கமல்ஹாசன் விக்கிபீடியா பக்கத்தில் திருகல்: இந்துக்களுக்கு எதிரானவர் என்று மாற்றியமைப்பு #BBCFactcheck

கமல் படத்தின் காப்புரிமை Getty Images

கமல்ஹாசன் பற்றிய விக்கிபீடியா பக்கத்தில் "இவர் இந்துகளுக்கு எதிரான நபர்" என்ற தகவல் இருப்பது போன்ற ஸ்கிரீன்ஷாட் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஞாயிறன்று தேர்தல் பிரசாரத்திற்காக அரவக்குறிச்சி தொகுதி பள்ளப்பட்டியில் பேசிய கமல் ஹாசன், "சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து" என்று சொன்ன பிறகு இந்த ஸ்கிரீன்ஷாட் வைராலகி வருகிறது.

கடந்த வருடம் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார் கமல் ஹாசன்.

1948ஆம் ஆண்டு மகாத்மா காந்தியை கொன்றது நாதுராம் கோட்ஸே என்பதை குறித்து கமல் இவ்வாறு கூறினார்.

அரவக்குறிச்சியில் பேசிய கமல் ஹாசன், "இது முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் பகுதி என்பதால் நான் இதை கூறவில்லை. ஆனால் நான் இதனை காந்தியின் சிலை முன்பு சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து, அவர் பெயர் நாதுராம் கோட்ஸே. அங்குதான் அது தொடங்கியது." என்று தெரிவித்தார்.

இதையடுத்து பகிரப்பட்டுவரும் கமல் குறித்த இந்தி விக்கிபீடியா ஸ்கிரீன்ஷாட்டில் கமல் ஹாசன் குறித்த விவரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

மாற்றியமைக்கப்பட்ட பக்கத்தில்: "ஹிந்துகளுக்கு எதிரான மனப்பான்மை கொண்ட கமல் ஹாசன், 1954ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி பரமக்குடியில் பிறந்தார். திரைப்பட நடிகர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர், இந்திய சினிமாவின் முக்கியநபர், கதாபாத்திரமாகவே வாழக்கூடியவர்." என்று எழுதப்பட்டுள்ளது.

இது எப்படி நடந்தது?

விக்கிபீடியா பக்கம் என்பது புகழ்பெற்ற நபர்கள், சம்பவங்கள், நாடுகள் மற்றும் உலகில் உள்ள அனைத்தின் தகவல்களையும் கொண்ட பக்கங்களாகும். யார் வேண்டுமானாலும் விக்கிபீடியா பக்கத்தை உருவாக்கலாம். மேலும் ஏற்கனவே உள்ளதில் மாற்றமும் செய்யலாம்.

மே 13ஆம் தேதியன்று காலை 11.32 மணிக்கு பெயர் தெரியாத பயனர் ஒருவர், கமல் ஹாசன் குறித்த ஹிந்தி விக்கிபீடியா பக்கத்தில், "ஹிந்துக்களுக்கு எதிரான மனபான்மையும், தோற்றமும் கொண்டவர்" என மாற்றியுள்ளார்.

விக்கிபீடியாவின் பங்களிப்பாளர் சந்தீப் ராட் அந்த வார்த்தைகளை மதியம் 1.30 மணி அளவில் நீக்கியுள்ளார்.

மே 14 காலை 3.46 அளவில் கமல் ஹாசன் குறித்து தகவல்களை எழுதிய நபர் மீண்டும் அதில் சில தகவல்களை சேர்த்துள்ளார்.

அதே நபர் ஒரு மணி நேரத்துக்கு பிறகு கமல் ஹாசன் பிறந்த இடம் லாஹூர் , பாகிஸ்தான் என்று மாற்றியுள்ளார்.

ஒரு பயனர் தனது விக்கிபீடியா பக்கத்துக்கு உரிமை கோரவில்லை என்றால் அதை பாதுகாக்கவில்லை என்றால், அதை யார் வேண்டுமானால் மாற்றிமையக்க முடியும். இதுதான் கமல்ஹாசனின் பக்கத்துக்கும் ஏற்பட்டுள்ளது. கமல் ஹாசனின் பக்கத்தை அவரோ அவரின் கட்சியோ உரிமைகோரவில்லை. எனவே பயனர்கள் அதை பலமுறை மாற்றம் செய்துள்ளனர்

அவரின் ஆங்கில விக்கிபீடியா பக்கத்தில் எந்த மாற்றமும் நிகழவில்லை.

இதற்கு முன்பு நடந்த சம்பவங்கள்

விக்கிபீடியா பக்கம் இம்மாதிரியாக மாற்றப்பட்டது இது முதல்முறையல்ல.

இந்த பக்கங்கள், இணையதளம் உள்ள யார் வேண்டுமானால் மாற்றம் செய்ய முடியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

சில பக்கங்கள் வன்முறை அல்லது அசம்பாவிதங்களை ஏற்படுத்துமானால் அதில் மாற்றம் செய்ய முடியாது.

`1966ஆம் ஆண்டு மாடுகளை வெட்டுவதற்கு எதிராக எழுந்த கிளர்ச்சி,` குறித்த விக்கிபீடியா பக்கத்தில் நிகழ்ந்த மாற்றம் குறித்து `1966 இந்து இனப்படுகொலை தொடர்பான உண்மை` என்ற கட்டுரையில் பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த மாற்றம் செய்யப்பட்ட விக்கிபீடியா பக்கத்தில் "மூன்றிலிருந்து ஏழு லட்சம் பேர் இதில் பங்கெடுத்தார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தை மக்கள் சூழ்ந்த பிறகு போலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுமார் 375-5000 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 10,000 பேர் காயமடைந்தனர் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்