தமிழகம், புதுவை மக்களவை மற்றும் 22 சட்டமன்ற தொகுதிகளின் வெற்றியாளர்கள் பட்டியல்

தமிழகம், புதுவை மக்களவை மற்றும் 22 சட்டமன்ற தொகுதிகளின் வெற்றியாளர்கள் பட்டியல்

வியாழக்கிழமை நடந்த இந்திய மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், பல மாநிலங்களில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுதியான வெற்றியை பெற்றுள்ள போதிலும், தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணியே அதிக தொகுதிகளில் வென்றுள்ளது.

தமிழகத்தில் வேலூர் நீங்கலாக தேர்தல் நடந்த 38 மக்களவை தொகுதிகளில், திமுக கூட்டணி 37 தொகுதிகளில் வென்றுள்ளது.

அதில் திமுக 19 தொகுதிகளிலும், காங்கிரஸ் 8 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிகளிலும், விடுதலை சிறுத்தைகள் 2 தொகுதிகளிலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 1 தொகுதியிலும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 1 தொகுதியிலும், மதிமுக 1 தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன.

படத்தின் காப்புரிமை THAMIZHACHI THANGAPANDIYAN

அதிமுக கூட்டணி தேனி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. அதேவேளையில் புதுவை மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி வென்றுள்ளது.

தமிழகம் மற்றும் புதுவை மக்களவை தொகுதிகளின் வெற்றியாளர்கள் பட்டியல்.

  • அரக்கோணம் - எஸ்.ஜெகத் ரட்சகன் (திமுக)
  • ஆரணி - எம் கே விஷ்ணு பிரசாத் (காங்கிரஸ்)
  • மத்திய சென்னை - தயாநிதி மாறன் (திமுக)
  • வட சென்னை - கலாநிதி வீராசாமி (திமுக)
  • தென் சென்னை - தமிழச்சி தங்கபாண்டியன் (திமுக)
  • சிதம்பரம் - திருமாவளவன் (விசிக )
  • கோயம்புத்தூர் - பி.ஆர். நடராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்)
  • கடலூர் - டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ் (திமுக)
  • தருமபுரி - செந்தில் குமார் (திமுக)
  • திண்டுக்கல் - வேலுசாமி (திமுக)
  • ஈரோடு - அ.கணேசமூர்த்தி (மதிமுக - திமுக சின்னம் )
  • கள்ளக்குறிச்சி - கவுதம் சிகாமணி (திமுக)
  • காஞ்சிபுரம் - ஜி.செல்வம் (திமுக)
  • கன்னியாகுமரி - ஹெச். வசந்த குமார் (காங்கிரஸ்)
  • கரூர் - ஜோதிமணி (காங்கிரஸ்)
  • கிருஷ்ணகிரி - டாக்டர் ஏ. செல்லகுமார் (காங்கிரஸ்)
  • மதுரை - சு.வெங்கடேசன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்)
  • மயிலாடுதுறை - எஸ். ராமலிங்கம் (திமுக)
  • நாகப்பட்டினம் - எம்.செலவராஜ் (இந்திய கம்யூனிஸ்ட்)
  • நாமக்கல் - ஏ.கே.பி. சின்ராசு (கொமுதேக - திமுக சின்னம் )
  • நீலகிரி - ஆ.ராசா (திமுக)
  • பெரம்பலூர் - டி.ஆர். பச்சமுத்து (ஐ.ஜே.கே - திமுக சின்னம் )
  • பொள்ளாச்சி - சண்முக சுந்தரம் (திமுக)
  • ராமநாதபுரம் - நாவாஸ்கனி (இந்திய யூனியன் முஸ்லீம் லீக் )
  • சேலம் - எஸ்.ஆர். பார்த்திபன் (திமுக)
  • சிவகங்கை - கார்த்தி சிதம்பம் (காங்கிரஸ்)
  • ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு (திமுக)
  • தென்காசி - தனுஷ் எம்.குமார் (திமுக)
  • தஞ்சாவூர் - எஸ்.எஸ். பழனி மாணிக்கம் (திமுக)
  • தேனி - ரவீந்திர நாத் குமார் (அதிமுக)
  • திருவள்ளூர் - கே. ஜெயக்குமார் (காங்கிரஸ்)
  • தூத்துக்குடி - கனிமொழி (திமுக)
  • திருச்சி - திருநாவுக்கரசர் (காங்கிரஸ்)
  • திருநெல்வேலி - ஞானதிரவியம் (திமுக)
  • திருப்பூர் - சுப்பராயன் - (இந்திய கம்யூனிஸ்ட்)
  • திருவண்ணாமலை - அண்ணாதுரை சி.என் (திமுக)
  • விழுப்புரம் - டி.ரவிக்குமார் ( விசிக - திமுக சின்னம் )
  • விருதுநகர் - மாணிக்கம் தாகூர் (காங்கிரஸ்)
  • புதுச்சேரி - வைத்தியலிங்கம் (காங்கிரஸ்)

இதனிடையே தமிழகத்தில் உள்ள 22 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில், திமுக 13 தொகுதிகளிலும், அதிமுக 9 தொகுதிகளிலும் வென்றுள்ளன. அவை பின்வருமாறு -

  • பூந்தமல்லி - கிருஷ்ணசாமி (திமுக)
  • பெரம்பூர் - ஆர்.டி. சேகர் (திமுக)
  • சோளிங்கர் - சம்பத் (அதிமுக)
  • ஆம்பூர் - வில்வநாதன் (திமுக)
  • குடியாத்தம் - காத்தவராயன் (திமுக)
  • சூலூர் - கந்தசாமி (அதிமுக)
  • அரவக்குறிச்சி - செந்தில்பாலாஜி (திமுக)
  • திருப்போரூர் - செந்தில் (திமுக)
  • ஓசூர் - சத்யா (திமுக)
  • பாப்பிரெட்டிப்பட்டி - கோவிந்தசாமி (அதிமுக)
  • அரூர் - சம்பத்குமார் (அதிமுக)
  • நிலக்கோட்டை - தேன்மொழி (அதிமுக)
  • மானாமதுரை - நாகராஜன் (அதிமுக)
  • திருவாரூர் - பூண்டி கலைவாணன் (திமுக)
  • தஞ்சாவூர் - நீலமேகம் (திமுக)
  • திருப்பரங்குன்றம் - சரவணன் (திமுக)
  • ஓட்டப்பிடாரம் - சண்முகையா (திமுக)
  • பரமக்குடி - சாத்தான் பிரபாகர் (அதிமுக)
  • சாத்தூர் - ராஜவர்மன் (அதிமுக)
  • விளாத்திகுளம் - சின்னப்பன் (அதிமுக)
  • பெரியகுளம் - சரவணகுமார் (திமுக)
  • ஆண்டிபட்டி - மகாராஜன் (திமுக)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :