன்னும் எஞ்சியுள்ளன.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்