ஜெகன்மோகன் ரெட்டி: ஆந்திரப் பிரதேச முதல்வராக பதவியேற்பு

ஜெகன் மோகன் ரெட்டி: ஆந்திர பிரதேச முதல்வராக பதவியேற்பு படத்தின் காப்புரிமை Getty Images

ஆந்திரப்பிரதேச முதல்வராக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்பு

ஆந்திரப்பிரதேசத்தின் புதிய முதல்வராக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று (வியாழக்கிழமை) பதவி ஏற்றார்.

ஆந்திர மாநில ஆளுநர் இ.எல்.நரசிம்மன் ஜெகனுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தெலுகானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

தெலுங்கு தேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.

இந்த நிகழ்வில் இந்து, இஸ்லாம், மற்றும் கிறிஸ்தவ மத சம்பிரதாயங்கள் கடைப்பிடிக்கப்பட்டன.

ஒத்துழைப்பு

அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், மாநிலத்தின் வளர்ச்சி பணிகளில் இணைந்து பணியாற்றுவோமென குறிப்பிட்டுள்ளார். மாநிலத்தின் முன்னேற்றம் சார்ந்த ஆக்கப்பூர்வமான திட்டங்களில் ஓர் எதிர்க்கட்சியாக தமது ஒத்துழைப்பு இருக்குமென்றும் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

மு.க.ஸ்டாலின் தமிழ், தெலுங்கு மொழியில் வணக்கம் தெரிவித்துவிட்டு ஆங்கிலத்தில் வாழ்த்து கூறிவிட்டு அமர்ந்தார்.

இந்த நிகழ்வில் மு.க.ஸ்டாலின் குங்குமம் வைத்திருந்தார்.

அமைப்பை சுத்தம் செய்ய

முன்னதாக பிபிசி தெலுங்கு சேவைக்கு அளித்த நேர்காணலில் தாம் அமைப்பை சுத்தம் செய்ய வந்துள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

அவர், "ஊழல் எங்கெல்லாம் நடக்கிறது என்று தகவல் சேகரிக்கப்படும். தரவுகள் கிடைத்தபின் நடவடிக்கை தொடங்கும். நான் அமைப்பை சுத்தம் செய்ய வந்துள்ளேன். என் அரசு விடும் ஏலங்கள் வெளிப்படையாக இருக்கும்.

பதவியில் உள்ள நீதிபதி ஒருவரின் தலைமையில் ஒரு நீதி விசாரணை ஆணையம் அமைக்கப்படும். ஒவ்வொரு திட்டத்துக்கும் ஏலம் விடப்படும் முன், அந்த ஆணையத்துக்கு அவை அனுப்பப்படும். அந்த ஆணையம் பரிந்துரைக்கும் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்பட்டபின்னரே ஏலம் விடப்படும்." என்று கூறி இருந்தார்.

நேர்காணலை விரிவாகப் படிக்க: 'நான் அமைப்பை சுத்தம் செய்ய வந்துள்ளேன்' - ஜெகன் மோகன் ரெட்டி

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :