கடலூர் மக்களவைத் தொகுதியில் வெற்றிக் கொடி நாட்டப்போவது தி.மு.க.வா அ.தி.மு.க.வா?

கடலூர் தொகுதி படத்தின் காப்புரிமை Ami Vitale

தி.மு.கவின் கோட்டையாக திகழ்ந்த கடலூர் தொகுதியை கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க கைப்பற்றியது. தற்போது, தேர்தல் முடிவுகள் வெளிவரவுள்ள நிலையில், கடலூர் மீண்டும் தி.மு.க வசமாகுமா என்ற கேள்விக்கும் விடைகிடைக்கவுள்ளது.

கடலூர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம் மற்றும் திட்டக்குடி ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளை கொண்டுள்ள தொகுதிதான் கடலூர் மக்களவைத் தொகுதி. இதில், திட்டக்குடி தனி தொகுதியாகும்.

தொகுதி மறு சீரமைப்புக்கு முன், உளுந்தூர்ப்பேட்டை (தனி), நெல்லிக்குப்பம், கடலூர், பண்ருட்டி, ரிஷிவந்தியம், சங்கராபுரம் ஆகியவை கடலூர் மக்களவைத் தொகுதியில் இருந்தன. நெய்வேலி, திட்டக்குடி ஆகியவை புதிதாக உருவாக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் ஆகும்.

புதுச்சேரி யூனியன் பிரதேசம் மற்றும் விழுப்புரம் மாவட்டத்துடன் எல்லையை பகிர்கிறது இந்த தொகுதி. நெய்வேலியில் உள்ள என்.எல்.சி நிறுவனம் இத்தொகுதியின் ஒரு முக்கிய அடையாளமாக இருக்கிறது.

கடலூரில் மீன்பிடித் தொழிலும், பண்ருட்டியில் முந்திரி, பலா விவசாயமும் முக்கிய வருவாய் ஈட்டும் தொழிலாக உள்ளன.

இதுவரை நடந்த மக்களவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியே அதிக முறை வென்றுள்ளது. 1999லிருந்து 2014வரை தொடர்ந்து 15 ஆண்டுகள் இத்தொகுதியில் திமுக ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

16வது மக்களவைத் தேர்தலில், அ.தி.மு.க வேட்பாளர் அருண்மொழித்தேவன் 4,81,429 வாக்குகளை பெற்று தி.மு.க வேட்பாளரை காட்டிலும் சுமார் இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :