தோப்பு வெங்கடாச்சலம்: கட்சிப் பதவிகளில் இருந்து விலகினார் அதிமுக எம்.எல்.ஏ.

தோப்பு வெங்கடாச்சலம்
Image caption தோப்பு வெங்கடாச்சலம்

அதிமுகவில் தாம் வகித்து வந்த அனைத்துப் பதவிகளில் இருந்தும் விலகுவதாக முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான தோப்பு வெங்கடாசலம் அறிவித்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சேலத்தில் இன்று திங்கள்கிழமை மாலை சந்தித்த அவர், முதல்வரிடம் தாம் அளித்துள்ள தனது ராஜினாமா கடிதத்தின் மீது முதல்வர் முடிவெடுப்பார் என்று தெரிவித்துள்ளார்.

கருத்துக் கணிப்பை கருத்தில் கொண்டு தான் இந்த முடிவு எடுக்கவில்லை என்றும் ஒரு வாரத்திற்கு முன்பே ராஜினாமா குறித்து முடிவெடுத்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார் .

"தமிழக முதல்வர் தேர்தல் வேலைகளில் இருந்ததால் அவரை சந்திக்க முடியவில்லை. தற்போது நேரம் கிடைத்ததால் அவரை நேரில் சந்தித்து கடிதம் கொடுத்ததாக" தோப்பு வெங்கடாச்சலம் தெரிவித்தார் .ஆரம்பம் முதல் இன்று வரை அம்மாவின் உண்மையான விசுவாசியாக இருந்த தாம் தற்போது பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக கட்சி பொறுப்புகளில் இருந்து விலகுவதாகவும் கட்சியின் அடிப்படை தொண்டராக மட்டுமே செயல்படுவதாகவும் தோப்பு வெங்கடாசலம் பேட்டியில் கூறினார்.

மேலும் தற்போது மன உளைச்சலும் இல்லை மகிழ்ச்சியிலும் இல்லை என்றும் அவர் கூறினார்.

தமிழக சட்டப்பேரவையில் அதிமுகவின் பலம் குறைந்திருக்கும் நிலையில், தற்போது இவர் விலகி இருப்பது அக்கட்சிக்கும் மேலும் சிக்கலை அதிகரிக்கும் என்று தெரிகிறது.

22 தொகுதிகளில் நடந்து முடிந்த இடைத்தேர்தல்களில் குறைந்தது எட்டு இடங்களிலாவது வெற்றி பெற வேண்டும் என்ற சூழலில்தான் அதிமுக தேர்தலை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்