முக்கிய வேட்பாளர்கள் இதுவரை பெற்றுள்ள வாக்குகள் எத்தனை?

சோனியா காந்தியா படத்தின் காப்புரிமை Getty Images

மக்களவைத் தேர்தலில் மோதி, அமித் ஷா போன்ற தலைவர்கள் பெரும் வாக்கு வித்தியாசங்களில் வெற்றி வாகை சூடுகின்றனர்.

நரேந்திர மோதி - வாரணாசி தொகுயில் போட்டியிட்ட மோதி 6,22,477 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த ஷாலினி யாதவ் 185646 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.

அமித் ஷா - குஜராத் காந்திநகரில் போட்டியிட்ட அமித் ஷா 888210 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். இரண்டாம் இடத்தில் 3,33,642 வாக்குகள் பெற்று காங்கிரஸ் கட்சியின் சி.ஜே.சாவ்டா இரண்டாம் இடத்தில் உள்ளார்.

நிதின் கட்கரி - மஹராஷ்டிராவின் நாக்பூர் தொகுதியில் போட்டியிட்ட நிதின் கட்கரி 3,14,971 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் நானா படோல் 22,68,46 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.

ராகுல் காந்தி - உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி மற்றும் கேரளாவின் வயநாட்டில் வேட்பாளராக போட்டியிட்ட ராகுல் காந்தி வயநாட்டில் 5,38,195 வாக்கு பெற்று முன்னிலையிலும், அமேதியில் 1,85,968 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும் உள்ளார். அமேதியில் 2,04857 வாக்குகள் பெற்று ஸ்மிரிதி இரானி முதல் இடத்தில் உள்ளார்

சோனியா காந்தி - உத்தரப் பிரதேசம் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட சோனியா காந்தி 4,861,58 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் தினேஷ் ப்ரதாப் 32,92,25 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.

கனிமொழி - தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி 3,53,136 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட்ட தமிழிசை 1,30,607 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.

எச்.ராஜா - தமிழ்நாட்டின் சிவகங்கையில் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட எச்.ராஜா 1,27,123 வாக்குகள் பெற்றுள்ளார். அந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் 3,04,132 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

அன்புமணி ராமதாஸ் - தர்மபுரி தொகுதியில் பாமக கட்சி சார்பாக போட்டியிட்டு அன்புமணி ராமதாஸ் 2,99,240 வாக்குகளை பெற்றுள்ளார். அந்த தொகுதியில் திமுகவின் செந்தில்குமார் 33,89,70 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

தயாநிதி மாறன் - மத்திய சென்னையில் திமுக சார்பில் போட்டியிட்ட தயாநிதி மாறன் 37,62,61 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

திருமாவளவன் - சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவன் 2,57,931 வாக்குகள் பெற்று முதல் இடத்தில் உள்ளார். அந்த தொகுதியில் அதிமுகவை சேர்ந்த சந்திர சேகர் 2,55,361 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.

அகிலேஷ் யாதவ் - உத்தரப் பிரதேசத்தின் அசாம்கர் தொகுதியில் போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் 3,45,095 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

முலாயம் சிங் யாதவ் - உத்தரப் பிரதேசத்தின் மெயின்புரி தொகுதியில் 31,80,40 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

தேவ கெளடா - கர்நாடகாவின் தும்கூர் தொகுதியில் போட்டியிட்ட தேவகெளடா 57,94,34 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். அந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் பாசவராஜ் 5,92,621 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :