மக்களவைத் தேர்தல் 2019: இந்தியாவில் வாக்குகள் எப்படி எண்ணப்படும்?

வாக்குகள் எண்ணப்படுதல் படத்தின் காப்புரிமை Getty Images

இந்தியாவில் வாக்குகள் எப்போதுஎண்ணப்படுகிறது ?

17வது இந்திய மக்களவைத் தேர்தலின் வாக்குகள் எண்ணிக்கை மே 23ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது. விவிபேட் இயந்திரங்களின் வாக்கு ஒப்புகை சீட்டுகள் எண்ணப்படுவதால், முடிவுகள் வெளியாவது சற்று தாமதமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் வாக்குகள் எவ்வாறு எண்ணப்படுகின்றன?

விரிவாக வாசிக்க: வாக்கு எண்ணிக்கை எவ்வாறு நடைபெறும்?

எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்னால், வாக்கு எண்ணிக்கையை நடத்தும் தேர்தல் அதிகாரியும், துணை அதிகாரியும் வாக்களிப்பின் ரகசியத்தை காப்பது பற்றி உரக்க வாசித்து உறுதிமொழி எடுத்துகொள்வர்.

வாக்குகளை எண்ண தொடங்குவதற்கு முன்னால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) ஆய்வு செய்யப்படும். வாக்கு எண்ணிக்கை நடத்தும் தேர்தல் அதிகாரிகளின் முன்னால் இது நடைபெறும்.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையத்தில் தங்களின் எண்ணிக்கை முகவர்களோடு போட்டியிடும் வேட்பாளர்கள் அல்லது தேர்தல் முகவர்கள் இருக்க அனுமதியுண்டு. வாக்குகள் எண்ணப்படுவதை இந்த முகவர்கள் மேற்பார்வையிடுவர்.

தபால் வாக்குகள் முதலில் எண்ணப்படுவது வழக்கம். ஆனால், தபால் வாக்குகள் எண்ணப்படும்போதே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகியிருக்கும் வாக்குகள் எண்ணுவதற்கு தேர்தல் ஆணையம் இப்போது அனுமதி வழங்கியுள்ளது. இந்த வாக்கு எண்ணிக்கை அந்த நிலையத்தின் தேர்தல் அதிகாரியின் மேற்பார்வையில் நடைபெறும்.

விவிபேட் படத்தின் காப்புரிமை Getty Images

VVPATஇயந்திரத்தால் தேர்தல் முடிவுகள் தாமதமாகுமா?

விவிபேட் இயந்திரங்களில் வாக்கு ஒப்புகை சீட்டுகள் எண்ணப்படுவது எப்படி?

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் பரவலாக ஐந்து விவிபேட் இயந்திரங்கள் எடுக்கப்பட்டு, அதன் வாக்கு ஒப்புகை சீட்டுகள் எண்ணப்படும்.

இந்த ஐந்து விவிபேட் இயந்திரங்களின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) எடுக்கப்பட்டு அதிலுள்ள வாக்குப்பதிவுகள் எண்ணப்படும்.

மேலும் வாசிக்க:விவிபேட் ஒப்புகை சீட்டு சரிபார்ப்பு: எதிர்கட்சிகளின் மனு நிராகரிப்பு

இவிஎம்-களில் வாக்குகள் எண்ணப்படுவது எப்படி?

படத்தின் காப்புரிமை AFP

பின்னர், இவற்றை ஒப்பிட்டு பார்த்து சரியாக இருந்தால், பிற இவிஎம் எந்திரங்களில் பதிவாகியிருக்கும் வாக்குகள் எண்ணப்படும். இந்த இயந்திரங்களின் விவிபேட் எந்திரங்களிலுள்ள ஒப்புகைச் சீட்டுகள் எண்ணப்படமாட்டாது.

21 எதிர்க்கட்சிகள் எல்லா விவிபேட் இயந்திரங்களிலும் உள்ள 50 சதவீத வாக்கு ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டும் என்று தொடுத்த மனுவை தள்ளுபடி செய்த இந்திய உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை அளித்துள்ளது.

பரவலாக தெரிவு செய்யப்படும் ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் விவிபேட் (VVPAT) எனப்படும் வோட்டர் வெரிஃபயபிள் பேப்பர் ஆடிட் டிரேல் இயந்திரத்தின் சீட்டுகள் இதுவரை சரிபார்க்கப்பட்டன.

மேலும் வாசிக்க: விவிபேட் எந்திரம் காரணமாக தேர்தல் முடிவுகள் வெளியாக தாமதமாகுமா?

தேர்தல் மோசடி தெரிய வந்தால் என்ன செய்ய வேண்டும்?

வாக்குகள் எண்ணப்படும்போது, மோசடிகள் நடைபெற்றதாக தெரிய வந்தால், இந்நிலைய தேர்தல் அதிகாரி தேர்தல் ஆணையத்திற்கு உடனடியாக தகவல் அளிக்க வேண்டும்.

நிலைமையை பொறுத்து தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கையை முடிக்க சொல்லலாம் அல்லது அந்த வாக்கு எண்ணிக்கை செல்லுபடியாகாது என்று அறிவித்து மறுவாக்குப்பதிவு நடத்த ஆணையிடலாம்.

எந்த புகாரும் இல்லாமல் எண்ணிக்கை நிறைவடைந்தால் அல்லது தேர்தல் ஆணையத்தின் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் இருந்தால் வாக்கு எண்ணிக்கை நிலைய அதிகாரி வாக்குகள் அனைத்தையும் எண்ணியவுடன் முடிவை அறிவிப்பார்.

இந்த முடிவு தேர்தல் ஆணையத்தின் இணையதளத்திலும் உடனடியாக வெளியிடப்படும்.

மேலும் வாசிக்க: தேனிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டதில் முறைகேடா?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :