நரேந்திர மோதி அமைச்சரவை அறிவிப்பு: ராஜ்நாத்துக்கு பாதுகாப்புத்துறை, அமித் ஷாவுக்கு உள்துறை

நரேந்திர மோதி படத்தின் காப்புரிமை Getty Images

குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று பிரதமர் நரேந்திர மோதியோடு 58 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்ட நிலையில் ராஜ்நாத் சிங்கிற்கு பாதுகாப்புத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்முறையாக கேபினட் அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள அமித் ஷாவுக்கு உள்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

பொது மக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியம், அணுசக்தி, விண்வெளித்துறை ஆகியவை நரேந்திர மோதியின் வசம் இருக்கிறது.

நிர்மலா சீதாராமனுக்கு நிதித்துறையும், சுப்பிரமணியம் ஜெய்சங்கருக்கு வெளியுறவுத்துறை வழங்கப்பட்டுள்ளது.

யார் யாருக்கு எந்தெந்த துறை?- மோதியின் புதிய கேபினட்

 1. நரேந்திர மோதி - பிரதமர், பொது மக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியம், அணுசக்தி, விண்வெளித்துறை
 2. ராஜ்நாத் சிங் - பாதுகாப்பு துறை
 3. அமித் ஷா - உள்துறை
 4. நிர்மலா சீதாராமன் - நிதித்துறை
 5. ஜெய்சங்கர் - வெளியுறவுத்துறை
 6. ரவிசங்கர் பிரசாத் - சட்டம் மற்றும் நீதித்துறை
 7. நிதின் கட்கரி - நெடுஞ்சாலைத்துறை
 8. ஹர்ஷ் வர்தன் - சுகாதாரம் மற்றும் குடும்ப நலம்; அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
 9. சதானந்த கௌடா - ரசாயனம் மற்றும் உரத்துறை
 10. பிரகாஷ் ஜாவடேகர் - சுற்றுசூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம்
 11. ராம்விலாஸ் பஸ்வான் - நுகர்வோர் விவகாரம், உணவு பாதுகாப்புத்துறை
 12. ஹர்சிம்ரத் கௌர் பாதல் - உணவு பதப்படுத்துதல் தொழில்துறை
 13. நரேந்திர சிங் டோமர் - விவசாயம், ஊரக மேம்பாட்டுத்துறை
 14. ஸ்மிரிதி இரானி - பெண்கள் நலம் மற்றும் ஜவுளித்துறை
 15. பியுஷ் கோயல் - ரயில்வேத்துறை
 16. முக்தர் அப்பாஸ் நக்வி - சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை
 17. தர்மேந்திர பிரதான் - பெட்ரோலியத்துறை
 18. அர்ஜுன் முண்டா - பழங்குடியினர் நலத்துறை
 19. தாவர் சந்த் கெலோட் - சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை
 20. ரமேஷ் போக்ரியால் - மனிதவள மேம்பாட்டுத்துறைத்துறை
 21. பிரகாலத் ஜோஷி - நாடாளுமன்ற விவகாரத்துறை, நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை
 22. மகேந்திரநாத் பாண்டே - திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவுத் திறன்
 23. கிரிராஜ் சிங் - கால்நடை வளர்ப்பு, பால்வளம் மற்றும் மீன் வளம்
 24. கஜேந்திர சிங் செகாவத் - நீர் வளத்துறை
படத்தின் காப்புரிமை Pib india

இணை அமைச்சர்கள் (தனிப் பொறுப்பு)

 1. சந்தோஷ் குமார் கங்வார் - தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்ப்புத் துறை
 2. ராவ் இந்தர்ஜித் சிங் - புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை; திட்டத் துறை
 3. ஸ்ரீபத் எஸ்ஸோ நாயக் - ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், சித்தா மற்றும் ஹோமியோபதி (ஆயுஷ்); பாதுகாப்பு இணையமைச்சர்
 4. ஜிதேந்திர சிங் - பிரதமர் அலுவலகம், வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி; அணுசக்தி, விண்வெளி
 5. கிரன் ரிஜிஜு - விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை; சிறுபான்மையினர் விவகாரங்கள் இணையமைச்சர்
 6. பிரஹலாத் சிங் படேல் - சுற்றுலா மற்றும் கலாசார துறை
 7. ராஜ் குமார் சிங் - மின்துறை; புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை; திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவுத் திறன் இணையமைச்சர்
 8. ஹர்தீப் சிங் பூரி - வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள்துறை; விமனப் போக்குவரத்துத் துறை; வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணையமைச்சர்
 9. மன்சுக் மண்டாவியா - கப்பல் போக்குவரத்து; ரசாயனம் மற்றும் உரத்துறை

இணை அமைச்சர்கள்

 1. ஃபக்கன் சிங் குலஸ்தே - எஃகு அமைச்சகம்
 2. அஸ்வினி குமார் சௌபே - சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை
 3. அர்ஜுன் ராம் மேக்வால் - நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் கனரக தொழில் துறை
 4. வி.கே. சிங் - சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை
 5. கிருஷண் பால் - சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை
 6. தன்வே ரோசாஹெப் தாதாராவ் - நுகர்வோர் நலன், உணவு மற்றும் விநியோகம்
 7. கிஷன் ரெட்டி - உள்துறை
 8. பர்ஷோட்டம் ருபலா - விவசாயம் மற்றும் விவசாய நல துறை
 9. ராம்தாஸ் அத்வாலே - சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்
 10. சாத்வி நிரஞ்சன் ஜோதி - கிராமப்புற மேம்பாடு
 11. பாபுல் சுப்ரியோ - சுற்றுச்சூழல். வனம் மற்றும் பருவநிலை மாற்றம்
 12. சஞ்சீவ் குமார் பல்யான் - கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வள துறை
 13. சஞ்சய் ஷாம்ராவ் - மனிதவள மேம்பாடு, தொலைதொடர்பு துறை
 14. அனுராக் சிங் தாக்கூர் - நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை
 15. அங்கடி சுரேஷ் சன்னப்பசப்பா - ரயில்வேத்துறை
 16. நித்தியானந்த் ராய் - உள்துறை
 17. ரத்தன் லால் கடாரியா - நீர்வளம், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்
 18. வி. முரளீதரன் - வெளியுறவுத்துறை மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள்
 19. ரேனுகா சிங் சருடா - பழங்குடியினர் நல துறை
 20. சோம் பிரகாஷ் - வர்த்தகம் மற்றும் தொழிற்சாலை
 21. ரமேஷ்வர் டெலி - உணவு பதப்படுத்துதல் தொழிற்சாலை
 22. பிரதாப் சந்திரா சாரங்கி - கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வள துறை
 23. கைலாஷ் சௌத்ரி - விவசாயம் மற்றும் விவசாய நலத் துறை
 24. சுஷ்ரி தெபஸ்ரீ சௌத்ரி - பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்