தேர்தல் முடிவன்று இந்து கடைக்காரரை இஸ்லாமியர்கள் தாக்கியது உண்மையா? #BBCFactCheck

தேர்தல் படத்தின் காப்புரிமை Getty Images

உத்தர பிரதேசத்தின் மீரட்டில் நடைபெறுவதாக சொல்லப்படும் இரண்டு குழுக்களுக்கு இடையில் நடைபெறும் சண்டை ஒன்றின் சிசிடிவி காணொளி சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாக பகிரப்பட்டுள்ளது.

இந்த காணொளியில் கீழ்காணும் வாசகமும் காணப்படுகிறது.

"இந்து கடைக்காரர் ஒருவரை இரும்பு கம்பியாலும், கம்புகளாலும், முஸ்லிம்கள் மீரட்டில் தாக்குகின்ற இந்த காணொளியை, வாக்குகள் எண்ணப்படும் நாளில், நீங்கள் பார்க்காவிட்டால், தீவிரவாதிகள் மற்றும் பயங்கரவாதம் பற்றி பேசுவதை நிறுத்திவிடுங்கள்."

படத்தின் காப்புரிமை Twitter

சமூக ஊடகங்களில் இந்த காணொளி இரண்டு லட்சம் முறைக்கும் மேலாக பார்க்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Twitter

வைரலான இந்த காணொளியில், 2019ம் ஆண்டு மே மாதம் 22ம் தேதி எடுக்கப்பட்ட இந்த சிசிடிவி காணொளியில், குழு ஒன்று கடைக்காரர்களை அடிப்பதாக காட்டப்படுகிறது.

மே 23ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதால், இந்த வழக்கை மறைக்க மீரட் காவல்துறை முயன்றது என்று கூறி "Uttar Pradesh.org news" என்ற பெயரிலான ட்விட் இந்த காணொளியை பகிர்ந்துள்ளது.

படத்தின் காப்புரிமை UPNews

"OpIndia" என்ற செய்தித்தளமும் இந்த காணொளியின் அடிப்படையில் இதனை வெளியிட்டு மதவாத கோணத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.

"OpIndia" செய்தித்தளத்தில் வெளியான செய்தி

ஆனால், இந்த காணொளி கூறுவது தவறு என்பதை கண்டறிந்தோம்.

காணொளியின் உண்மை தன்மை

இந்த சம்பவம் பற்றி அறிந்துகொள்ள மீரட் காவல்துறை கண்காணிப்பாளர் நிதின் திவாரியிடம் பிபிசி பேசியது.

இந்த சண்டை வியாபாரம் தொடர்புடையது. இது மதம் சார்ந்த சண்டை அல்ல என்று திவாரி தெரிவித்தார்.

பின்னர், மீரட் கோட்வாலி காவல் நிலைய அதிகாரி தினேஷ் குமார் ஷூக்லாவிடம் பேசினோம்.

படத்தின் காப்புரிமை Twitter

அவர் எங்களிடம், "இந்த சம்பவம் இந்துக்கு எதிராக முஸ்லிம் என்ற தொடர்பே இல்லாதது. இந்த கடைகாரர்களை அடிக்கின்றனர்கள் பல ஆண்டுகளாக வியாபார தொடர்பு வைத்திருந்தவர்கள். எதிர்தரப்பு குறிப்பிட்ட பணத்தொகை வழங்க வேண்டியிருந்து" என்று தெரிவித்தார்.

இத்தகைய சம்பவங்களில் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று இந்த காணொளியில் தெரிவிக்கப்பட்டது.

ஷூக்லா மேலும் குறிப்பிடுகையில், "இந்த காணொளியின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்ட சமார் மற்றும் சகிப் இரண்டு பேர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்னும் குற்றஞ்சாட்டப்பட்ட பிற நான்கு பேர் பற்றி புலனாய்வு நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தை கண்காணிப்பு காணொளியில் படம்பிடிப்பதற்கு முன்னால், கடைக்காரர்கள் எதிர்தரப்பினரை அடித்திருந்தனர்" என்றார்.

பிற கருத்துகள் உண்மையா?

எமது வாட்ஸப் வாசகர்கள் இந்த காணொளியை எமக்கு அனுப்பி அதன் உண்மைதன்மைனயை சோதனை செய்ய சொன்னார்கள்.

படத்தின் காப்புரிமை Whatsapp grap
படத்தின் காப்புரிமை Image grab

இந்தக் காணொளி மத்தியப் பிரதேசத்தில் எடுக்கப்பட்டது. ஆனால், உத்தரப் பிரதேசத்தில் நடந்தது என்று கூறி மதவாத நோக்கத்துடன் பகிரப்பட்டு வருகிறது.

அதில் எழுதியுள்ள வாசகங்களில், "மத்திய பிரதேசத்திலுள்ள தேவாஸில், ரமலான் மாதத்தில் இந்து கடைக்காரர்களுக்கு எதிராக முஸ்லிம்களால் ஃபாத்வா வழங்கப்பட்டுள்ளது. நமாஸூக்கு பின்னர், திறந்து வைத்திருக்கும் கடைக்காரர்களை இலக்கு வைத்து முஸ்லிம்கள் தாக்குகிறார்கள்" தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், இந்த காணொளிக்கும், தேவாஸூக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இதுவொரு மத சண்டையும் அல்ல.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :