கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி: கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி

சந்திர சுதேஸ்வர கோயில் படத்தின் காப்புரிமை https://krishnagiri.nic.in

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியின் சார்பாக போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் செல்லக்குமார், அதிமுக வேட்பாளர் முனுசாமியை விட 1,56,765 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

கர்நாடக, ஆந்திர எல்லையை ஒட்டியிருக்கும் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி முன்பு காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்து வந்தது.

2019 மக்களவைத் தேர்தலில் முக்கிய வேட்பாளர்கள்

2019 இந்திய மக்களவைத் தேர்தலில், அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை (அதிமுக) சேர்ந்த கே.பி.முனுசாமி, திராவிட முன்னேற்ற கழக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸின் சார்பாக ஏ. செல்லக்குமார், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை (அமமுக) சேர்ந்த கணேச குமார், மக்கள் நீதி மய்யத்தை (மநீம) சேர்ந்த ஸ்ரீ காருண்யா, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த மதுசூதனன் ஆகியோர் கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களாவர்.

இரு மாநில எல்லைகளை ஒட்டி அமைந்துள்ளதால், தமிழ், கர்நாடகம், தெலுகு என மூன்று மொழி பேசுகின்ற பகுதியாக இது உள்ளது.

இதற்கு தகுந்தாற்போலவே ஒவ்வொரு கட்சிகளின் வேட்பாளரும் நிறுத்தப்படுகின்றனர்.

கிருஷ்ணகிரியில் அதிக தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. அதனால், இங்கு தொழிலாளர்கள் அதிகமாக வசிக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை https://krishnagiri.nic.in

மேலும், காய்கறிகள் மற்றும் பூக்கள் அதிகமாக பயிரிடப்படும் பகுதியாகவும் கிருஷ்ணகிரி விளங்கி வருகிறது. ரோஜா பூ இங்கிருந்து அதிக அளவில் ஏற்றுமதியாகிறது.

கிருஷ்ணகிரி, ஒசூர், பர்கூர், தளி, ஊத்தங்கரை (தனி), வேப்பனஹள்ளி ஆகிய சட்டமன்ற தொகுதிகள் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் அடைங்கியுள்ளன.

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியின் வெற்றி வரலாறு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :