ராகுல் காந்தியின் தோல்விக்காக கண்ணீர் சிந்தினரா அமேதி மக்கள் ? #BBCFactCheck

ராகுல் காந்தி: காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜிநாமா செய்வதில் உறுதி படத்தின் காப்புரிமை Getty Images

அமேதி மக்கள் ராகுல் காந்தியின் தோல்விக்காக கண்ணீர் சிந்தியதாக கூறப்படும் ஒரு காணொளி சமூக வலைத்தளங்களில் வெகுவாக பரவியது.

அந்த காணொளியின் மேல் ராகுல் காந்தியின் தோல்விக்கு பின் அமேதி மக்கள் டெல்லிக்கு வந்தார்கள். ராகுலை சந்தித்தவுடன் அவர்களால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை என வாசகங்கள் எழுத்துப்பட்டிருந்தன.

இந்த காணொளி 50,000 முறைக்கு மேல் சமூக வலைத்தளங்களில் பார்வையிடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி மீண்டும் 2019ஆம் ஆண்டின் மக்களவைத் தேர்தலில் மோதியின் பாரதிய ஜனதா கட்சியிடம் படுதோல்வி அடைந்தது.

பாஜகவின் ஸ்மிரிதி இரானி உத்தர பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் வெற்றிபெற்றார்.

அமேதி தொகுதி ராகுல் காந்தியின் குடும்ப தொகுதி போன்றதாகும். அவரின் தந்தை மற்றும் தாய் ராஜீவ் காந்தி, சோனியா காந்தி இந்த தொகுயில் வென்றிருக்கின்றனர்.

கடந்த பதினைந்து வருடங்களுக்காக ராகுல் ஜெயித்து வருகிறார். தேர்தல் தோல்வியால் காங்கிரஸ் செயற்குழு நிராகரித்தாலும் ராகுல் காந்தி கட்சியின் தலைவர் பகுதியிலிருந்து விலக முடிவெடுத்தார்.

அந்த காணொளியில் ராகுல் காந்தி அழும் சில பெண்களுக்கு ஆறுதல் கூறிக்கொண்டு இருப்பார்.

காணொளியின் உண்மைத்தன்மை

அந்த காணொளி அமேதியில் எடுக்கப்பட்ட காணொளி இல்லை.

நவம்பர் 2017இல் உத்திர பிரதேச மாநிலத்தின் தேசிய அனல் மின் கழகத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தின்போது ராகுல் காந்தி பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த காணொளி ஆகும்.

படத்தின் காப்புரிமை Twitter

ரிவெர்ஸ் இமேஜ் தேடலின்போது 2 நவம்பர் 2017 அன்று காங்கிரஸ் கட்சி பகிர்ந்த ஒரு டீவீட்டின் மூலம் இது உறுதி படுத்தப்பட்டது.

அந்த வீடியோவின் மேல் "Congress VP Rahul Gandhi at the #NTPC headquarters, meeting with the affected and their families." என வாசகம் எழுதப்பட்டுள்ளது .

உத்திர பிரதேச மாநிலத்தின் ரேபரேலியில் உள்ள என்டிபிசியின் உன்ச்சர் அலகில் கொதிகலன் குழாய் வெடித்தபோது சுமார் 29 பேர் இறந்தனர் மற்றும் 100 பேர் காயமடைந்தனர்.

என்டிபிசி இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணையைத் தொடங்கியது. உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இறந்தவர்களுக்காக 2 லட்ச ரூபாய் இழப்பீடு மற்றும் படுகாயமடைந்தவர்களுக்கு 50000 ரூபாய் அறிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்