திருப்பூர் மாணவி ரித்துஸ்ரீ தற்கொலை: நீட் தேர்வே காரணம் என பெற்றோர் குற்றச்சாட்டு

ரித்து ஸ்ரீ

திருப்பூரில் நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததால் ரித்துஸ்ரீ என்ற மாணவி இன்று (புதன்கிழமை) தற்கொலை செய்து கொண்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியினை சேர்ந்த செல்வராஜ், பின்னலாடை நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

செல்வராஜ் - ராஜலட்சுமி தம்பதியரின் மகள் ரித்துஶ்ரீ, ஜெய்வாபாய் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் படித்தவர்.

கடந்த மாதம் 5ம் தேதி நடந்த மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு (நீட்) முடிவுகள் இன்று வெளியாகின.

நீட் தேர்வு முடிவுகள்

ரித்துஸ்ரீயின் தற்கொலை குறித்து வழக்குப் பதிவு செய்த திருப்பூர் தெற்கு காவல் நிலையம், ரித்துஸ்ரீயின் உடலை உடற் கூறாய்வு சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளது

பிபிசி தமிழிடம் பேசிய காவல்துறையினர், இப்பொழுது தற்கொலை என்றுதான் வழக்குப் பதிவு செய்துள்ளோம், விசாரணைக்கு பின்புதான் நீட் தேர்வின் காரணமாகத்தான் இந்த சம்பவம் நிகழ்ந்ததா என்பதனை உறுதி படுத்த இயலும் என்கின்றனர்.

இது தொடர்பாக ரித்துஸ்ரீயின் பெற்றோர் கூறுகையில், "நீட் தேர்வு முடிவுகள் வெளிவரும் வரை சிரித்து விளையாடிக்கொண்டுதான் இருந்தார். மருத்துவராக வேண்டுமென்பதே அவரது ஆசை, நீட் தேர்வு முடிவுகளுக்காக காத்துக் கொண்டு இருந்தார். தேர்வு முடிவினை பார்த்துவிட்டுத்தான் தற்கொலை செய்து கொண்டுள்ளார், வேறு எந்த காரணங்களுக்கும் வாய்ப்பில்லை" என்று ஊடகங்களிடம் பேசும்பொழுது கூறியுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்