தமிழகத்துக்கு 9.19 டி.எம்.சி தண்ணீர் வழங்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

விவசாயிகள் படத்தின் காப்புரிமை Getty Images

இன்று செவ்வாய்க்கிழமை டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில் தமிழகத்துக்கு ஜூன் மாதத்துக்குரிய பங்காக 9.19 டி.எம்.சி தண்ணீர் திறந்திவிட வேண்டும் என கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரிய தலைவர் மசூத் உசைன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்ட அதிகாரிகள் குறுவை சாகுபடிக்கு தேவையான தண்ணீர் திறக்க கோரிக்கை வைத்ததாக தெரிவித்தனர்.

உச்சநீதிமன்ற உத்தரவுபடி முழுமையான தண்ணீரை திறக்க கோரிக்கை வைத்துள்ள நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், காவிரி மேலாண்மை வாரிய தலைவர் மசூத் ஹுசைனை சந்தித்ததாகவும், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தண்ணீர் திறக்க முழுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்ததாகவும் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்