திமுக இதற்கு முன் இந்த அளவு எண்ணிக்கையில் வென்றுள்ளதா? - 1957 முதல் 2019 வரை

அண்ணாதுரை

பதினேழாவது மக்களவையில் திராவிட முன்னேற்ற கழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 23. திமுக உறுப்பினர்கள் 19; திமுக சின்னத்தில் போட்டியிட்டவர்கள் 4.

இந்த அளவு எண்ணிக்கையில் திமுக உறுப்பினர்கள் வெல்வது இது மூன்றாவது முறை.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40க்கு 40 மக்களவை தொகுதியில் வென்ற 14வது மக்களவையில் தேர்தலில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 16. (திமுக சின்னத்தில் போட்டியிட்டவர்கள் உட்பட).

1952 நடந்த முதல் மக்களவை தொகுதியில் திமுக போட்டியிடவில்லை. 1957ம் ஆண்டு நடந்த இரண்டாவது மக்களவை தொகுதியில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்டு இரண்டு இடங்களில் வென்றது.

நான்காவது மற்றும் ஐந்தாவது மக்களவையில் திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 25.

1957 முதல் 2019 வரை திமுக சார்பாக மக்களவைக்கு சென்ற உறுப்பினர்களின் பட்டியலை தொகுத்துள்ளோம்.

இரட்டை உறுப்பினர்கள் முறை

சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலில் மொத்த நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 489. இதில் தலித்துகள், பழங்குடிகளுக்கான ஒதுக்கீடு 94.

இந்த ஒதுக்கீட்டில் சில தொகுதிகளில் தலித்/பழங்குடி வேட்பாளர்கள் மட்டுமே நிற்கும் முறையும், சில தொகுதிகளில் இரட்டை உறுப்பினர் முறையும் - அதாவது ஒரே தொகுதியில் பொது உறுப்பினர் ஒருவர், தலித்/பழங்குடி உறுப்பினர் ஒருவர் எனத் தேர்ந்தெடுக்கும் முறையும் இருந்தது. ஐந்தாவது மக்களவைத் தொகுதியில் பொள்ளாச்சியில் இரண்டு உறுப்பினர்களும் திமுகவினர்.

இரண்டாவது மக்களவை:

பெயர் தொகுதி
தருமலிங்கம் திருவண்ணாமலை
ஈ.வி.கே. சம்பத் நாமக்கல்

3-வது மக்களவை

பெயர் தொகுதி
தருமலிங்கம் திருவண்ணாமலை
முத்து கவுண்டர் திருப்பத்தூர்
சுப்புநாராயண் கண்டப்பன் திருச்செங்கோடு
கிருஷ்ண மனோகரன் தென் சென்னை
ராமபத்ரன் நாயுடு கடலூர்
ராஜாராம் கிருஷ்ணகிரி
இரா. செழியன் பெரம்பலூர்
பி. சிவசங்கரன் ஸ்ரீ பெரும்பதூர்

4-வது மக்களவை

பெயர் தொகுதி
கே. அன்பழகன் திருச்செங்கோடு
அன்புசெழியன் திண்டுக்கல்
சி.என். அண்ணாதுரை தென் சென்னை
சிட்டிபாபு செங்கல்பட்டு
சி.டி. தண்டபாணி தாராபுரம்
துரைராசு பெரம்பலூர்
முத்து கவுண்டர் திருப்பத்தூர்
கிருஷ்ணமூர்த்தி கவுண்டர் கடலூர்
கமலநாதன் கிருஷ்ணகிரி
சுப்புநாராயண் கண்டப்பன் மேட்டூர்
கிருஷ்ணன் மனோகரன் வட சென்னை
குசேலர் வேலூர்
மாயவன் சிதம்பரம்
ராஜாராம் சேலம்
சம்பந்தம் திருத்தணி
சாமிநாதன் கோபிசெட்டிபாளையம்
இரா. செழியன் கும்பகோணம்
சிவசங்கரன் ஸ்ரீபெரும்பதூர்
எஸ்.டி.சோமசுந்தரம் தஞ்சாவூர்
சுப்ரவேலு மயிலாடுதுறை
விஸ்வநாதன் வந்தவாசி
தெய்வீகன் கள்ளக்குறிச்சி
முரசொலி மாறன் தென் சென்னை
ராமபத்ரன் திண்டிவனம்
நாராயணன் பொள்ளாச்சி
த. கிருட்டிணன் சிவகங்கை

நான்காவது மக்களவையில் திமுக பொதுச் செயலாளர் சி.என். அண்ணாதுரை வென்றார். தமிழக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் தன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார். அந்த இடத்தில் முரசொலி மாறன் வென்றார்.

படத்தின் காப்புரிமை Getty Images

5-வது மக்களவை

பெயர் தொகுதி
சின்னராஜ் கவுண்டர் திருப்பத்தூர்
சிட்டிபாபு செங்கல்பட்டு
தெய்வீகன் கள்ளக்குறிச்சி
சி.டி. தண்டபாணி தாராபுரம்
துரைராசு பெரம்பலூர்
த. கிருட்டிணன் சிவகங்கை
ஈ. ஆர் . கிருஷ்ணன் சேலம்
கிருஷ்ணன் மனோகரன் வட சென்னை
மாதா கெளடர் நீலகிரி
டி. எஸ் . லட்சுமணன் ஸ்ரீபெரும்பதூர்
முரசொலி மாறன் தென் சென்னை
மாயதேவர் திண்டுக்கல்
மாயவன் சிதம்பரம்
முத்துசுவாமி திருச்செங்கோடு
மோகன்ராஜ் காலிங்கராயர் பொள்ளாச்சி
நாராயணன் பொள்ளாச்சி
இரா. செழியன் கும்பகோணம்
எம்.எஸ்.சிவசாமி திருசெந்தூர்
எஸ்.டி. சோமசுந்தரம் தஞ்சாவூர்
சுப்ரவேலு மாயாவரம்
சுவாமிநாதன் கோபிசெட்டிபாளையம்
விஸ்வநாதன் வந்தவாசி
உலகநம்பி வேலூர்
வீரய்யா புதுக்கோட்டை
விஸ்வநாதன் வந்தவாசி

6-வது மக்களவை

பெயர் தொகுதி
ஆசைதம்பி வட சென்னை

7-வது மக்களவை

பெயர் தொகுதி
அர்ஜுனன் தருமபுரி
சி.டி. தண்டபாணி பொள்ளாச்சி
எ. கலாநிதி மத்திய சென்னை
எம். கந்தசாமி திருச்செங்கோடு
தாழை எம் கருணாநிதி நாகப்பட்டினம்
ஜி. லெட்சுமணன் வட சென்னை
மாயதேவர் திண்டுக்கல்
இரா. மோகன் கோவை
முருகைய்யன் திருப்பத்தூர்
நாகரத்தினம் ஸ்ரீபெரும்பதூர்
நடராஜன் பெரியகுளம்
பழனியப்பன் சேலம்
செல்வராஜூ திருச்சி
குழந்தைவேலு சிதம்பரம்
சிவப்பிரகாசம் திருநெல்வேலி

8-வது மக்களவை

பெயர் தொகுதி
எ. கலாநிதி மத்திய சென்னை
என்.வி.என் சோமு வட சென்னை

ஒன்பதாவது மக்களவை:

யாருமில்லை

10-வது மக்களவை

யாருமில்லை

11-வது மக்களவை

பெயர் தொகுதி
டி.ஆர். பாலு தென் சென்னை
வி. கணேசன் சிதம்பரம்
ஞானகுருசாமி பெரியகுளம்
முரசொலி மாறன் மத்திய சென்னை
நாகரத்தினம் ஸ்ரீபெரும்பதூர்
எஸ்.எஸ். பழனிமாணிக்கம் தஞ்சாவூர்
குலசேகர பரசுராமன் செங்கல்பட்டு
கே.பி.ராமலிங்கம் திருச்செங்கோடு
எம். ராமநாதன் கோவை
ஆண்டிமுத்து பெரம்பலூர்
பி. சண்முகம் வேலூர்
வி.பி. சண்முகசுந்தரம் கோபிசெட்டிபாளையம்
சிவா புதுக்கோட்டை
சிவபிரகாசம் திருநெல்வேலி
என்.வி.என். சோமு வட சென்னை
வேணுகோபால் திருப்பத்தூர்
படத்தின் காப்புரிமை Getty Images

12வது மக்களவை

பெயர் தொகுதி
எஸ். ஆறுமுகம் புதுச்சேரி
டி. ஆர். பாலு தென் சென்னை
குப்புசாமி வட சென்னை
முரசொலி மாறன் மத்திய சென்னை
எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தஞ்சாவூர்
வேணுகோபால் திருப்பத்தூர்

13-வது மக்களவை

பெயர் தொகுதி
ஆதிசங்கர் கடலூர்
டி.ஆர்.பாலு தென் சென்னை
ஜெகத்ரட்சகன் அரக்கோணம்
ஜெயசீலன் திருச்செந்தூர்
அ. கிருஷ்ணசாமி ஸ்ரீபெரும்பதூர்
சி. குப்புசாமி வட சென்னை
முரசொலி மாறன் மத்திய சென்னை
எஸ்.எஸ். பழனிமாணிக்கம் தஞ்சாவூர்
ஆ. ராசா பெரம்பலூர்
வேணுகோபால் திருப்பத்தூர்
வெ. வெற்றிசெல்வன் கிருஷ்ணசாமி
எ.கே.எஸ். விஜயன் நாகப்பட்டினம்

14-வது மக்களவை

பெயர் தொகுதி
டி.ஆர்.பாலு தென் சென்னை
பவானி ராஜேந்திரன் ராமநாதபுரம்
சுப்புலஷ்மி ஜெகதீசன் திருச்செங்கோடு
காதர் மொய்தீன் வேலூர்
அ. கிருஷ்ணசாமி ஸ்ரீபெரும்பதூர்
சி. குப்புசாமி வட சென்னை
தயாநிதி மாறன் மத்திய சென்னை
எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தஞ்சாவூர்
கே.சி.பழனிசாமி கரூர்
ஆ. ராசா பெரம்பலூர்
ரகுபதி புதுக்கோட்டை
ராதிகா திருசெந்தூர்
சுகவனம் கிருஷ்ணகிரி
வேங்கடபதி கடலூர்
வேணுகோபால் திருப்பத்தூர்
ஏ.கே.எஸ். விஜயன் நாகப்பட்டினம்

15-வது மக்களவை

பெயர் தொகுதி
அப்துல் ரகுமான் வேலூர்
ஆதி சங்கர் கள்ளக்குறிச்சி
மு.க. அழகிரி மதுரை
டி.ஆர். பாலு ஸ்ரீபெரும்பதூர்
டி.கே.எஸ். இளங்கோவன் வடசென்னை
காந்திச்செலவன் நாமக்கல்
ஜெகத்ரட்சகன் அரக்கோணம்
ஹெலன் டேவிட்சன் கன்னியாகுமரி
ஜெயதுரை தூத்துக்குடி
தயாநிதிமாறன் மத்திய சென்னை
நெப்போலியன் பெரம்பலூர்
எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தஞ்சாவூர்
ஆ. ராசா நீலகிரி
சுகவனம் கிருஷ்ணகிரி
தாமரைசெல்வன் தருமபுரி
வேணுகோபால் திருவண்ணாமலை
ஏ.கே.எஸ். விஜயன் நாகப்பட்டினம்
ரித்தீஷ் ராமநாதபுரம்

16-வது மக்களவை

யாருமில்லை

17-வது மக்களவை

பெயர் தொகுதி
அரக்கோணம் எஸ்.ஜெகத் ரட்சகன்
மத்திய சென்னை தயாநிதி மாறன்
வட சென்னை கலாநிதி வீராசாமி
தென் சென்னை தமிழச்சி தங்கபாண்டியன்
கடலூர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ்
தருமபுரி செந்தில் குமார்
திண்டுக்கல் வேலுசாமி
ஈரோடு அ.கணேசமூர்த்தி
கள்ளக்குறிச்சி கவுதம் சிகாமணி
காஞ்சிபுரம் ஜி.செல்வம்
மயிலாடுதுறை எஸ். ராமலிங்கம்
நீலகிரி ஆ.ராசா
பொள்ளாச்சி சண்முக சுந்தரம்
சேலம் எஸ்.ஆர். பார்த்திபன்
ஸ்ரீபெரும்புதூர் டி.ஆர்.பாலு
தென்காசி தனுஷ் எம்.குமார்
தஞ்சாவூர் எஸ்.எஸ். பழனி மாணிக்கம்
தூத்துக்குடி கனிமொழி
திருநெல்வேலி ஞானதிரவியம்
திருவண்ணாமலை அண்ணாதுரை சி.என்
விழுப்புரம் டி.ரவிக்குமார்
பெரம்பலூர் டி.ஆர். பச்சமுத்து
நாமக்கல் ஏ.கே.பி. சின்ராசு

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :