"உத்தரப் பிரதேச அமைச்சர்கள் அலைபேசி பயன்படுத்த தடை" - முதல்வர் யோகி

யோகி படத்தின் காப்புரிமை Getty Images

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

இந்து தமிழ்: "உத்தரப் பிரதேச அமைச்சர்கள் அலைபேசி பயன்படுத்த முதல்வர் யோகி தடை"

​உத்தரப் பிரதேச அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்கள் முக்கிய விவாதங்களில் பங்கேற்காமல் '​வாட்சாப்' தகவல்களை பார்ப்பதை தவிர்க்கும் பொருட்டு அலைபேசிக்கு தடை விதித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ள​தாக இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.

"​அலைபேசிகளை கொண்டு வரும் சில அமைச்சர்கள் ​வாட்சாப் செய்திகளை பார்ப்பதால் கூட்டத்தில் கவனம் இருப்பதில்லை. கூட்டத்தின் நோக்கமும் பாழாகிறது. இதுமட்டுமின்றி கூட்டத்தின் நிகழ்வுகள் ​அவற்றின் மூலம் வெளியே வரும் ஆபத்தும் உள்ளது.

எனவே அமைச்சரவைக் கூட்டத்துக்கு வரும் அமைச்சர்கள் தங்கள் ​அலைபேசிகளை வெளியே இதற்கென வைக்கப்பட்டுள்ள கவுன்டர்களில் பாதுகாப்பாக கொடுத்து வைத்து விட்டு தான் வரவேண்டும். ​அலைபேசியுடன் வருபவர்களுக்கு கூட்டத்தில் அனுமதியில்லை​" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினத்தந்தி: "கடைகள் 24 மணிநேரமும் திறக்க அனுமதி சட்டம்"

படத்தின் காப்புரிமை ARUN SANKAR

அனைத்து சினிமா தியேட்டர்கள், ஓட்டல்கள், கடைகள், வங்கிகள் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் வாரத்துக்கு 7 நாட்களிலும் 24 மணிநேரமும் திறந்து வைக்க அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த மசோதாவை ஒவ்வொரு மாநிலமும் அப்படியே பின்பற்றலாம் அல்லது அந்தந்த மாநிலத்தின் நடைமுறை தேவைகளின்படி மாற்றிக்கொண்டு அமல்படுத்தலாம் என்று வழிவகை செய்யப்பட்டது.

இந்தியாவில் அந்த மசோதாவை அமல்படுத்திய மாநிலம் மராட்டிய மாநிலமாகும். 2018-ம் ஆண்டு முதல் அங்கு கடைகள், ஓட்டல்கள், உணவு விடுதிகள் ஆகியவை 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதிக்கப்படுகின்றன.

இந்த நிலையில் தமிழக அரசுக்கு தொழிலாளர் ஆணையர் கடிதம் ஒன்றை எழுதினார். அதில், பெண் பணியாளர் பாதுகாப்பு உள்ளிட்ட சில நிபந்தனைகளுடன் ஆண்டு முழுவதும் 24 மணிநேரமும் கடைகள் மற்றும் நிறுவனங்களை திறந்து வைப்பதற்கான அனுமதியை அரசு வழங்கலாம் என்று அந்தக் கடிதத்தில் கோரியிருந்தார். அந்தக் கடிதத்தை அரசு ஏற்றுக்கொண்டது. அதற்கான வரைவு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது" என்று அந்த செய்தியில் மேலும் விவரிக்கப்பட்டுள்ளது.

தினமணி: "ஆடை கட்டுப்பாடு"

நல்லொழுக்கம் பாதிக்காத வகையில் அரசு அலுவலர்கள் நேர்த்தியான, சுத்தமான ஆடைகளை அணிந்து வரவேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

"இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், அரசு ஊழியர்கள் வேஷ்டி, சேலை உள்ளிட்ட பாரம்பரிய உடைகள் அணிவதற்கு எந்த ஒரு தடையும் கிடையாது. தமிழ் கலாசாரம் மற்றும் இந்திய பாரம்பரிய உடைகளான வேஷ்டி, சேலை போன்ற நேர்த்தியான, சுத்தமான ஆடைகளாகவும், அலுவலகத்தின் நன்மதிப்பை பராமரிக்கும் வகையிலான ஆடைகளை அணிந்து வரலாம்.

டி-சர்ட், ஜீன்ஸ் போன்ற சாதாரண உடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும்.

பெண் ஊழியர்கள் சேலை, சல்வார் கமீஸ், துப்பட்டாவுடன் சுடிதார் அணிந்து வரலாம் என்றும், கூடுமான வகையில், அடர்வண்ணங்களை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது​" என்று அந்த செய்தி மேலும் விவரிக்கிறது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :