தூத்துக்குடி மக்களவைத் தொகுதி: திமுக வேட்பாளர் கனிமொழி வெற்றி

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியிலுள்ள பனிமாதா தேவாலயம் படத்தின் காப்புரிமை https://thoothukudi.nic.in/

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி, பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்திரராஜனை விட 3,47,209 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

2019 மக்களவைத் தேர்தலில் முக்கிய வேட்பாளர்கள்

2019ம் ஆண்டு இந்திய மக்களவைத் தேர்தலில், அண்ணா திராவிட முன்னேற கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழிசை சௌந்தரராஜனும், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் திமுகவின் கனிமொழி கருணாநிதியும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் புவனேஸ்வரனும், மக்கள் நீதி மய்யத்தின் பொன் குமரனும், நாம் தமிழர் கட்சியின் கிறிஸ்டன்டைன் ராஜாசேகரும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகின்றனர்.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வரலாறு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :